/tamil-ie/media/media_files/uploads/2019/03/a880.jpg)
Latest Tamil News Live: வரும் 19-ம் தேதி சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்குமான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைப்பெறவிருக்கிறது.
இதையொட்டி திமுக - அதிமுக கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தவிர, இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது.
அக்ஷய திரிதியை தினமான இன்று நகைக்கடைகளுக்கு குவிகிறார்கள் மக்கள்.
Live Blog
Latest Tamil News: Important news of Tamilnadu
தமிழகத்தில் இன்றைய முக்கியச் செய்திகள்!
கழக தலைவர் @mkstalin அவர்கள், அரவகுறிச்சி தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் @SenthilbalajiV அவர்களை ஆதரித்து பள்ளப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபயணமாக சென்று வாக்குகள் சேகரித்தார்.#DMK4TNpic.twitter.com/xJVfkA5vtT
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) May 7, 2019
இன்று அட்சய திரிதியை நாள் என்பதால் பெரும்பாலான நகைக்கடைகள் காலை 6 மணி முதலே இயங்கி வருகிறது. நகை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களும், திடீரென நகை வாங்க திட்டம் தீட்டியவர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நகைக்கடைகளுக்கு படையெடுக்கிறார்கள்.
பெரும்பாலான கடைகளில் குறைந்தபட்சம் 50 ரூ கிராமுக்கு தள்ளுபடி தருகிறார்கள். அதோடு செய்கூலி சேதாரத்திலும் தள்ளுபடி உண்டு.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை ரம்ஜான். இதற்காக ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் அவர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். இந்த வருடத்தின் ரம்ஜான் நோன்பு இன்று முதன் துவங்குகிறது.
மாலையில் நோன்பு திறக்கப்படும். இதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நோன்பு முடியும் 30-ம் நாளை ரம்ஜான் பண்டிகையாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில், சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us
Highlights