தேனி மாவட்ட எம்.பி., ரவீந்திர நாத்துக்கு சொந்தமான தோட்டம் ஒன்று அம்மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோட்டத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் ஆட்டு மந்தை ஒன்று அமைத்துள்ளார். இந்த நிலையில், சம்பத்தன்று சிறுத்தை புலி ஒன்று எம்.பி.,யின் தோட்டத்துக்குள் புகுந்துள்ளது.
இந்தச் சிறுத்தை அங்குள்ள மின்கம்பியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்துள்ளது. இது வன அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் விசாரணை நடத்தி, தோட்டத்துக்குள் ஆட்டு மந்தை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் தற்போது தோட்டத்தின் மேலாளர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மின்சார வேலி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழக எம்.பி., ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் இது குறித்து விசாரணையும் நடந்துதுவருகிறது. 2019 மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஒரே எம்.பி., ரவீந்திரநாத் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மூத்த மகன் ஆவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil