பிரபல இயக்குநர் மகேந்திரன் காலமானார்… பேரிழப்பை சந்தித்த தமிழ் சினிமா!

பேட்ட மற்றும் நிமிர் போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்.  

Legendary Director Mahendran Passed away
Legendary Director Mahendran Passed away

Legendary Director Mahendran Passed away : நடிகர் ரஜினி காந்தினை வைத்து மெகா ஹிட் திரைப்படங்கள் கொடுத்த பிரபல இயக்குநர் மகேந்திரன் ஆவார்.  சமீபமாக சிறுநீரகப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார் அவர்.

திரைத்துறையினர் அவருக்கு தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் அட்லி இயக்கிய தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் மகேந்திரன், மேலும் பேட்ட மற்றும் நிமிர் போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி போன்ற மிகப்பெரிய அளவிலான வெற்றிப்படங்களை அவர் தமிழ் சினிமாவிற்கு அளித்தவர். அவருடைய உடலுக்கு இன்று காலை 10 மணியில் இருந்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இன்று மாலைக்குள் உடல் தகனம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : இயக்குநர் மகேந்திரன் : தமிழ் சினிமாவே கொண்டாடிய அந்த மூன்று படங்கள் !

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Legendary director mahendran passed away

Next Story
திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவுpolice security to thirumavalavan, life threat to thol thirumavalavan, தொல்.திருமாவளவன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com