scorecardresearch

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; 28-ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு

தற்போது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; 28-ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழக மக்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்று முடிவடையும் நிலையில் இருந்ததால், தற்போது 28ஆம் தேதி வரை நீடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக, மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு மக்களில் பலர் ஆதார் எண்ணை இணைக்க தவறியதால், இதுவரை மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதில் மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தற்போது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதன்பின்பு, ஆதாரை இணைக்காவிட்டால், நாளை முதல் மின் கட்டணம் செலுத்தமுடியாத நிலை மக்களுக்கு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள், இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Linking aadhaar with e number last date is today 15th february 2023