மறைமலை நகரில் செயல்பட்டு வரும் ஃபோர்ட் கார் உற்பத்தி நிறுவனத்தின் கடைசி காரை விற்பனைக்கு கொண்டுவந்த ஊழியர்கள் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்த நிகழ்வு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இந்தியாவில், அகமதாபாத் சென்னை ஆகிய 2 இடங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை வரும் ஜூலை 31-ந் தேதி முதல் மூடப்பட உள்ளது.
கடந்த 26 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்நிறுவனம் நிதி நெருக்கடி, தொழில் நஷ்டம் உள்ளிட்ட சில காரணங்களால் மூடப்பட உள்ளது. இதன் மூலம் மறைமலை நகரில் செயல்பட்டு வந்த ஃபோர்ட் நிறுவனத்தின் உற்பத்தி பயணம் முடிவுக்கு வரவுள்ளது. இதனிடையே இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கடைசி காரான எகோ ஸ்போர்ட் எஸ்யுவி காரை ஊழியர்கள் அனைவரும் அலங்காரம் செய்து கண்ணீருடன் விற்பனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியாவில் ஃபோர்ட் நிறுவனம் ஆண்டுக்கு 4,44,000 கார்கள் உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது இந்நிறுவனம் மூடப்பட உள்ளது பலரையும் சோகத்தில ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“