சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்.
1.10.2019 முதல் 27.12.2019 வரை பெய்த மழை விவரம்
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசியல்வாதிகளின் சர்ச்சை பேச்சுக்கள் 2019
கடந்த ஓரிரு வாரமாகவே, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் மழை சீராக பெய்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு நாள் வானிலை அறிக்கையிலும் சென்னையைப் பற்றி குறிப்பிடும் போதும், ‘வானம் மேகமூட்டத்துடன்’ காணப்படும் என்றே கூறப்படும். இன்றும் அதே நிலையே நீடிக்கிறது.
மழை இல்லையாம்!!.