New Update
Latest Tamil News : பா.ஜ. தமிழகத்தில் ஊடுருவ முயற்சி : வைகோ
Latest Tamil News தென்னிந்தியாவில் கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் தோல்வியையே தழுவியுள்ளது பாஜக.
Advertisment
Highlights
டில்லியில் தமிழக காங். தலைவர் கே.எஸ். .அழகிரி பேட்டி :
பிரதமர் மோடிக்கு தமிழகம் மீது அக்கறை இருந்தால் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம்
கமல், சீமான் வெற்றி பெறுவதற்கான இலக்கை அடையவில்லை
வலதுசாரிக்கான வாய்ப்பின் காரணமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது, அந்த சிந்தனை தென்னிந்தியாவில் இல்லை
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்திருப்பது, பாஜக தமிழகத்தில் ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி - வைகோ
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது போன்று, வடமாநிலங்களிலும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திந்திருந்தால், தோல்வியை தவிர்த்திருக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அரசிதழில் வெளியீடு
மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கி, கற்பித்தல் பணியை துவங்க வேண்டியிருப்பதால், அனைத்து வகை பள்ளிகளையும் ஜூன் 3-ல் திறக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு
காங்கிரஸில் தேவையான மாற்றங்களை செய்ய தலைவர் ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் உள்ளது - காங்கிரஸ்.
காங். காரிய கமிட்டி கூட்டம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவது துரதிருஷ்டவசமானது - காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ். இன்று முதல் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிப்பு.
பிரதமராக நரேந்திர மோடி, வரும் 30ம் தேதி, இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்க, மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், மோடி பதவியேற்பில் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தான் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில், மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி. காசி விஸ்வநாதன் கோயிலில் வழிபாடு நடத்தவும் பிரதமர் மோடி திட்டம்
டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
பெட்ரோல் விலை 11 காசுகள் அதிகரித்து ரூ 74.50க்கும், டீசல் விலையில் மாற்றம் ஏதுமின்றி ரூ 70.45க்கும் விற்பனை..
டெல்லியில் மே 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கின்றனர்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் இன்று தலைமைச்செயலகம் செல்கிறார். பிற்பகல் 12.30 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்படுகிறார். அதன் பிறகு பிற்பகல் 2 மணிக்கு பிறகு குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம். இதனால் இணையவழி பயணச்சீட்டுகள், விமான நிலைய பரிசோதனை உள்ளிட்ட செயல்பாடுகளும் முடங்கின.
”இந்தியாவுக்கு முன்னாள் பிரதமர் நேருவின் பங்களிப்பு நினைவு கூறத்தக்கது” என நேருவின் நினைவு நாளில் ட்வீட் செய்திருக்கிறார் மோடி.
சென்னையில் இருசக்கர வாகனத்தை வழிமறித்து போலீஸ் விசாரணை செய்த போது அதிலிருந்து தப்பித்துச் சென்ற வாகனத்தில் இருந்த பணப்பை கீழே விழுந்தது. அப்போது ரூ.1.5 கோடி பணப்பையை கைப்பற்றிய போலீஸ், இருசக்கர வாகனத்தில் சென்றவர் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர்..
நேரு நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி
பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரெண்டிஸ் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியானது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவி செய்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என முன்பு கூறப்பட்டது. ஆனால் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வேயில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்திருப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்ட மன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களை வென்றது. இதைத் தொடர்ந்து இவர்கள் 13 பேரையும் நாளை (மே 28) பதவியேற்க அவைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். எனவே நாளை தலைமைச் செயலகத்தில் அவைத் தலைவரின் அறையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக எம்.எல்.ஏ-க்கள் 13 பேரும் பதவியேற்கிறார்கள்.