தமிழ்நாடு மருத்துவ மன்றம் அமைப்பது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக புதிய சட்டம் உருவாக்குவது உள்ளிட்ட 14 சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
எதிர்பாரா செலவுநிதிய சட்டம், நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமை சட்டம், ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான 3 சட்டத் திருத்த மசோதாக்களை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார்.
சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து அதிகார அமைப்பு சட்டத் திருத்த மசோதாவை வீட்டு வசதி துறை அமைச்சர் பெரியசாமியும், தமிழ்நாடு மருத்துவ பதிவு சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு மாநில மருத்துவ மன்றத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை சுகாதாரத் துறை அமைச்சர் அறிமுகம் செய்தார்.
தொழில் உரிமம் தொடர்பான ஊராட்சிகள் சட்டத் திருத்த மசோதாவை ஐ. பெரியசாமியும், திருச்சி, கடலூர் தேனிசந்தைக் குழுக்களின் தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பாக வேளாண்விளை பொருள் சந்தைப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிமுகம் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“