Advertisment

Chennai News Highlights: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tirupati stampede

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில்  இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

நாடாளுமன்ற கூடத்தொடர்: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. முதல் கூட்டத்தில் மசோதாவின் விதிகள் குறித்து உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் விளக்கமளிக்க உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Jan 08, 2025 21:36 IST
    டாக்கிங் நடவடிக்கை ஒத்திவைப்பு 

    இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் நடவடிக்கை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.



  • Jan 08, 2025 21:04 IST
    பொங்கல் தொகை; முதல்வர் தான் முடிவெடுப்பார் - உதயநிதி

    பொங்கல் தொகுப்போடு பணம் வழங்கப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Jan 08, 2025 21:00 IST
    ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு 

    சென்னையில் இருந்து 142 பயணிகளோடு ஐதராபாத் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



  • Jan 08, 2025 20:38 IST
    கூட்டணியின் வெற்றிக்காக உழைப்போம் - திருமாவளவன்

    ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



  • Jan 08, 2025 19:48 IST
    சீமானுக்கு வன்னி அரசு கண்டனம்

    பெரியார் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறியதற்காக, சீமானுக்கு வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார். 



  • Jan 08, 2025 19:04 IST
    சமைப்பதே பெரிய சவாலான - உதயநிதி பேச்சு 

    "சமையல் என்பது சாதாரண விஷயம் அல்ல, ஒரு குடும்பத்தில் இருப்பவர்களை திருப்தி படுத்த சமைப்பதே பெரிய சவாலான விஷயம். சென்னை உணவு திருவிழாவில் பங்கேற்ற மகளிர் சுய உதவி குழு மகளிருக்கு பரிசும், சான்றிதழும் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையும் அடைகின்றோம்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

     



  • Jan 08, 2025 18:24 IST
    கல்வராயன் மலைப்பகுதி மேம்பாடு - அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    "கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்" என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Jan 08, 2025 18:23 IST
    இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி. நாராயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. நாராயணன் அவர்கள், விண்வெளி அறிவியல் துறையின் மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது நம் மாநிலத்திற்கு பெருமை. தங்கள் தலைமையில், இந்திய நாடு விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் பல உச்சங்களைத் தொட வாழ்த்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 08, 2025 18:05 IST
    மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

    இலங்கை கடற்படை சார்பில் இன்று துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில், மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

    இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர், அந்நாட்டில் உள்ள பருத்தித்துறை கடலில் அமைந்துள்ள `P421’ கடற்படை தளத்தில், இன்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக இலங்கை கடலோர காவல்படையின் வடக்கு பிராந்திய அதிகாரிகள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மூலம் அனைத்து மீனவ சங்கங்களுக்கும் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.



  • Jan 08, 2025 17:48 IST
    ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியைத் தொடர்ந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரசும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.



  • Jan 08, 2025 17:26 IST
    அ.தி.மு.க-வின் “யார் அந்த சார்?” பிரசாரத்திற்கு தி.மு.க பதிலடி 

    அ.தி.மு.கவின் “யார் அந்த சார்?” பிரசாரத்திற்கு பதிலடி தரும் வகையில்” இவன் தான் அந்த சார்” என தி.மு.க பிரசாரம் செய்து வருகிறது. அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க-வினர் “யார் அந்த சார்?” பிரசாரம் செய்து வருகின்றனர். அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி உள்ள அ.தி.மு.க நிர்வாகியை குறிப்பிட்டு “இவன் தான் அந்த சார்” என தி.மு.க பதிலடி கொடுத்துள்ளது.



  • Jan 08, 2025 17:09 IST
    11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு அட்டவணை வெளியீடு

    பிப். 7 முதல் 14ம் தேதிக்குள், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்.15 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



  • Jan 08, 2025 16:55 IST
    'எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்' - அ.தி.மு.க-வுக்கு ஸ்டாலின் பதிலடி

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; “பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது... யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்!

    வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் 'சார்கள்' பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! சென்சிட்டிவான ஒரு வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக நம் மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம்!” என்று கூறினார்.



  • Jan 08, 2025 16:31 IST
    போராட்டம் நடத்த ஆளுங்கட்சிக்கு அனுமதி; சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக பா.ஜ.க வழக்கு

    தமிழக ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆளுங்கட்சிக்கு அனுமதி அளித்து விதிமீறலில் ஈடுபட்டதாகவும் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் காவல் ஆணையர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டி சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக பா.ஜ.க வழக்கு தொடர்ந்துள்ளது.



  • Jan 08, 2025 15:58 IST
    சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்

    தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயர் அப்பாவு: “அரசியலமைப்பின்படி அமைச்சரவை எழுதிக் கொடுக்கும் தீர்மானத்தை வாசிப்பது மட்டும்தான் ஆளுநரின் ஜனநாயகக் கடமை, தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாட்டு மக்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்ட ஆளுநர் ரவிக்கு சட்டப்பேரவை கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 08, 2025 15:52 IST
    ஹெச்.எம்.பி.வி தொற்று பரவி வருவதால் திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம் - தேவஸ்தானம் அறிவிப்பு

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். ஹெச்.எம்.பி.வி தொற்று பரவி வருவதால் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



  • Jan 08, 2025 15:25 IST
    முல்லைப் பெரியாறு வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

    முல்லைப் பெரியாறு வழக்கில் அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி நிபுணர்கள் குழுவை, மத்திய அரசு ஏன் இதுவரை அமைக்கவில்லை? அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது என்று கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதிலும் தேசிய குழு அமைப்பதிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 22-ம் தேதி தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.



  • Jan 08, 2025 15:19 IST
    தி.மு.க-வின் அனுதாபிக்கு இவ்வளவு அதிகாரமா? - வானதி சீனிவாசன் கேள்வி 

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் தி.மு.க உறுப்பினர் அல்ல தி.மு.க ஆதரவாளர் மட்டுமே என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், “தி.மு.க-வின் அனுதாபிக்கு இவ்வளவு அதிகாரமா? அனுதாபியே இவ்வள்வு குற்றங்கள் செய்ய முடியும் என்றால் பதவி கிடைத்தால் என்னாகும்? அனுதாபியால் சக்திவாய்ந்த அமைச்சரோடு நின்று புகைப்படம் எடுக்க முடியுமா?” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Jan 08, 2025 14:56 IST
    சென்னையில் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு காவலர் வழக்குப்பதிவு

    சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே எஸ்.எஸ்.ஐ ராஜா சிங், வருமான வரித்துறை எஸ்.பி. பிரபு, வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, வழிப்பறி சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  வழிப்பறி செய்த பணத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு ஜாம் பஜாரில் அதிநவீன உடற்பயிற்சி கூடம் அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு ஈசிஆர் பகுதியில் ரிசார்ட் வாங்கி இருப்பதும், தெரியவந்துள்ளது. தலைமறைவான சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், சன்னி லாய்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வழிப்பறி செய்து வந்ததும், 3 முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது



  • Jan 08, 2025 14:54 IST
    எங்கள் மீது மட்டும் கொண்டு வருவது நியாயமா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி

    ஆளுங்கட்சியின் தோழமை கட்சிக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா? சட்டப்பேரவையில் 6ஆம் தேதி நாங்கள் முற்றுகையிடும் முன்னரே காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டார்கள். காங்கிரஸ் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வராமல் எங்கள் மீது மட்டும் கொண்டு வருவது நியாயமா? என அதிமுக எம்.எல்.ஏ  ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Jan 08, 2025 13:57 IST
    HMPV தொற்று பரவல்: திருப்பதி பக்தர்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்

    HMPV தொற்று பரவலை தொடர்ந்து திருப்பதி வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சொர்க்கவாசல் திறப்புக்கு அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதால் மாஸ்க் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்



  • Jan 08, 2025 13:55 IST
    ஆளுனர் விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம்

    சட்டப்பேரவையில் இருந்து ஆளுனர் வெளியேற அதிமுகவினரே காரணம் ஆளுநருக்கு எதிராக, அதிமுகவினர் பதாகைகளுடன் வந்தனர். தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்று சொல்ல ஆளுநருக்கு அதிகாரமில்லை எழுதி கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை, கோரிக்கை எதுவும் வைக்க முடியாது தமிழக மக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்துவிட்டார் என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.



  • Jan 08, 2025 13:53 IST
    அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை வாபஸ்: சபாநாயகர் 

    அதிமுகவினர் மீது உரிமை மீறல் விசாரணை தேவையில்லை என்று, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, உரிமை மீறல் விசாரணையை திரும்ப பெற்றார் சபாநாயகர் கூறியுள்ளார்.



  • Jan 08, 2025 13:04 IST
    ஞானசேகரனிடம் செல்போனில் பேசியது யார் என்று மத்திய அரசு தான் வெளியிட வேண்டும்: செல்வபெருந்தகை

    ஞானசேகரனிடம் செல்போனில் பேசியது யார் என்று மத்திய அரசு தான் வெளியிட வேண்டும். செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளது, அவர்கள் தான் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்  செல்வப்பெருந்தகை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.



  • Jan 08, 2025 13:00 IST
    இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு

    "ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு முன்பே, இரட்டை இலை மற்றும் அதிமுக தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய தேர்தல் ஆணையத்தில் சேலம் மணிகண்டன் மனு அளித்துள்ளார்.  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும், "தொண்டர்களை குழப்பும் நோக்கில், அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத சிலர் மனு அளித்துள்ளனர்" இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு தான் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.



  • Jan 08, 2025 13:00 IST
    டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக பேரவையில் காரசார விவாதம் 

    அதிமுக எம்.பி. தம்பிதுரை கனிமவள சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து பேசியுள்ளார். அதை மறுக்கிறீர்களா? பேசவில்லை என நீங்கள் சொன்னால். ஆதாரத்தை நான் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறேன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தபோது அமளியில் ஈடுபட்ட அதிமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • Jan 08, 2025 12:08 IST
    எதிர்க்கட்சி தலைவரை திட்டமிட்டு தாக்கி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது - ஆர்.பி.உதயகுமார்

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பிரதான எதிர்க்கட்சி தலைவரை திட்டமிட்டு தாக்கி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நேற்று போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்படவில்லை, எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுகிறார்கள். ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? என சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்



  • Jan 08, 2025 12:05 IST
    யார் அந்த சார்? ஆதாரம் இருந்தால், சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குங்கள் - சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

    யார் அந்த சார்? என்பதற்கு ஆதாரம் இருந்தால், அதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குங்கள். மகளிருக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்



  • Jan 08, 2025 11:46 IST
    அண்ணா பல்கலை. விவகாரத்தில் அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் – பா.ஜ.க எம்.எல்.ஏ

    அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என சட்டப்பேரவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ. காந்தி தெரிவித்துள்ளார்



  • Jan 08, 2025 11:45 IST
    போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது - ஸ்டாலின்

    போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால் வழக்கு போடப்பட்டது. போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Jan 08, 2025 11:27 IST
    பேரவையில் செல்வப்பெருந்தகை பேச்சுக்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு

    அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் நடவடிக்கை மற்றும் காவல்துறை அணுகுமுறையை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இதனை வாக்கு வங்கி அரசியலாக்கி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் மனு நீதி சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்ட முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் இல்லை என சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை கூறினார். இதற்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் 



  • Jan 08, 2025 11:09 IST
    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் கட்சியில் ஒருவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்



  • Jan 08, 2025 10:16 IST
    மகளிர் உரிமைத்திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதலானோரை சேர்க்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.



  • Jan 08, 2025 09:38 IST
    காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம்

    டெல்லியில் உள்ள புதிய தலைமை அலுவலகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஜனவரி 15 ஆம் தேதி மாறுகிறது. புதிய அலுவலகத்திற்உ இந்திரா காந்தி பவன் என பெயரிடப்பட்டுள்ளது.



  • Jan 08, 2025 09:33 IST
    சிறுமி பாலியல் வன்கொடுமை: அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

    சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளர்.



  • Jan 08, 2025 09:02 IST
    போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு

    மதுரையில் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • Jan 08, 2025 09:00 IST
    குற்றவாளியை காப்பாற்ற கட்டப்பஞ்சாய்த்து

    சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்ற அதிமுக நிர்வாகி கட்டப் பஞ்சாயத்து செய்ததாக சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது.



  • Jan 08, 2025 08:59 IST
    பலி எண்ணிக்கை உயர்வு

    நேபாளம் - திபெத் எல்லையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பூமி குலுங்கியது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 126 பேர் உயிரிழந்தனர். இதில் 180 பேர் படுகாயமடைந்தனர்.



  • Jan 08, 2025 08:24 IST
    இஸ்ரோ புதிய தலைவர் பேட்டி

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "முக்கியமான பொறுப்பை பிரதமர் கொடுத்து இருக்கிறார். மிக மிக முக்கியமான பொறுப்பு  என நான் நினைக்கிறேன். இஸ்ரோவிற்கு அடுத்ததாக முக்கியமான சில திட்டங்கள் உள்ளன. இஸ்ரோ பணி என்பது தனிப்பட்ட பணி அல்ல. அனைவருடைய கூட்டுப் பணி” ஆகும் என்று கூறியுள்ளார்.



  • Jan 08, 2025 07:53 IST
    இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

    இந்திய ரயில்வே குரூப் டி பிரிவில் 32,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10 ஆம் வகுப்பு முடித்த 18 - 36 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படை சம்பளம் ரூ.18,000 க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணினி வழித்தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு நடைபெறும். ஆர்.ஆர்.பியின் இணையதளத்தில் பிப்ரவரி 22 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வருகிற 23 ஆம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்குகிறது.



  • Jan 08, 2025 07:47 IST
    இபிஎஸ் உறவினர் நிறுவனத்தில் 2வது நாளாக IT அதிகாரிகள் சோதனை

    எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் 2 வது நாளாக தொடரும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ொழிலதிபர் ராமலிங்கத்திற்கு சொந்தமான ஆர்.சி.சி.எல் நிறுவனம், அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்றும்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jan 08, 2025 07:41 IST
    உச்சநீதிமன்ற நீதிபதி - கொலிஜியம் பரிந்துரை

    உச்சநீதிமன்ற நீதிபதியாக வினோத் சந்திரனை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி வினோத் சந்திரன் தற்போது பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.



  • Jan 08, 2025 07:38 IST
    ஜல்லிக்கட்டு முன்பதிவு நிறைவு 

    அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நிறைவடைந்தது. இதுவரை 12,632 காளைகள் 5347 மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.



  • Jan 08, 2025 07:35 IST
    அதிமுக வட்ட செயலாளர் கைது 

    சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் காவல் ஆய்வாளர் அதிமுக 103 வது வட்ட செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குற்றவாளி என கருதப்படும் சதீஷ் என்ற நபருக்கு ஆதரவாக செயல்பட்ட ச்சுதாகரும் சரியாக வழக்கு விசாரணை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Jan 08, 2025 07:32 IST
    மீட்புப் பணி தீவிரம்

    அசாம் மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் ராணுவம், NDRF, SDRF, அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



  • Jan 08, 2025 07:31 IST
    சட்டப்பேரவை கூட்டத்தொடர்

    கேள்வி நேரத்துடன் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.



Tamil News Live Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment