Latest Tamil News Live: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவு

Latest Tamil News Live: இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Madurai Rajaji Hospital

Latest Tamil News Live: தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் ஆணையம் பற்றிய செய்திகள், வழக்கு விசாரணைகள், பொதுப் பிரச்னைகள், காலநிலை, தங்கம் வெள்ளி விலை, பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட அனைத்தையும் ஐ.இ தமிழில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Latest Tamil News Live Updates

குறிப்பாக வரும் 19-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் நடக்கும் இந்தத் தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Live Blog

Latest Tamil News Live: To know latest Tamil nadu news Updates

இன்றைய தமிழக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

15:48 (IST)09 May 2019
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்தடை காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

15:36 (IST)09 May 2019
தேர்வெழுதாத 11-ம் வகுப்பு மாணவர்கள்

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 16 ஆயிரம் மாணவர்கள் எழுத வரவில்லை என அதிர்ச்சி தகவல் - விசாரணை நடத்தப்படும் என தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு.

14:08 (IST)09 May 2019
கே.எஸ்.அழகிரி

7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

12:53 (IST)09 May 2019
கமல் பிரச்சாரம் செய்ய தடை கோரி மனு

சூலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பிரசாரம் செய்ய தடை கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு. தேர்தல் பரப்புரைக்கு சென்ற பாலமுருகன் உயிரிழந்ததற்கு கமல் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை, தொண்டர்களையே கண்டு கொள்ளாத கமல் மக்கள் பிரச்சனைகளை எப்படி போக்குவார் என பால முருகனின் மனைவி கேள்வி 

12:13 (IST)09 May 2019
தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதியளித்து  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

11:36 (IST)09 May 2019
7 பேருக்கு எதிரான மனு தள்ளுபடி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் ஆகியோரும், குண்டுவெடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரும் இணைந்து இந்த வழக்கினை தொடுத்திருந்தார்கள். 

10:46 (IST)09 May 2019

மறுவாக்குப்பதிவு பற்றிய விபரங்கள்

10:45 (IST)09 May 2019

மறுவாக்குப்பதிவு பற்றிய விபரங்கள்:

10:43 (IST)09 May 2019
மறு வாக்குப்பதிவு

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

09:38 (IST)09 May 2019
பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்து லிட்டர் ரூ 75.63-க்கும், டீசல் 7 காசுகள் குறைந்து ரூ 70.36-க்கும் விற்பனையாகின்றது. 

09:05 (IST)09 May 2019
ஸ்டாலின் ஆட்சியமைப்பார் - திருநாவுக்கரசர்

ஓட்டபிடாரம் தொகுதிக்குட்பட்ட வசப்பபுரத்தில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், ”22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி அடைந்து, பொதுத்தேர்தல் இல்லாமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்" என்று தெரிவித்தார். மேலும் மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வரும் மக்களுக்கு எதிரான ஆட்சி அகற்றபட வேண்டும் எனவும் திருநாவுகரசர் தெரிவித்தார்.

Latest Tamil News Live: தமிழக அரசியல், பொதுப் பிரச்னைகள், வழக்கு விசாரணைகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், வெதர் அப்டேட் உள்ளிட்ட இன்றைய தமிழக செய்திகளை ஐ.இ தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Web Title:

Latest tamil news headlines live

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close