Advertisment

மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; எஸ்.எஸ்.ஐ உள்பட 25 காவலர்கள் கூண்டோடு மாற்றம்: அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி

மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக புகார்கள் வந்ததால், கொள்ளிடம் டோல்கேட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 25 போலீஸார் ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Tri pol.jpg
Listen to this article
00:00 / 00:00

திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக போலீஸார் ஆதரவுடன் மணல் கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இது குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் தவிர, மற்ற அனைவருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

Advertisment

இந்நிலையில் அந்த புகாருக்கு கொள்ளிடம் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மணல் கடத்தலில் ஈடுபடும் மணல் மாஃபியா கும்பலுக்கு ஆதரித்து, பணம் பெற்று கொண்டு கண்டும் காணமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தல் கும்பலுக்கு கொள்ளிடம் போலீசார் ஆதரித்து வருவதாகவும் மேலும் மணல் மாஃபியா கும்பலுக்கு எதிராக யாரேனும் புகார் அளித்தால் அந்த நபர்களை மணல் மாஃபியா கும்பலிடம் காட்டிக் கொடுப்பதாகவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனி பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, புகாருக்கு உள்ளான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் என 25 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டார். கொள்ளிடம் காவல் நிலையத்தில் போலீஸார் கூண்டோடு மாற்றப்பட்டதால், ஆயுதப்படையில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸார் தற்போது அங்கு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களையும் கூண்டோடு மாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment