/tamil-ie/media/media_files/uploads/2019/09/jaggi.jpg)
Cauvery Calling, Leonardo DiCaprio, Isha Foundation, Sadhguru Jaggi Vasudev, லியனார்டோ டிகேப்ரியோ, டைட்டானிக், ஹாலிவுட், ஈஷா பவுண்டேசன், ஜக்கி வாசுதேவ், காவிரி கூக்குரல்
ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல், இயக்கத்துக்கு, ஹாலிவுட் முன்னணி திரைநட்சத்திரம் கன் லியானார்டோ டிகேப்ரியோ பேஸ்புக் பதிவு மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, டிகேப்ரியோ, பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் ஆறுகள் கடுமையாக மாசு அடைந்துள்ளன, மேலும் அவற்றின் பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஜக்கி வாசுதேவின் ஈஷா பவுண்டேஷன், காவிரி ஆற்றை காக்க கடும்பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
டிகேப்ரியோவின் இந்த பேஸ்புக் பதிவுக்கு பெரும்பாலானோர் தங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். டிகேப்ரியோவின் பதிவை, ஜக்கி வாதசுதேவ் பகிர்ந்துள்ளார்.
கடந்தாண்டு, டிகேப்ரியோ பவுண்டேசன் சார்பில் நடத்தப்பட்ட எர்த் சென்ஸ் நிகழ்ச்சியில், ஜக்கி வாசுதேவ் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
காவிரி ஆற்றை புணரமைப்பதன் மூலம், 84மில்லியன் மக்களின் வாழ்வாதாரம், நீர்ப்பாசனம், அவர்களின் குடிநீர் தேவைகள் உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்யப்படும். இந்த திட்டத்திற்காகவே, காவிரி கூக்குரல் என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, காவிரி பாயும் பகுதிகளில் 242 கோடி மரங்கள் நடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.