ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரடியா நிகழ்ச்சிக்கு போயிருவோம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கல்லுாரி படிப்பு முடித்தவர்களின் வாழ்நாள் அதிகரிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துஉள்ளது. கல்வி மட்டுமே மனிதருக்கு அழியாத செல்வம். நல்ல வாழ்க்கை, நற்பெயருடன் ஆயுளையும் அதிகரிக்கிறது கல்வி என அமெரிக்காவில் உள்ள அலபாமா மருத்துவ பல்கலை., ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, இளங்கலை, முதுகலை என கல்வியின் அடுத்தடுத்த நிலையை எட்டும் நபர்களின் ஆயுட்காலம் தலா 1.37 ஆண்டுகள் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. பந்தயத்தில் ஈடுபடுவது, அதிக வருமானம் பெறுவது உள்ளிட்ட மற்ற எந்த காரணத்தாலும் ஆயுட்காலம் அதிகரிக்கவில்லை. இளம் வயதினருக்கு கல்வியை எந்தளவுக்கு தருகிறமோ, அதன் அடிப்படையில் ஆயுட்காலத்தில் மாற்றம் ஏற்படுகிறது என உறுதியாக கூற முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் என்னென்ன ஆய்வுகளை எல்லாம் நாம பாக்க போறோமோ...
மஹாராஷ்டிராவில், பீட் மாவட்டத்தில் உள்ள விதா கிராமத்தில், ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையன்று, புது மாப்பிள்ளையை கழுதை மீது ஏற்றி, ஊர்வலம் அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று (மார்ச் 10), ஹோலி பண்டிகையை முன்னிட்டு, புது மாப்பிள்ளையான, தத்தாத்ரே கெய்க்வாட் என்பவரை, கழுதை மீது ஏற்றி, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அக்கிராம எல்லையில் உள்ள அனுமார் கோவிலில் ஊர்வலம் முடிவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தாடைகளில், தனக்கு பிடித்தவைகளை, தத்தாத்ரே கெய்க்வாட், பரிசாக எடுத்துக் கொண்டார். மாப்பிள்ளை தப்பி ஓடாமல் இருக்க, ஹோலி பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே, கிராமத்தினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விநோதம்...
ஹாய் கைய்ஸ் : ரூ.180ல் ஹாயாக பறக்கலாம் பெங்களூருவுக்கு
ஹாய் கைய்ஸ் : மலையில் விளையும் காய்கறிகள் இனி கும்பகோணத்திலேயே கிடைக்கும் - செமல்ல...
சிவகங்கை மாவட்ட காடுகளில் துள்ளிக்குதிக்கும் புள்ளி மான்களை காத்திட கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். கோடையில் விபத்து, வேட்டையை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நடவடிக்கை தேவை
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா முடிந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் ராமு, ஜோதி ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் பணம் எண்ணும் பணி நடந்தது. இதில், 80 லட்சத்து 80 ஆயிரத்து 777 ரூபாய் பணமும், தங்க நகைகள் 455 கிராம் மற்றும் வெள்ளி பொருட்கள் 1010 கிராம் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.