Advertisment

விஜயகாந்த் இறுதி யாத்திரை; இந்த நடிகர்கள் ஆப்சென்ட்: காரணம் என்ன?

நடிகரும் தே.மு.தி.க நிறுவனமான விஜயகாந்தின் இறுதி யாத்திரை இன்று நடந்தது. அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
Vijayakanth

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

vijayakanth | நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள்,  அரசியல் பிரமுகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

தூத்துக்குடியில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் அந்த படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். தொடர்ந்து அவர் விஜயகாந்தின் உடலுக்கு ரோஜா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

உலக நாயகன் கமல்ஹாசனும் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதே போல் நடிகர்கள் விஜய், பிரபு உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில்,  நடிகர் அஜித்குமார்,  சூர்யா மற்றும் விஷால் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜயகாந்தின் பூத உடல் வியாழக்கிழமை சென்னை தீவு திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தொடர்ந்து அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில்,  வாகனத்தில் அவரது பூத உடல் எடுத்து வரப்பட்டு கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடல் வைக்கப்படும் சந்தன பேழையில்,  புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தேமுதிக நிறுவனர் என பொறிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment