திண்டிவனம் மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சரசுவதி சட்டக் கல்லூரியில் தேசிய நியாய சன்ஹிதாவின் சட்ட அம்சங்கள் மற்றும் இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் தாக்கங்கள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சரசுவதி சட்ட கல்லூரியின் முதல்வர் முனைவர். அசோக்குமார் தலைமை தாங்கினார்.
இதில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் சந்தோஷ்குமார் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கௌரி ரமேஷ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
இதில் பேசிய துணைவேந்தர் சந்தோஷ்குமார், "இந்த தேசிய கருத்தரங்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு மிகவும் அருமையானது. இன்றைக்கு சட்ட வழக்குகளில் பலர் நியாயங்களை பெற்று வந்தாலும், குற்ற வழக்குகளில் இந்தியா முழுவதும் சரியான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் 70 முதல் 90 சதவீத வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதற்கு காரணம் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு இல்லாதது தான். தேசிய நியாய சன்ஹிதா சட்டம் பலருக்கு பாதுகாப்பு அளிக்கிறது" எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை வி.ஐ.டி சட்டக் கல்லுாரி பேராசிரியர் முனைவர் இராஜ வெங்கடேசன், முனைவர் பிரேமா, முனைவர் ராஜலட்சுமி, புதுவை சட்டக் கல்லுாரி முனைவர் குர்மிந்தர் கௌர், மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவல் முனைவர் சிவப்பிரகாசம், கல்லுாரி நிர்வாக அலுவலர் சிவக்குமார் உட்பட சட்ட ஆய்வாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டடனர்.
செய்தி - பாபு ராஜேந்திரன்