Advertisment

Tamil News Highlights: இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!

Tamil News LIVE Updates, Petrol price Today, Russia-Ukraine War Updates Sri Lanka Crisis 03 April 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து ரூ.108.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ.99.04க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் பெட்ரோல் ரூ.7.56-ம், டீசல் ரூ.7.61-ம் அதிகரித்துள்ளது.

Advertisment

Tamilnadu updates: நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை சிறைப் பிடித்தது இலங்கை கடற்படை.

ரமலான் நோன்பு தொடக்கம்

ரமலான் நோன்பு தொடங்கியது. ரமலான் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஆகும்.

India News Update : ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியதாக இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது.

World news update: இலங்கையில் சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட சேவைகள் முடங்கியுள்ளன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

IPL update: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 வெற்றிகளைப் பெற்றது.

நடப்பு சாம்பியனான மும்பை இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


  • 22:08 (IST) 03 Apr 2022
    தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும் - செல்லூர் ராஜூ

    தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும் என்றும், சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்


  • 21:24 (IST) 03 Apr 2022
    மகிந்த ராஜபக்சே ராஜினாமா தகவல் உண்மையல்ல - இலங்கை பிரதமர் அலுவலகம்

    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது


  • 20:17 (IST) 03 Apr 2022
    முகக்கவசம் கட்டாயமில்லை; கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

    கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை. தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என தமிழக பொது சுகாதார துறை சட்டத்தில் கட்டுப்பாடுகளை திரும்ப பெற்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது


  • 19:52 (IST) 03 Apr 2022
    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா

    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


  • 19:48 (IST) 03 Apr 2022
    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா

    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


  • 18:39 (IST) 03 Apr 2022
    திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்; மின்னஞ்சல் மூலம் புதிய வினாத்தாள்கள் அனுப்பப்படும் - கல்வித்துறை

    தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த நிலையில், மின்னஞ்சல் மூலமாக பள்ளிகளுக்கு புதிய வினாத்தாள்கள் அனுப்பி தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது


  • 18:38 (IST) 03 Apr 2022
    திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்; மின்னஞ்சல் மூலம் புதிய வினாத்தாள்கள் அனுப்பப்படும் - கல்வித்துறை

    தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த நிலையில், மின்னஞ்சல் மூலமாக பள்ளிகளுக்கு புதிய வினாத்தாள்கள் அனுப்பி தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது


  • 18:06 (IST) 03 Apr 2022
    வளசரவாக்கம் பள்ளி மாணவன் மரணம்; பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு

    சென்னை, வளசரவாக்கத்தில் தனியார் பள்ளிப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது


  • 18:06 (IST) 03 Apr 2022
    வளசரவாக்கம் பள்ளி மாணவன் மரணம்; பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு

    சென்னை, வளசரவாக்கத்தில் தனியார் பள்ளிப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது


  • 17:52 (IST) 03 Apr 2022
    அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது


  • 17:45 (IST) 03 Apr 2022
    'RRR' திரைப்படம் போல், இந்திய பொருளாதாரமும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது - பியூஷ் கோயல்

    'RRR' திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது போல், இந்திய பொருளாதாரமும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 40 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்


  • 17:27 (IST) 03 Apr 2022
    12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் லீக்

    நாளை நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல் கட்ட திருப்புதல் தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான நிலையில் மீண்டும் லீக் ஆகியுள்ளது


  • 17:01 (IST) 03 Apr 2022
    தமிழ்நாடு இழந்த பெருமையை திமுக அரசு விரைவில் மீட்டெடுக்கும் - மு.க. ஸ்டாலின்

    முதல்வர் மு.க.ஸ்டாலின்: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியை குறை சொல்லாமல், 10 மாதங்களாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாடு இழந்த பெருமையை திமுக அரசு விரைவில் மீட்டெடுக்கும் என்று கூறினார்.


  • 16:46 (IST) 03 Apr 2022
    இலங்கையில் முடக்கப்பட்டிருந்த சமூக வலைதள சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது

    இலங்கையில் முடக்கப்பட்டிருந்த சமூக வலைதள சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. அவசர நிலை பிரகடனம் காரணமாக முடக்கப்பட்ட வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது.


  • 16:03 (IST) 03 Apr 2022
    டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணி மீது வலுவான ஆதாரம் உள்ளது - தமிழ்நாடு அரசு

    மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வலுவான ஆதாரங்கள் உள்ளது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தனது பதில் மனுவில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.


  • 14:14 (IST) 03 Apr 2022
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு; தேர்தலை எதிர்கொள்ள மக்களுக்கு இம்ரான் கான் வேண்டுகோள்

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று அந்நாட்டு அதிபர் ஆரிப் அல்வி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார். இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. தேர்தலை எதிர்கொள்ள தயாராகுமாறு மக்களுக்கு இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்தார்.


  • 13:39 (IST) 03 Apr 2022
    உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி

    மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 7வது முறையாக மகுடம் சூடியது ஆஸி. மகளிர் அணி


  • 13:31 (IST) 03 Apr 2022
    உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி

    மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 7வது முறையாக மகுடம் சூடியது ஆஸி. மகளிர் அணி


  • 13:20 (IST) 03 Apr 2022
    பாக். நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு இம்ரான் கான் கடிதம்

    பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்த இம்ரான் கான் அதிரடி முடிவு. இதுகுறித்து ஜனாதிபதிக்கு, அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார். தனக்கு எதிராக அந்நிய நாடு சதி செய்வதாக குற்றச்சாட்டியுள்ளார்.


  • 13:10 (IST) 03 Apr 2022
    நம்பிக்கையில்லா தீர்மானம் - வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

    பாகிஸ்தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறாது என நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 5க்கு எதிரானது என அறிவிக்கப்பட்டது.


  • 13:02 (IST) 03 Apr 2022
    நம்பிக்கையில்லா தீர்மானம் - வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

    பாகிஸ்தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறாது என நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 5க்கு எதிரானது என அறிவிக்கப்பட்டது.


  • 12:48 (IST) 03 Apr 2022
    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. ஏப்.7ல் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 12:44 (IST) 03 Apr 2022
    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. ஏப்.7ல் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 12:29 (IST) 03 Apr 2022
    சென்னயில் பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

    சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


  • 12:11 (IST) 03 Apr 2022
    பிரச்னைகளை பேசி தீர்ப்போம்! -பாகிஸ்தான் ராணுவத் தளபதி

    இந்தியா பாகிஸ்தான் இடையேயான முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயார் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி பாஜ்வா தெரிவித்தார். இந்தியா சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னை பாகிஸ்தானுக்கு மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்தார்.


  • 11:57 (IST) 03 Apr 2022
    திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

    திருச்செந்தூரில் கரையில் இருந்து சுமார் 200 அடி தூரம் வரை கடல்நீர் உள்வாங்கியுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 200 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியதால் பாசி படர்ந்த மண் திட்டுகள் தென்பட்டது.


  • 11:51 (IST) 03 Apr 2022
    யார் காலிலும் விழுவதற்காக டெல்லி செல்லவில்லை - முதல்வர்

    யார் காலிலும் விழுவதற்காக டெல்லி செல்லவில்லை. தமிழகத்தின் உரிமைக்காகவே சென்றேன். ஏனெனில் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். துபாய்க்கு பல கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் பேசியுள்ளார். இபிஎஸ்க்கு நமது கூட்டணிக் கட்சி தலைவர்கள் பதிலளித்துவிட்டதால் மேலும் பேசத் தேவையில்லை என திருவான்மியூரில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க ஸ்டாலின் பேசினார்.


  • 11:37 (IST) 03 Apr 2022
    திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

    திருச்செந்தூரில் கரையில் இருந்து சுமார் 200 அடி தூரம் வரை கடல்நீர் உள்வாங்கியுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 200 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியதால் பாசி படர்ந்த மண் திட்டுகள் தென்பட்டது.


  • 11:18 (IST) 03 Apr 2022
    1 முதல் 9ம் வகுப்பு வரை இறுதி தேர்வு நிச்சயம் நடைபெறும் -அன்பில் மகேஷ்

    தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை இறுதி தேர்வு நிச்சயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


  • 11:13 (IST) 03 Apr 2022
    நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி 144 தடை உத்தரவு

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அருகே கூடும்படி தனது ஆதரவாளர்களுக்கு இம்ரான் அழைப்பு விடுத்த நிலையில், 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.


  • 10:57 (IST) 03 Apr 2022
    உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை!

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலை வரும் 6ம் தேதி திறக்கப்பட உள்ளது!


  • 10:46 (IST) 03 Apr 2022
    இங்கிலாந்துக்கு 357 ரன்கள் இலக்கு!

    மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 357 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அலிசியா ஹீலி 170 ரன்கள் விளாசினார்.


  • 10:33 (IST) 03 Apr 2022
    இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


  • 10:19 (IST) 03 Apr 2022
    சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும்-வியாபாரிகள் வலியுறுத்தல்

    டீசல் விலை உயர்வு எதிரொலியால் காய்கறி ஏற்றி வரும் வாகனங்களில் வாடகைக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால், சுங்கச்சாவடி கட்டணத்தை ஒன்றிய அரசு குறைக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  • 09:55 (IST) 03 Apr 2022
    திருப்பதியில் ஷீ ஆட்டோ

    திருப்பதியில் பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய, ஷீ ஆட்டோ என்ற பெயரில் பெண் ஓட்டுநர்கள் இயக்கும் ஆட்டோக்களை போலீஸார் அறிமுகம் செய்தனர்.


  • 09:37 (IST) 03 Apr 2022
    ஜூன் 13ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும்-பள்ளிக் கல்வித் துறை

    நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ம் தேதி எனவும், 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


  • 09:23 (IST) 03 Apr 2022
    மெக்காவில் சிறப்பு வழிபாடு

    ரமலான் மாதம் தொடங்கியதை யொட்டி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


  • 09:11 (IST) 03 Apr 2022
    புதிய வகை வைரஸ்

    ஒமைக்ரான் உருமாற்ற வைரஸை விட வேகமாக பரவும் எக்ஸ்இ என்ற புதிய வைரஸ் இங்கிலாந்து பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


  • 09:04 (IST) 03 Apr 2022
    1-12 ம் வகுப்பு வரை தேர்வு நடைபெறும்- பள்ளிக் கல்வித் துறை

    1 முதல் 12 ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


  • 08:46 (IST) 03 Apr 2022
    தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு

    கடந்த 30ம் தேதி ரூ.6க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.


  • 08:40 (IST) 03 Apr 2022
    பீஸ்ட் பட டிரெய்லர் சாதனை

    நடிகர் விஜயின் பீஸ்ட் பட டிரெய்லர் வெளியாகி 12 மணி நேரத்திலேயே 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


  • 08:21 (IST) 03 Apr 2022
    இம்ரான் அரசு கவிழுமா?

    பாகிஸ்தானில் இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

    பாகிஸ்தான் விடுதலை பெற்ற பிறகு பதவியேற்ற எந்த அரசும், இதுவரை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தது இல்லை என்ற சோகத்தை இம்ரான்கான் மாற்றுவாரா என அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment