மாலை 4.07: பிரதமருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, பிரதமரிடம் அளித்த அறிக்கை குறித்தும், அவரிடம் வைத்த கோரிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் விளக்கினார். ”ஓகி புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், கன்னியாகுமரியில் ஒருங்கமைந்த மீன்பிடி தளம் அமைக்க வேண்டும், ஓகி புயல் நிரந்தர சீரமைப்புக்கு 5,255 கோடி ரூபாயும், நிவாரண பணிகளுக்கு 747 கோடி ரூபாயும் ஒதுக்க வேண்டும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 9,302 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார். அதற்கு அறிக்கையை ஆய்வு செய்து பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்திருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
மதியம் 2.50: ஓகி புயல் பாதிப்புகள் குறித்தும், தமிழகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திரமோடியிடம் விளக்கினார்.
மதியம் 2.32: ஓகி புயல் பாதிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்க மீனவ பிரதிநிதிகள், புயலில் உறவினர்களை இழந்த மீனவ குடும்பத்தினர் விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்தனர்.
மதியம் 2.20: திருவனந்தபுரத்தில் தனி ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தடைந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் ஓகி புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிடோரும், அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
காலை 11.15: பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி சென்றார்.
காலை 9.00:
காலை 8.55:
காலை 8.30: பிரதமர் நரேந்திரமோடி லட்சத்தீவுகளில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட புறப்படுகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/12/modi-lakhswa-300x169.jpg)
பிரதமர் நரேந்திரமோடி ஓகி புயலால் லட்சத்தீவு, தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு கர்நாடக மாநிலம் மங்களூரு வந்தடைந்தார். லட்சத்தீவில் உள்ள கவரட்டி, கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள், புயலால் பாதிக்கப்பட்டவர்கள், மீனவர்கள், விவசாயிகள் ஆகியோரை அவர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
“2017-2018 நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக, கேரளாவுக்கு ரூ.153 கோடியும், தமிழகத்திற்கு ரூ.561 கோடியும் மத்திய அரசு வழங்கும்”, என தகவல் வெளியாகியுள்ளது.