நந்தினி கைது : தமிழகத்தில் மது ஒழிப்பினை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மதுரையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி தொடர்ந்து பல நாட்கள் அமைதி முறையில் போராட்டம் நடத்தி வருபவர். இப்படியான போராட்டங்களால் பலமுறை கைதாகி சிறைக்கு சென்று வந்திருக்கிறார் நந்தினி.
Advertisment
நேற்று (19.09.2018) சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் நந்தினி மற்றும் அவரின் தந்தை ஆனந்தன் இருவரும் கல்லூரி சாலையில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்போது பாஜக நகரத் தலைவர் சந்திரன் மற்றும் மாவட்ட துணை தலைவர் விஸ்வநாதகோபாலன் மற்றும் கட்சியினர் நந்தினி மற்றும் அவரின் தந்தையை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியிருக்கின்றனர்.
பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நந்தினி
இதனைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நந்தினி மற்றும் அவரின் தந்தை பாஜக் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பினர். பாஜகவினர் நந்தினியின் இருசக்கர வாகனத்தில் இருந்த பதாகைகளை எல்லாம் பறித்து பிரச்சனை செய்தனர்.
இதனை கண்டித்து செகன்ட் பீல்டில் நந்தினியும் அவரின் தந்தையும் தர்ணாவில் ஈடுபட்டனர். நான்கு மணி நேரம் இந்த தர்ணா போராட்டம் நீடித்தது. காவல் துறையிடம் இருந்து முறையாக அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தப்பட்டதால் அவர்கள் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர் காவல்துறையினர்.