தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரம் மழை தொடரும் – வானிலை மையம்

Chennai Rain : அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்

latest weather news latest weather report tamilnadu rain chennai rain imd chennai latest report weather news – மழை இருக்கா? – சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்

Latest Weather Report: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் அரபிக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Latest weather news latest weather report tamilnadu rain chennai rain imd chennai latest report weather news

Next Story
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? இல்லையெனில் உடனே சேர்த்துக்கொள்ளுங்கள் – இதோ வழிமுறைTamil Nadu Local Body Election 2019 Results, District Panchayat President Election, Union Chairman, vise chairman selection, உள்ளாட்சித் தேர்தல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express