Latest Tamilnadu News Live: இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவு தனித்துவமானது – பிரதமர் மோடி

Chennai News Updates: தமிழக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

modi, maldives, மோடி, மாலத்தீவு

News in Tamil : இன்று கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் வெப்பம் படிப்படியாகக் குறைந்து, பின்னர் தமிழகம் முழுவதும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுவதால், தென்மேற்கு பருவ மழையை மலை போல நம்பியிருக்கிறார்கள் மக்கள். வரும் மழையை சேகரிக்க அரசு ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, வருங்காலத்தில் இது போன்ற தண்ணீர் பஞ்சத்தை தடுக்க முடியும்.

இது போன்ற மற்ற தமிழக செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Live Blog

Tamilnadu Latest News Live Updates

தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்


20:51 (IST)08 Jun 2019

இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவு தனித்துவமானது

இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவு தனித்துவமானது என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறைப்பயணமா மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கைெயழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை, அந்நாட்டு அதிபருக்கு மோடி பரிசளித்தார்.

19:18 (IST)08 Jun 2019

சசிகலாவிற்கு எப்போதும் அதிமுகவில் இடம் கிடையாது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சசிகலா, சிறைவாசம் முடிந்துவந்தால், வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். சசிகலாவிற்கும், தினகரனுக்கும் அதிமுகவில் எப்போதும் அதிமுகவில் இடம் இல்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

18:35 (IST)08 Jun 2019

மோடிக்கு மாலத்தீவு கவுரவம்

அரசுமுறைப்பயணமாக மாலத்தீவு சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, மாலத்தீவு அரசு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவித்துள்ளது. நிசான் இசுதீன் எனும் உயரிய விருதை, அதிபர் இப்ராகிம், மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

17:42 (IST)08 Jun 2019

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

கர்நாடக மாநிலம் உடுப்பியில், மழை பெய்ய வேண்டி தவளைகளுக்கு ஆடை உடுத்தி தாலி கட்டி திருமணம் நடத்தப்பட்டது. 

16:59 (IST)08 Jun 2019

அரசியலுக்கு அப்பாற்பட்டது நடிகர் சங்கம் : விஷால்

அர்சியலுக்கு அப்பாற்பட்டது நடிகர் சங்கம் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

நடிகர் சங்க தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலிற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த விஷால் கூறியதாவது. அரசியலுக்கு அப்பாற்பட்டது நடிகர் சங்கம்.  இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்.  கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. நடிகர்களின் பென்சன் உயர்த்தி வழங்கப்படும் என விஷால் கூறினார்.

16:27 (IST)08 Jun 2019

விராத் கோஹ்லிக்கு அபராதம்

காரை சுத்தம் செய்வதற்காக குடிநீரை வீணடித்ததற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  கோஹ்லியின் வீட்டு பணியாளர்கள் வீட்டிற்கு வெளியே குடிநீர் குழாயில் வந்த நீரை பயன்படுத்தி காரை சுத்தம் செய்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குர்கான் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்ததை அடுத்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தண்ணீரை வீணடிப்பவர்கள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது.

16:07 (IST)08 Jun 2019

நடிகர் சங்க தேர்தல் – விஷால் வேட்புமனு தாக்கல்

நடிகர் சங்க தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், நாசர், விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான அணியும் களம் காண்கின்றன.

விஷால் உட்பட 21 பேர் இன்று வேட்புமனு செய்தனர்.  தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜூம், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷூம் போட்டியிடுகின்றனர்.

15:26 (IST)08 Jun 2019

திமுக மாணவர் அணி போராட்டம் அறிவிப்பு

நீட் தேர்வு, அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிப்பின்மை உள்ளிட்ட விவகாரத்தில் மாணவர்களை வஞ்சித்து வரும் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அணி தெரிவித்துள்ளது.

14:52 (IST)08 Jun 2019

ஜனாதிபதி மாளிகையில் 13ம் தேதி மத்திய அமைச்சர்களுக்கு விருந்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வரும் 13ம் தேதி இரவு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கிறார்.

13:56 (IST)08 Jun 2019

சென்னையில் தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை

சென்னைக்கு தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:35 (IST)08 Jun 2019

முதல்வர் பேட்டி

12:04 (IST)08 Jun 2019

பாலம் திறப்பு விழா

சேலம் : ஆவணி பேரூர் பகுதியில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் மற்றும் அரசு அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

11:36 (IST)08 Jun 2019

அதிமுக-வில் சில நெருடல்கள் இருக்கிறது

அதிமுக-வில் அதிகாரம் யாரிடம் இருக்கிறதென்றே தெரியவில்லை. இரண்டு தலைமைகள் இருப்பதால் சரியான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஜெயலலிதா போன்ற ஆளுமைத் திறன் கொண்டவர் தற்போது யாரும் இல்லை, என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்

10:47 (IST)08 Jun 2019

வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை புரிந்தார் ராகுல் காந்தி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதில் வயநாடு தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வயநாடு வந்திருக்கிறார் ராகுல். 

10:35 (IST)08 Jun 2019

News in Tamil: குருவாயூரில் மோடி தரிசனம்

குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. #JUSTIN கேரளா: குருவாயூரப்பன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு; ஆளுநர் சதாசிவமும் பிரதமருடன் கோயிலில் வழிபாடு செய்தார் #NarendraModi pic.twitter.com/0JP8FiEeIH— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 8 June 2019

10:06 (IST)08 Jun 2019

Tamil News: இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழகத்தில் டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று நடக்கிறது. இதை 6 லட்சம் பேர் எழுதுகின்றனர். 

09:48 (IST)08 Jun 2019

news in tamil: தமிழிசைக்கு ஜீவிதா நன்றி

09:30 (IST)08 Jun 2019

வைகோ பேட்டி

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கோதாவரியில் இருந்து காவிரிக்கு தண்ணீர் வரும் என்பதெல்லாம் கானல் நீராக போய்விடும். ஹைட்ரோகார்பனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும் தமிழகத்தில் 274 மையம் அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியிருக்கிறது. நீட் தேர்வால் 3 மாணவிகள் இறந்ததால் தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது ” என்றார். 

08:55 (IST)08 Jun 2019

Today Petrol Price: இன்றைய பெட்ரோல் டீசல் விலை

இன்று பெட்ரோல் 23 காசுகள் குறைந்து, 73.47 ரூபாய்க்கும், டீசல் 27 காசுகள் குறைந்து 68.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

08:35 (IST)08 Jun 2019

News in tamil: அமமுக விரைவில் அதிமுக-வுடன் இணையும்

சென்னை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துக் கொண்டார். அதில் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அமமுக, அதிமுகவுடன் இணையும் என்றார். 

Tamil News Live: இன்றைய அரசியல் நிகழ்வுகள், பொது பிரச்னைகள், வெதர் அப்டேட்ஸ், தமிழக செய்திகள், சென்னை செய்திகள் என அனைத்தையும் உடனுக்குடன் ஐஇ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Web Title: Latest tamilnadu news live tamil breaking news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com