Petrol and Diesel Price: பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் 8 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamilnadu News Update: போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கப்பட்டார்.
India News Update: அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு: மத்திய நிதி அமைச்சர் விளக்கம்
“கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை கடந்த 2 வாரங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் 8 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச விலைக்கு ஏற்ப மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.
Ukraine War Updates: உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படவில்லை; இடமாற்றம்தான் செய்யப்படுகிறது. கீவில் ரஷ்ய படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்ய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
World News Update: “இஸ்ரேல், அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது. ஒரே வாரத்தில் தொடர்ந்து 3 பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய அவசர கூட்டம் கூட்டப்படும்” என்று இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் தெரிவித்தார்.
IPL Update: மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பிதழ் வழங்குகிறார். நீட், மேகதாது அணை, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரையும் முதல்வர் சந்திக்க உள்ளார்.
டெல்லி, யூனியன் பிரதேசம் தொடர்பான எந்த விவகாரமாக இருந்தாலும் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று மக்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இந்த மசோதாவை குஜராத், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கு நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கில் விசாரணை முடியும் வரை நிரந்தர வைப்பீடுகளை முடக்கி வைக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஏப்.7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை அறிவிக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்த நிலையில், புதிய பிரதமராக ஷபாஷ் ஷரீஃப் பதவியேற்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் புட்டோ தகவல் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் மண்வயல் பகுதியில் மதுபாட்டிலில் புகையிலை மற்றும் கம்பி துண்டுகள் இருந்தததால், மது பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்..
திமுகவால் கருத்தியல்களால் நேரடியாக எதிர்க்க முடியவில்லை இரு மாநில ஆளுநராக உள்ள தமிழிசை குறித்த அவதூறு பேச்சை தமிழக மக்கள் கண்டிக்க வேண்டும். சாதாரண மனிதனை கூட பிரதமராக்கும் கட்சி பாஜக மட்டுமே என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பிதழ் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று நள்ளிரவு டெல்லி செல்கிறார்.
இந்த பயணத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரையும் முதல்வர் சந்திக்க உள்ளார்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலர் ஏப்.2ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) முன்னாள் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் மறைந்ததை தொடர்ந்து அவரது மகன் சிராக் பாஸ்வான் தனது தந்தைக்காக ஒதுக்கப்பட்ட பங்களாவில் வசித்து வருகிறார். இந்த பங்களாவை காலி செய்யுமாறு கடந்த ஆண்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் உத்தரவிட்ட நிலையில் சிராக் பாஸ்வான் வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், சிராக் பாஸ்வான் தங்கியிருக்கும் பங்களாவை காலி செய்ய, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எஸ்டேட் இயக்குநரகம் (DoE), இன்று அதிகாரிகள் குழுவை அனுப்பியுள்ளது
வரி செலுத்துவோர் நாளைக்குள் பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்றும், நாளைக்குள் இணைக்காவிடில் ₨500 முதல் ₨1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குளோரைட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 1,500 டன் தென்னைநார் குவியலில் திடீரென தீ பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டெல்லியில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெல்லி மாநகராட்சி இணைப்பு மசோதாவை அவசரமாக கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? என்று மக்களவையில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.75.94ல் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது
கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்ற வனிதாவுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
மத்திய நிதி அமைச்சக சுற்றறிக்கைப்படி அம்பேத்கர் படம் வைக்கலாம் என்பதால், வங்கியில் அம்பேத்கர் புகைப்படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு மீண்டும் பணிநியமனம் வழங்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
விழுப்புரம் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக திருச்சி ஆதிதிராவிட நல அலுவலர் சரவணகுமாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
சாதியக்கண்ணோட்டத்தோடு அரசு அதிகாரியை அவமரியாதை செய்திருக்கும் அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! என சீமான் கூறியுள்ளார்
தமிழகம் முழுவதும் திமுக கவுன்சிலர்கள் தொடர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் பணி செய்யாமல் மாறாக மாமூல் வசூலிக்கும் பணியும், தொடர்ந்து ரவுடியிசமும் செய்து வந்தால் மக்களே அதற்கு தக்க தண்டனையும் கொடுப்பார்கள், மக்களை அச்சுறுத்தி வரும் இத்தகைய நபர்கள் மீது கண்துடைப்பு கைது நாடகமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா இந்த திமுக அரசு? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்
ராஜஸ்தான் சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது தீ விபத்து குறித்து கவலை தெரிவித்ததோடு, அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீஸ் காவலில் உள்ள மாடசாமியை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை இந்தியாவுக்கு வருகை தருகிறார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) புதன்கிழமை அறிவித்தது. பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது இராணுவத் தாக்குதலைத் தொடங்கிய பின்னர், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மிக உயர்ந்த மட்ட பயணமாக இது இருக்கும்.
சீனாவுக்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு லாவ்ரோவ் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “ரஷ்ய கூட்டமைப்பின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் 31 மார்ச்-1 ஏப்ரல் 2022 அன்று புது தில்லிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்வார்” என்று MEA ஒரு வரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 6 முதல் 9ஆம் தேதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3% உயர்த்தி வழங்கப்படவுள்ளது. மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்
உத்தரபிரதேசத்தில் இன்று நடைபெறவிருந்த 12ஆம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் கசிந்ததையடுத்து, 24 மாவட்டங்களில் தேர்வை ரத்து செய்து மாநில தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை, செய்முறை தேர்வு நடைபெறவுள்ளது. செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணை மே 4 ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் முதல்முறையாக ஹைட்ரோஜன் எரிபொருளில் இயங்கும் டொயோட்டா மிராய் காரில் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு வந்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
தமிழகத்தில் ஏப்ரல் 1 வரை 3 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வு அறைக்குள் அனுமதித்த 7ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 2வது விமான நிலையத்திற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்தது. 2 இடங்களை தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். 2வது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி அளித்துள்ளார்.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரி குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கஞ்சா சோதனையில் சுமார் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 350 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், வேன் ஓட்டுநர் பூங்காவனத்தின்(64) காது குறைபாடு தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப் பேரவை ஏப்.6 ஆம் தேதி கூடுகிறது. மானிய கோரிக்கை விவாதம் மே 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இன்று நாடாளுமன்றத்துக்கு ’மிராய்’ எனப்படும் ஹைட்ரஜன் காரில் வந்தார். இந்த கார் தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும்.
Delhi | Union Road Transport & Highways minister Nitin Gadkari rides in a green hydrogen-powered car to Parliament pic.twitter.com/ymwtzaGRCm
— ANI (@ANI) March 30, 2022
தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு தலைவர் தேர்தலில், சுயேட்சை வேட்பாளர் பிரதீப் சந்திரன் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மகாலட்சுமி கருணாகரன் தோல்வியடைந்தார்.
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்ற நிலையில், புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபு நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில், சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக சிறந்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த ’சுகாதார பேரவை’ தொடங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் திமுக அலுவலகம் திறக்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார்.
டெல்லியில் திராவிடக் கோட்டையாக உருவாகியுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயம் ஏப்ரல் 2ஆம் நாள் திறக்கப்படுகிறது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.
டெல்லிக்கு சென்று நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரலில் கட்டிமுடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான சுரங்க நடைபாதை திறக்கப்பட்டுள்ளது.