Petrol and Diesel Price: சென்னையில் 99-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: நீட் ஒழிப்பிற்கான ரகசியமே பாஜகவிற்கு அடிமையாக இல்லாமல் இருப்பது தான் என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
India News Update: மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பறிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். ஆளுநரிடம் இருந்து நீட் தேர்வு விலக்கு மசோதா கிடைக்கப்பெற்ற பிறகு குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குவாட் உச்சி மாநாடு: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
Cricket News Update: இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் ஆட்டம் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
Corona update: உலகளவில் இதுவரை 40.60 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 32.58 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 58.07 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
- 21:50 (IST) 11 Feb 2022கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
- 20:54 (IST) 11 Feb 2022IND vs WI; 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; 3-0 என தொடரை முழுமையாக வென்ற இந்தியா
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது
- 20:36 (IST) 11 Feb 2022மருத்துவ மாணவர் சேர்க்கை - கல்லூரி ஒதுக்கீடு விவரம் அறிவிப்பு
இளநிலை மருத்துவச் சேர்க்கையின் மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீடு விவரம் இணையதளத்தில் வெளியாகிறது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் தங்களுக்கான ஒதுக்கீட்டு விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்
- 20:00 (IST) 11 Feb 2022கடல்சார் நாகரீகமாக இந்தியா - ஒரே பெருங்கடல் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை
இந்தியா எப்போதும் கடல்சார் நாகரீகமாகவே இருந்து வருகிறது என ஒரே பெருங்கடல் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், ஒருமுறை மட்டும் உபயோகப்படுத்தும் நெகிழி பயன்பாட்டை தவிர்க்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் மோடி கூறினார்
- 19:52 (IST) 11 Feb 2022தமிழகத்தில் மேலும் 3,086 பேருக்கு கொரோனா; 25 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் மேலும் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
- 19:24 (IST) 11 Feb 2022வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்
காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து கே.எல்.ராகுல், அக்ஷர் படேல் விலகியுள்ளனர். இருவரும் விலகியுள்ள நிலையில் ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்
- 19:05 (IST) 11 Feb 2022கோயில் நிலங்களின் வாடகை பாக்கியை வசூலிக்கும் அறநிலையத்துறை; ஐகோர்ட் பாராட்டு
கோயில் நிலங்களின் வாடகை பாக்கியை இந்து சமய அறநிலையத்துறை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருவதை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது
- 18:46 (IST) 11 Feb 2022கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவதாக தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது
- 17:02 (IST) 11 Feb 2022ஹிஜாப் போராட்டம்: மாணவிகளின் மொபைல் எண்கள் பொதுவெளியில் வெளியீடு: போலீசில் புகார்!
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்,பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.விஷ்ணுவர்தனை சந்தித்த ஹிஜாப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவிகளின் பெற்றோர், ”எங்கள் பிள்ளைகளின் மொபைல் எண்களை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் வெளியிட்டுள்ளனர். இதனை சிலர் தவறாகப் பயன்படுத்தலாம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர்.
- 16:42 (IST) 11 Feb 2022உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் உத்தரவு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க மக்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளார். மேலும் அமெரிக்க மற்றும் ரஷ்ய படைகள் சண்டையிடும் போது ஒருவரையொருவர் தாக்கி கொண்டால் ரஷ்யாவுடன் பெரும் மோதலை ஏற்படுத்த கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- 16:25 (IST) 11 Feb 2022ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ரத்து!
அதிமுக மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது
- 16:24 (IST) 11 Feb 2022சென்னை-பெங்களூரு இடையே புல்லட் ரயில்?
சென்னை-பெங்களூரு-மைசூரு உட்பட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்கள் அமைப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் அளித்துள்ளார்.
- 16:23 (IST) 11 Feb 2022ஊரடங்கு தளர்வுகள்: வரும் 14 ஆம் தேதி ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வரும் 14 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
- 15:59 (IST) 11 Feb 2022மேகதாது விவகாரம்: காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழக அரசு தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அது குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, விவாதம் கைவிடப்பட்டது.
- 15:33 (IST) 11 Feb 2022ஆக்கிரமிப்பு விவகாரம்: உயர் நீதிமன்றம் அதிருப்தி!
ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் ஆக்கிரமிப்பாளர்கள் தடை உத்தரவை பெற்று விடுகின்றனர் என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
- 15:30 (IST) 11 Feb 2022டாடா சன்ஸ்: சந்திரசேகரன் மீண்டும் தலைவராக தேர்வு!
உலகெங்கிலும் தொழில் முனைந்து வரும் இந்திய நிறுவனமாக டாடா சன்ஸ் நிறுவனம் வலம் வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏற்கனவே நிர்வாக தலைவராக பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் மீண்டும் ஒருமுறை நிர்வாக தலைவராக தேர்வு செயப்பட்டுள்ளார்.
