கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதிக்கு ஜார்கண்ட் மாநிலத்த்தை சேர்ந்த அனுல் அன்சாரி என்பவர் மனைவி குழந்தைகளுடன வேலை செய்து கொண்டு இருந்தார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை ஊசிமலை எஸ்டேட் பகுதியில் ஒருவர் இயற்கை மரணம் அடைந்த நிலையில் அனைவரும் வீட்டில் இருந்து உள்ளனர்.
அணுல் அன்சாரி இவரது மனைவி நசிரென் காத்துன் மற்றும் குழந்தை அப்சரா காத்துன் (6 வயது) தேயிலை தோட்டத்தில் நின்று உள்ளனர். அப்போது குழந்தையை சிறுத்தை தாக்கி இழுத்து சென்றுள்ளது. இதை பார்த்த மக்கள் சிறுத்தையை விரட்டி சென்று உள்ளனர். அப்போது சிறுத்தை குழந்தையை தேயிலை தோட்டத்தில் விட்டு சென்றுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து. காவல் துறையினரும் நகராட்சி தலைவர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைபற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். வால்பாறையில் தாயின் கண்முன்னே சிறுமியை சிறுத்தை கடித்துக் கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவுப்படி மனித விலங்கு மோதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்
ஈஸ்வரசாமி முதலமைச்சர் அறிவுறுத்துளியம்படி மனித விலங்கு மோதலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“