கனமழையை எதிர்கொள்ளப் போகும் மாவட்டங்கள் எவை? - வானிலை ஆய்வு மையம் அறிக்கை
Chennai Weather : சூறைக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை குமரிக்கடல் பகுதியில் வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது
Chennai Weather : சூறைக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை குமரிக்கடல் பகுதியில் வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
Advertisment
Advertisements
சூறைக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை குமரிக்கடல் பகுதியில் வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
இதுதவிர இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், "தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், புதுவை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்" என்றார்.