/indian-express-tamil/media/media_files/2025/03/01/aFsQf2CEF5Lw8CoN00Y1.jpg)
பல மொழிகள் பேசுவதில் சிறப்பாக செயல்படும் மாநிலமாக கோவா இருக்கிறது. அதன் மக்கள் தொகையில் 77.21% இரண்டு மொழியும் மற்றும் 50.82% மூன்று மொழியும் பேசுகிரறார்கள்.
1968 ஆம் ஆண்டில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை (NEP) மும்மொழிக்கொள்கையை அறிமுகப்படுத்தியது. இந்தி-ஆங்கிலத்தை மையமாகக் கொண்ட கொள்கையானது, இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு தென்மாநில மொழியையும், இந்தி பேசாத மாநிலங்களில் ஒரு பிராந்திய மொழியையும் மூன்றாம் மொழியாகக் கற்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Amid three-language war, data shows only one-fourth Indians are multilingual
அப்போதிருந்து, மும்மொழிக் கொள்கை என்பது கடுமையான சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. 1968 ஆம் ஆண்டில், தமிழ்நாடு இந்தக் கொள்கையை எதிர்த்தது மற்றும் அதன் சொந்த இரு மொழிக்கொள்கையை க் கடைப்பிடித்தது.
தற்போது, தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, பா.ஜ.க ஆளும் மத்திய அரசுடன் அதன் தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக மோதலில் உள்ளது. இது மற்ற மொழிகளை தேர்வு செய்வதில் குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து, மும்மொழிக்கொள்கை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வரை மற்றும் அதன் மும்மொழிக்கொள்கை ஏற்கும் வரை நிதி வழங்கப்பட மாட்டாது என்று சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து, தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு இடையே மோதல் வெடித்துள்ளது.
இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மும்மொழிக்கொள்கை சட்டத்தை கட்டாயமாக்கியது எந்த அரசியலமைப்புச் சட்டம் என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழர்கள் இதுபோன்ற "பிளாக் மெயிலை" ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார். மத்திய அரசின் இந்த திட்டம் வெறும் "இந்தி திணிப்பு" என்ற போர்வையில் இருப்பதாக தி.மு.க குற்றம் சாட்டியது.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான தெலுங்கானா அரசாங்கத்தின் அழுத்தத்தில், கடந்த செவ்வாயன்று அனைத்து பள்ளி வாரியங்களிலும் தெலுங்கு கட்டாய மொழியாக்கப்பட்டது. எவ்வாறாயினும், எந்த ஒரு குறிப்பிட்ட மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.
1968 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், மும்மொழிக்கொள்கை கொண்டு வரப்பட்டதின் நோக்கம் பல மொழிகளில் பேசுவதாகும். இருப்பினும், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவு, இந்தியாவில் மொழிப் பன்முகத்தன்மை இருந்தபோதிலும், பாதிக்கும் மேற்பட்ட மாநில மக்கள் அதாவது வெறும் எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டு மொழிகளுக்கு மேல் பேசுகின்றனர் எனத் தெரிவிக்கிறது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய அளவில், 26.02% மக்கள் இருமொழி மற்றும் 7.1% மும்மொழி பேசுகின்றனர். 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருமொழி பேசும் மக்கள்தொகை 24.79% ஆக இருந்த நிலையில், மும்மொழி பேசுபவர்களின் பங்கு 8.51% இலிருந்து குறைந்தது.
2001 மற்றும் 2011 க்கு இடையில், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருமொழிகள் வீழ்ச்சியடைந்தன. அதே சமயம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மும்மொழி வீழ்ச்சியடைந்தது.
தமிழ்நாடு, அதன் இரு மொழிக் கொள்கையை கடைபிடித்த போதிலும், 28.3% என்ற இருமொழி பேசும் மக்கள் தொகையில் அதன் பங்கிற்கு 2011 இல் 15 வது இடத்தைப் பிடித்தது. மேலும், மூன்று மொழி பேசும் மக்கள்தொகை 3.39 என்கிற சதவீதம் தமிழகத்தை எட்டாவது இடத்தில் வைத்தது.
இருப்பினும், இருமொழியில் குறைந்த தரவரிசையில் உள்ள ஐந்து மாநிலங்கள் ராஜஸ்தான் (10.9%), உத்தரப் பிரதேசம் (11.45%), பீகார் (12.82%), சத்தீஸ்கர் (13.25%), மற்றும் மத்தியப் பிரதேசம் (13.51%). இந்தி இதயப் பகுதி எனக் குறிப்பிடப்படும் இந்த மாநிலங்கள், மும்மொழி என வரும் போது ஐந்து இடங்களுக்குள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் 2% -க்கும் குறைவாக உள்ளன.
பல மொழிகள் பேசுவதில் சிறப்பாக செயல்படும் மாநிலமாக கோவா இருக்கிறது. அதன் மக்கள் தொகையில் 77.21% இரண்டு மொழியும் மற்றும் 50.82% மூன்று மொழியும் பேசுகிரறார்கள். அதன்படி, மூன்று மொழி பேசுவதில் 50% அதிகமாக உள்ள ஒரே மாநிலம் கோவா ஆகும். அதைத் தொடர்ந்து சண்டிகர் 30.51% மற்றும் அருணாச்சல பிரதேசம் 30.25% மாநிலங்கள் உள்ளன.
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (67.64%), அருணாச்சலப் பிரதேசம் (64.03%), சிக்கிம் (63.71%), நாகாலாந்து (62.15%), சண்டிகர் (54.95%), மணிப்பூர் (54.02%), மற்றும் மகாராஷ்டிரா (51.1%) ஆகிய இருமொழிகள் அதிகம் உள்ள மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகும்.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு இருமொழிகளுக்கான 10 பொதுவான மொழி சேர்க்கைகளில் எட்டு இந்தி அடங்கும் என்பதைக் காட்டுகிறது. 3.47 கோடி பேசுபவர்களுடன், மராத்தி-இந்தி மிகவும் பொதுவான இருமொழி கலவையாகும். இந்தி-ஆங்கிலம் 3.2 கோடி, குஜராத்தி-இந்தி 2.17 கோடி, உருது-இந்தி 1.86 கோடி, மற்றும் பஞ்சாபி-இந்தி 1.55 கோடி உள்ளது. மேலும், தமிழ்-ஆங்கிலம் 1.23 கோடியும், தெலுங்கு-ஆங்கிலம் 80.75 லட்சமும் ஆகிய இரண்டு சேர்க்கைகள் மட்டுமே இந்தி பேசும் முதல் 10 இடங்களில் இல்லை.
2001 இல், இந்தி-ஆங்கிலம் 3.24 கோடி, மராத்தி-இந்தி 2.59 கோடி, குஜராத்தி-இந்தி 1.49 கோடி, உருது-இந்தி 1.31 கோடி, மற்றும் பஞ்சாபி-இந்தி 1.22 கோடி என இருமொழிக் கலவையாக இருந்தது. அந்த ஆண்டு, பெங்காலி-ஆங்கிலம் 92.42 லட்சத்தில் இந்தி இல்லாத இருமொழிக் கலவையாகும். உண்மையில், இருமொழிகளுக்கான பொதுவான 10 சேர்க்கைகளில் ஐந்து 2001 இல் இந்தியைக் கொண்டிருக்கவில்லை.
2011 ஆம் ஆண்டில், மும்மொழிகளில், மராத்தி-இந்தி-ஆங்கிலம் 1.01 கோடி, பஞ்சாபி-இந்தி-ஆங்கிலம் 77.99 லட்சம், குஜராத்தி-இந்தி-ஆங்கிலம் 66.32 லட்சம், தெலுங்கு-ஆங்கிலம்-இந்தி 66.32 லட்சம், மலையாளம்-ஆங்கிலம்-இந்தி 25.04 லட்சம், 25.04 ஆங்கிலம் லட்சம் என மிகவும் பொதுவான 10 மும்மொழி சேர்க்கைகளில் ஒவ்வொன்றும் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 64.79 லட்சம் இந்தி சேர்க்கப்படாத மும்மொழிக் கலவையானது காஷ்மீரி-உருது-ஆங்கிலம் ஆகும். அதே சமயம் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் தவிர்த்து மிகவும் பொதுவான கலவையானது தெலுங்கு-கன்னடம்-தமிழ் 1.6 லட்சம் ஆகும்.
2001 ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டின் மிகவும் பொதுவான மும்மொழிக் கலவைகள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றன. மராத்தி-இந்தி-ஆங்கிலம் 84.91 லட்சம் அதிகம் பேசப்படும் கலவையாகும், அதைத் தொடர்ந்து பஞ்சாபி-ஹிந்தி-ஆங்கிலம் 65.92 லட்சம், குஜராத்தி-இந்தி-ஆங்கிலம் 48.43 லட்சம் மலையாளம்-ஆங்கிலம்- இந்தி 39.16 லட்சம், தெலுங்கு-ஆங்கிலம்-இந்தி 39.04 லட்சம் என இருந்தது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 43.63% இந்தியர்கள் இந்தி மொழியைத் தங்கள் தாய்மொழி என்று கூறுகின்றனர். இது தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1% க்கும் குறைவான மக்களால் பேசப்படுகிறது. மேலும் ஏழு மாநிலங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உட்பட யூனியன் பிரதேசங்களில் 5% -க்கும் குறைவான மக்கள் தான் இந்தி பேசுகிறார்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெலுங்கானாவை உள்ளடக்கிய ஆந்திரா, தென் மாநிலங்களில் இந்தி பேசுபவர்களின் விகிதத்தில் 3.69% என அதிகமாக இருந்தது.
உ.பி-யில் உருது மொழிக்கு எதிர்ப்பு
உத்தரபிரதேச மாநில சட்டசபை நடவடிக்கைகளை மொழிபெயர்ப்பதற்காக ஆங்கிலத்தை சேர்த்தற்கும், உருது மொழியை நீக்கியதற்கும் எதிராக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி சமீபத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. சபை நடவடிக்கைகளை மொழிபெயர்ப்பு செய்ய நான்கு பிராந்திய மொழிகளான அவதி, போஜ்புரி, ப்ராஜ் மற்றும் புந்தேலி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், சமஸ்கிருதத்தையும் சேர்க்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியது.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர்கள் "ஆங்கிலத் திணிப்புக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடியிருக்கிறார்கள்" என்று வாதிடுகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அக்கட்சியை சாடினார். அதன் தலைவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள், ஆனால் மற்றவர்களின் குழந்தைகள் உருது கற்று இஸ்லாமிய மதகுருக்கள் "மவுல்விகள்" ஆக விரும்புகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உ.பி-யில் 18.8 கோடி அல்லது 94% மக்கள் தங்கள் தாய்மொழி என அழைக்கும் இந்தி மொழியே அதிகம் பேசப்படும் மொழியாக உள்ளது. உருது 1.08 கோடி அல்லது 5.42% அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகும். நாடு முழுவதும், உ.பி., உருது பேசுபவர்களின் ஆறாவது அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது கர்நாடகாவில் 10.83% பேர் உருது பேசுகிறார்கள். இதற்கு மாறாக, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி உ.பி.யில் வெறும் 13,085 பேரால் ஆங்கிலம் அவர்களின் தாய்மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
உ.பி. சட்டசபையில் மொழிபெயர்ப்பதற்காக சேர்க்கப்பட்ட நான்கு பிராந்திய மொழிகளும் இந்தியின் பேச்சுவழக்குகளைக் கொண்டுள்ளது. உ.பி.யில் உள்ள போஜ்புரி, அவதி, ப்ராஜ் மற்றும் புந்தேலி மொழி பேசுபவர்கள் முறையே 2.18 கோடி, 38.02 லட்சம், 7.14 லட்சம் மற்றும் 13.04 லட்சம் ஆகும். உ.பி.யில் வெறும் 3,062 பேர் சமஸ்கிருதத்தை தங்கள் தாய் மொழியாக அறிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.