காலை மழையில் நினைந்த சென்னை, மாலை மலைக்கும் நல்ல வாய்ப்பு
Chennai Weather Update: சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை
Chennai Weather Update: சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை
Weather Update: தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியின் காரணமாகநேற்று முதல்பல மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியது . இன்று, காலை முதல் திருவள்ளூர், சென்னை, தஞ்சை, திருச்சி, போன்ற மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. சென்னையில் கடலோர பகுதிகளில் மட்டும் நேற்று நல்ல மழை பதுவான நிலையில், இன்று காலை சென்னையின் உட்பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், இன்று மாலையில் மழை அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.
Advertisment
சென்னையில் திருவல்லிக்கேணி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர், தேனாம்பேட்டை, குரோம்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம், கோடம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக, கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
Advertisment
Advertisements
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை" என்றார்.
அதன்படி, இன்று காலை முதல் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, காலை முதலே மேகமூட்டமாக காணப்பட்டது. திருவான்மியூர், கொட்டிவாக்கம், ஆதம்பாக்கம், அடையார் உள்ளிட்ட சில இடங்களில் லேசான மழை பெய்தது. மாலையில், சென்னையில் திருவல்லிக்கேணி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர், தேனாம்பேட்டை, குரோம்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம், கோடம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது.
இந்நிலையில், இன்று (டிச.13) முதல் டிச.16 வரை பரவலாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்று ஐஎம்டி சென்னை தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.