நீக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பட்டியல்

அதிமுகவின் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சட்டப்பேரவை தலைவர் தனபால் அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். அவர்களின் விபரம் வருமாறு:

அதிமுகவின் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சட்டப்பேரவை தலைவர் தனபால் அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். அவர்களின் விபரம் வருமாறு:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK, TTV Dinakran, Speaker Dhanapal, 18MLA's disqualification, madras high court,

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்துள்ளார்.

Advertisment

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் குழப்பம் நிலவி வருகிறது. முதலில் ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வந்தார். சசிகலா தலைமையில் இன்னொரு அணி செயல்பட்டது. சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இந்நிலையில் சசிகலாவைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே ஓபிஎஸ் அணி, மீண்டும் அதிமுகவோடு இணைந்தது. அதை டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 19 எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என மனு கொடுத்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்துள்ளார், சபாநாயகர் தனபால்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் விபரம் வருமாறு:

Advertisment
Advertisements

1. தங்கதமிழ் செல்வன் - ஆண்டிப்பட்டி

2. ஆர்.முருகன் - அரூர்

3. சோ. மாரியப்பன் கென்னடி - மானாமதுரை

4. டாக்டர் கே.கதிர்காமு - பெரியகுளம்

5. திருமதி ஜெயந்தி பந்மநாபன் - குடியாத்தம்

6. பி.பழனியப்பன் - பாப்பிரெட்டிபாளையம்

7. வி.செந்தில்பாலாஜி - அரவக்குறிச்சி

8. எஸ்.முத்தையா - பரமக்குடி

9. பி.வெற்றிவேல் - பெரம்பூர்

10. என்.ஜி.பார்த்தீபன் - சோழிங்கர்

11. மு.கோதண்டபாணி - திருப்போரூர்

12. டி.ஏ.ஏழுமலை - பூந்தமல்லி

13. எம்.ரங்கசாமி - தஞ்சாவூர்

14. ஆர். தங்கத்துரை - நிலக்கோட்டை

15. ஆர்.பாலசுப்பிரமணி - ஆம்பூர்

16. எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியம் - சாத்தூர்

17. ஆர்.சுந்தர்ராஜ் - ஒட்டப்பிடாரம்

18. திருமதி. கே.உமாமகேஷ்வரி - விளாத்திக்குளம்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: