தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தமிழ் தேசிய முதுபெரும் தலைவர் பழ. நெடுமாறன் திங்கள்கிழமை (பிப்.13) தெரிவித்தார்.
இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபாகரன் உயிருடன் இல்லை என வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “சட்டத்தில் இடமிருந்தால் பழ.நெடுமாறன் மீது வழக்கு தொடருவோம்” என்றார்.
தொடர்ந்து, “பிரபாகரன் மீது இருந்த 2 வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டன.
அவரது இறப்பு சான்றிதழ் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் உள்ளது; அவர் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வது, நல்ல எண்ணத்தில் சொல்லப்படவில்லை.
விரல் ரேகை அடிப்படையில் பிரபாகரன் இறப்பு சான்றிதழ், நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது; பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் சென்று வந்த பிறகு பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதில், ஏதோ சதி உள்ளது. பழ.நெடுமாறன் திராவிடர் கழகத்திற்கு எதிரானவர்; இப்போது, பாஜகவிடம் லாபத்தை எதிர்பார்த்து விலைபோய்விட்டார்
சட்டத்தில் இடமிருந்தால் பழ.நெடுமாறன் மீது வழக்கு தொடருவோம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/