Advertisment

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் லேப்டாப் திருட்டு: ஒரு மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட அஸ்ஸாம் மாநில இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Laptop thief arrested in Puducherry

புதுச்சேரியில் லேப்டாப் திருடியவர் கைதுசெய்யப்பட்டார்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இன்று சென்னை செல்லும் பஸ்ஸிற்காக காத்திருந்த கார்த்திகேயன் (27) என்பவரின் ACER LAPTOP-1, OPPO MOBILE-1 மற்றும் சில துணிமணிகள் அடங்கிய பையினை அருகில் இருந்த பொன்னுக்காளை என்பவரிடம் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் அந்தப் பையை காணவில்லை. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.பாபுஜி மற்றும் உதவி-ஆய்வாளர் ஆர்.சந்திரசேகரன் ஆகியோர்களின் மேற்பார்வையில் ஏட்டு வெங்கடேசன் மற்றும் குற்ற பிரிவு காவலர்கள் செல்லதுரை, மணிகண்டன் ஆகியோர் மேற்படி கார்த்திகேயனின் செல் போன் நெம்பருக்கு CDR மற்றும் Tower location பார்த்து மேற்படி பையை திருடிச் சென்றவரின் இருப்பிடத்தை ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, அவர் திருடிச்சென்ற ACER LAPTOP-1, OPPO MOBILE-1 மற்றும் துணிமணிகள் அடங்கிய பையினை மீட்டனர்.
விசாரணையில் திருடிச் சென்றவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜுசெத்ரி (28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைதுசெய்தனர்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment