எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்
Chennai Rain: சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Weather News: தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisment
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே மணிக்கு 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம், காரைக்குடி, திருமயம் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும், சிவகிரி, தாமரைப்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
01.03.2020 முதல் 10.04.2020 வரை பெய்த மழை விவரம்
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தெற்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி மற்றும் தூத்துக்குடி / ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மழைக்கு ஏற்ற சூழ்நிலைகள் உள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை நேற்று அதிர்ஷ்டம் கிடைத்தது, ஆனால், ஏப்ரல் மாதத்தில் தினமும் அந்த அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது
என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.