Latest Weather Update: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
Advertisment
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலை நேரங்களில் தெளிவாகவும் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.
01.03.2020 முதல் 16.04.2020 பெய்த மழை விவரம்
அதேபோல், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை எப்போது தொடங்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், "தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. பசிபிக் பெருங்கடல்-இந்திய பெருங்கடல் பகுதிகளில் வீசும் காற்றின் போக்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது ஜூன் முதல் வாரம் பருவ மழை தொடங்கிவிடும். அநேகமாக ஜூன் 4-ம் தேதி பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவ மழை காலங்களில் கேரளாவில் அதிக மழை கிடைக்கும்.
தமிழகத்தில் அதில் பாதி அளவு தான் மழை கிடைக்கும். ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த காலக் கட்டத்தில் வட மாவட்டங்களில் வெப்பச்சலனம்- வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சில சமயங்களில் மழை பெய்யும்.
இந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”