scorecardresearch

திருமண மண்டபம் , விளையாட்டு மைதானங்களில் மது அருந்த சிறப்பு அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு.

மதுவுக்கு அனுமதி

திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு. மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று, மதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என தமிழக அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கை தவிர பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது.இந்த அறிவிப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்த பகுதியில் உள்ள  காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த சிறப்பு அனுமதிக்கு சிறப்பு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திமுக ஆட்சி ஏற்ற பிறகு டாஸ்மார்க் கடைகளை குறைப்போம் எனச் சொல்லி தற்போது திருமண மண்டபம் வரை மது கொள்கையை நீட்டித்திருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Liquor drinking allowed in marriage functions and play grounds

Best of Express