Weather Update: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisment
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 24 மணிநேரத்தில் வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தில் 3 செ.மீ. மழையும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், சீர்காழி ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணிநேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸும் பதிவாகக் கூடும்" என்று தெரிவித்துள்ளது.