Chennai Rains: தென் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்றிரவு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
அதோடு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
சூறை காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீச வாய்ப்புள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்".