மசோதா வந்தாள் எனக்கு கால அவகாசம் தேவை நான் இதனை எனது மாநிலத்தில் செயல்படுத்துகிறேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி கோரிமேடு மதர் தெரேசா சுகாதார அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த சுகாதார துறை நிகழ்ச்சியில் முடித்துக் கொண்டு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தர கால கெடு நிர்ணயிக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருப்பது குறித்து கவர்னர் தமிழிசை இடம் கேட்டபோது.

எனக்கு மசோதா வந்தால் அதை ஆலோசிக்க அவகாசம் தேவை கவர்னர் என்ற முறையில் நான் இதனை எனது மாநிலத்தில் செயல்படுத்துகிறேன் மசோதாவுக்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் கடிதம் எழுதுவது அவரது உரிமை ஆகும்.நான் அதை கவர்னராகத்தான் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை மசோதா வந்தால் கால நிர்ணயம் செய்ய கால அவகாசம் தேவை.

கால நிர்ணயம் செய்து கலந்தாலோசித்து கால அவகாசம் எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்துக் கொள்வேன் சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றங்களில் உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது ஆகவே தவறான முன் உதாரணமாக ஆகிவிடக்கூடாது. எனவே அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும் .சில மசோதாக்களுக்கு பொதுமக்கள் உணர்ச்சிகள் அதிகாரிகளிலும் கோரிக்கைகள் வருகிறது இதைப் பார்த்து தான் செயல்படுத்துகிறேன். இது என்னுடைய மாநிலத்தில் நான் எடுக்கும் முடிவைத்தான் சொல்லுகிறேன் .

முதலமைச்சர்கள் இப்போதுதான் கடிதம் எழுதுகிறார்கள் இதற்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவர்களும் கவர்னர்களை பார்த்தவர்கள். அப்போது கருத்து சொல்லவில்லை இப்போது மட்டும் ஏன் பேசுகிறார்கள் என தெரியவில்லை என்று கூறினார் இவ்வாறு அவர் தெரிவித்தார்