கனமழை தென்னிந்தியாவில் கடுமையாய் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும், முக்கியமாக கேரளாவில் கடந்த மூன்று நாட்களில் நாற்பதிற்கும் மேற்ப்பட்ட மக்கள் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 738 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கனமழையால் கோயம்பத்தூர்,மற்றும் நீலகிரி மாவடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல சுற்றுலா தளமான அவலாஞ்சியில் கடந்த 72 மணிநேரத்தில் மட்டும் 2136 மிமீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 28 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. இதுவரை நீலகிரியில் மட்டும் ஐந்து பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர்.
ரயில் சேவை நிறுத்தம் : கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பல ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டன தென்னக ரயில்வே தமிழ்நாட்டில் இருந்து கேரளா வரை செல்லும் சில முக்கிய ரயில்சேவைகளை நிறுத்தியுள்ளதாக அறிவிப்பு.
முழு விவரம் பின் வருமாறு:
வ.எண்.16791/16792 திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று முதல் அடுத்தமூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. தொடர் மழை காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வ.எண்.16101/16102 சென்னை எக்மோர்-கொல்லம் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் தொடர் மழை காரணமாக இன்று முதல் அடுத்தமூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
வ.எண். 56737/56738 செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயில் சேவை தொடர் மழை காரணமாக இன்று முதல் அடுத்தமூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.