Advertisment

Latest Tamil News Live: செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!

Latest Tamil News: அக்‌ஷய திரிதியை தினமான இன்று நகைக்கடைகளுக்கு குவிகிறார்கள் மக்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu latest news live, mk stalin

Latest Tamil News Live: வரும் 19-ம் தேதி சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்குமான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைப்பெறவிருக்கிறது.

Advertisment

இதையொட்டி திமுக - அதிமுக கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

தவிர, இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது.

அக்‌ஷய திரிதியை தினமான இன்று நகைக்கடைகளுக்கு குவிகிறார்கள் மக்கள்.

Live Blog

Latest Tamil News: Important news of Tamilnadu

தமிழகத்தில் இன்றைய முக்கியச் செய்திகள்!



























Highlights

    15:26 (IST)07 May 2019

    ஜாக்டோ ஜியோ

    ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 1500 ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை தமிழக அரசு வரும் 25ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் - ஜாக்டோ ஜியோ

    14:31 (IST)07 May 2019

    குழந்தைகளை விற்ற விவகாரம்

    குழந்தைகளை விற்ற விவகாரத்தில் கைதான செவிலி அமுதாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி!

    13:18 (IST)07 May 2019

    செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

    11:53 (IST)07 May 2019

    10:42 (IST)07 May 2019

    Today News Live: அனல் பறக்கும் அட்சய திரிதியை!

    இன்று அட்சய திரிதியை நாள் என்பதால் பெரும்பாலான நகைக்கடைகள் காலை 6 மணி முதலே இயங்கி வருகிறது. நகை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களும், திடீரென நகை வாங்க திட்டம் தீட்டியவர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நகைக்கடைகளுக்கு படையெடுக்கிறார்கள். 

    பெரும்பாலான கடைகளில் குறைந்தபட்சம் 50 ரூ கிராமுக்கு தள்ளுபடி தருகிறார்கள். அதோடு செய்கூலி சேதாரத்திலும் தள்ளுபடி உண்டு. 

    10:28 (IST)07 May 2019

    Latest Tamil News: ரம்ஜான் நோன்பு துவக்கம்!

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை ரம்ஜான். இதற்காக ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் அவர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். இந்த வருடத்தின் ரம்ஜான் நோன்பு இன்று முதன் துவங்குகிறது.

    மாலையில் நோன்பு திறக்கப்படும். இதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நோன்பு முடியும் 30-ம் நாளை ரம்ஜான் பண்டிகையாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில், சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    Latest Tamil News: அரசியல், அரசியல் தலைவர்களின் பேட்டிகள், தேர்தல் பிரச்சாரம், ரம்ஜான், அக்‌ஷய திரிதியை உள்ளிட்ட தமிழக செய்திகள் அனைத்தும் ஐ.இ தமிழின் லைவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
    Dmk Aiadmk Tamil News
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment