Advertisment

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: அதிகாரிகள் ரெய்டு நடத்த உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Liquor sales at TASMAC wine shops, tasmac Liquor sales for an additional price, டாஸ்மாக், கூடுதல் விலைக்கு மது விற்பனை, அதிகாரிகள் சோதனை நடத்த உத்தரவு, tasmac, Officers order to conduct raid in tasmac shops, tasmac wine shops

Liquor sales at TASMAC wine shops, tasmac Liquor sales for an additional price, டாஸ்மாக், கூடுதல் விலைக்கு மது விற்பனை, அதிகாரிகள் சோதனை நடத்த உத்தரவு, tasmac, Officers order to conduct raid in tasmac shops, tasmac wine shops

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Advertisment

டாஸ்மாக் மதுக்கடைகளில் எம்.ஆர்.பி.யை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகம், டாஸ்மாக் மதுவிற்பனைக் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.

அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி)யை விட அதிக விலைக்கு மதுவிற்பனை செய்வதை தடுக்க டாஸ்மாக் நிறுவனம் அதன் ஆய்வுக் குழுக்களுக்கு இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

இருப்பினும், தீர்க்கப்படாத நிர்வாகப் பிரச்சினைகள் இருப்பதாகவும் பார் உரிமையாளர்கள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளில் ஒரு பகுதியினரை எம்.ஆர்.பி விலை பிரச்னையில் ஊழியர் சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

எம்.ஆர்.பி-க்கு மேலே ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை மதுப்பிரியர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது ஒரு பெரிய குறைதான். சமீபத்திய சுற்றறிக்கையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆர். கிர்லோஷ் குமார், ஒவ்வொரு மாவட்ட மேலாளரும் ஒரு மாதத்திற்கு 70 விற்பனை நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும், இதில் 40 பிற மாவட்டங்களில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் சிறப்பு பறக்கும் குழு ஒவ்வொரு மாதமும் அந்தந்த மண்டலங்களில் 240 கடைகளை சரிபார்க்க வேண்டும். மூத்த பிராந்திய மேலாளர்கள் 40 விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து எம்.ஆர்.பி. விலைக்கு மேல் மதுபானங்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.ஆர்.பி-க்கும் மேல் விற்பனை மதிப்பை பொறுத்து தவறு செய்யும் ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை கடுமையானதாக இருக்கும். அது இடமாற்றம், அபராதம் முதல் இடைநீக்கம் வரை இருக்கும்.

கடந்த 3 ஆண்டுகளில் டாஸ்மாக் வெளியிட்ட மோசடி குறித்த ஏழாவது சுற்றறிக்கை இது. இருப்பினும் மதுப்பிரியர்கள் இந்த பிரச்னை கண்டுகொள்ளப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.

டாஸ்மாக் நிர்வாகம் 2019 ஆம் ஆண்டில் சுமார் 2,000 டாஸ்மாக் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் ரூ.4 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் நிர்வாக வட்டாரங்கள் கூறுகின்றன. சில டாஸ்மாக் பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் தப்பியோடியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், ​​மாவட்ட மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் தற்போது ஆய்வுக்காக மற்ற மாவட்டங்களுக்குச் செல்கிறார்கள் என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் இபோது பயனுடையதாக இருந்திருக்கும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், கடைகளின் பராமரிப்பு செலவுகளை ஊழியர்களே பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், சில பார் உரிமையாளர்கள் மற்றும் சில டாஸ்மாக் அதிகரிகளின் எதிர்ப்புகளையும் ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது போன்ற குறைகளை நிவர்த்தி செய்தாலே எம்.ஆர்.பி.யைவிட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்கிற பிரச்னை முடிவுக்கு வரும் என்று டாஸ்மாக் உழியர்கள் கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment