/indian-express-tamil/media/media_files/2025/04/22/oUpSXIIFhKGj9NmcVior.jpg)
கோவையில் கழிப்பறைக்கு கக்கன் மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாதுறை என மூத்த தலைவர்கள் பெயர் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் இரவோடு இரவாக பெயிண்ட் கொண்டு தலைவர்கள் பெயர்கள் மறைக்கபட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பொதுக் கழிப்பிடம் ஒன்றில் கக்கன் மற்றும் அண்ணா என மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவை 95 ஆவது குறிச்சி ,அண்ணா நகரில் சில்வர் ஜூபிலி என்ற பகுதி அருகே மாநகராட்சி சார்பில் பொதுக் கழிப்பிடம் ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்தக் கழிப்பிடத்துக்குப் புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டது.
புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் இந்தக் கழிப்பிடத்தின் முன்பக்கச் சுவரில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாதுரையின் பெயரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கக்கன் அவர்களின் பெயரும் எழுதப்பட்டு இருப்பது தற்போது பேசு பொருள் ஆகி உள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கழிப்பிடத்துக்கு மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூட்டி இருப்பது தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுக் கழிப்பிடத்தில் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் இந்த கழிப்பிடம் குறித்து நேற்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து எகஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இன்னிலையில் தலைவர்கள் பெயர் எழுதபட்டு இருந்ததை மாநகராட்சி நிர்வாகம் பெயிண்ட் கொண்டு மறைத்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.