சட்டப்பேரவை செயலர் நியமன சர்ச்சை: நியமன உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவு

சட்டப்பேரவை சிறப்புச் செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்ட உத்தரவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சட்டப்பேரவை சிறப்புச் செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்ட உத்தரவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், பேரவை செயலாளருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை செயலாளராக உள்ள பூபதி பிப்ரவரி 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், சபநாயகரின் தனி செயலாராக உள்ள சீனிவாசன் என்பரை பேரவையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நியமன உத்தரவு என்பது ரகசியமாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பணிமூப்பின் அடிப்படையில் தங்களை பரிசீலிக்காமல் நியமனம் நடைபெற்றுள்ளதால் அந்த நியமனத்துக்கு தடை விதிக்ககோரி சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் வசந்திமலர் என்பவரும், இணைச் செயலாளர் சுப்பிரமணியம் என்பவரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசும், பேரவை செயலாளரும் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் சட்டப்பேரவையின் சிறப்பு செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டதற்கான உத்தரவை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close