- 15:11 (IST) 11 Feb 2022"கிரிப்டோ கரன்சிக்கு வரி விதிப்பது அரசின் உரிமை" - நிர்மலா சீதாராமன்!
மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரிப்டோ கரன்சி தொடர்பாக உரிய ஆலோசனைக்கு பிறகே முடிவெடுக்கப்படும் என்றும், கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்திற்கு வரி விதிப்பது என்பது அதனை அங்கீகரிப்பது என்று அர்த்தமாகாது" என்றும், வரி விதிப்பது அரசின் உரிமை என்றும் அவர் தெரிவித்தார்.
- 15:08 (IST) 11 Feb 20226 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!
குஜராத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்புப்படை கைது செய்துள்ளது.
- 15:08 (IST) 11 Feb 20226 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!
குஜராத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்புப்படை கைது செய்துள்ளது.
- 14:44 (IST) 11 Feb 2022சூட்கேசில் பெண் சடலம் மீட்பு.. ஒருவன் கைது!
திருப்பூர், தாராபுரம் சாலை அருகே சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜெய்லால் சவ்ரா(27) என்பவனை, காவல் ஆய்வாளர் சரவணன் ரவி தலைமையிலான தனிப்படை ஓசூரில் வைத்து கைது செய்தது.
- 14:41 (IST) 11 Feb 2022தேர்தல்.. விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாது!
உள்ளாட்சி தேர்தல் நாளான 19-ம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு’ ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாது. மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அரசு உத்தரவிட்டுள்ளது.
- 14:41 (IST) 11 Feb 2022தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் சில மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும்.
- 13:57 (IST) 11 Feb 2022தேர்தல்.. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரத்துக்கு அனுமதி!
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு’ காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதியளித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- 13:36 (IST) 11 Feb 2022முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்..
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிழைகளை திருத்த’ முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 13:09 (IST) 11 Feb 2022டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
- 12:45 (IST) 11 Feb 2022கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிப்பதா, வேண்டாமா? ஆலோசனைக்கு பிறகு முடிவு
கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிப்பதா, வேண்டாமா என்பது தொடர்பான முடிவை ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்திற்கு வரி விதிப்பது அதை அங்கீகரிப்பதற்கு அர்த்தமாகாது; வரி விதிப்பது அரசின் உரிமை என்று நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பேச்சு.
- 12:43 (IST) 11 Feb 2022மாநிலங்களவை மார்ச் 14-ம் தேதி காலை 10 மணி வரை ஒத்திவைப்பு
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற மார்ச் 14ம் தேதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
- 12:32 (IST) 11 Feb 2022புதிய தர்பார் அரங்கை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்
மகாராஷ்ரா தலைநகர் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் கட்டப்பட்டுள்ள புதிய தர்பார் அரங்கை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்
- 11:45 (IST) 11 Feb 2022சிதம்பரம் பகுதியில் மழை
சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- 11:42 (IST) 11 Feb 202210.5% இட ஒதுக்கீடு ரத்து - திட்டமிட்டபடி விசாரணை நடைபெறும் - உச்ச நீதிமன்றம்
வன்னியர் 10.5% இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை திட்டமிட்டபடி பிப்ரவரி 15, 16ஆம் தேதி நடைபெறும் என்று கூறி, மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம்.
- 11:31 (IST) 11 Feb 2022விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு விசாரணை செய்தது. இந்த விசாரணை அறிக்கை நகலை அவருக்கு அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 11:28 (IST) 11 Feb 2022கீழடி 8ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
கீழடியில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
- 10:36 (IST) 11 Feb 2022முதல்வரின் சவாலை ஏற்கிறோம்: எடப்பாடி பழனிசாமி
நீட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாவலுக்கு நாங்கள் தயார். பொது இடத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க ஓபிஎஸ்-ம் நானும் தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- 10:24 (IST) 11 Feb 2022கொடைக்கானல்: வேலியில் சிக்கிய விலங்கு மீட்பு
கொடைக்கானலில் வேலியில் சிக்கி பின்னங்கால் உடைந்த காட்டெருமையை பத்திரமாக வனத் துறையினர் மீட்டனர்.
- 10:10 (IST) 11 Feb 2022இந்தியாவில் 171.79 கோடி கொரோனா தடுப்பூசிகள்
இந்தியாவில் 171.79 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரே நாளில் 48,18,867 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 74.76 கோடி மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரே நாளில் 14,91,678 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 09:39 (IST) 11 Feb 2022''தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அங்கீகாரம் அவசியம்''
பி.இ, பி.டெக் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் முழு அங்கீகாரம் அவசியம் என்று பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இனி பகுதியளவில் அங்கீகாரம் அளிக்கப்படாது எனவும் அறிவித்தது.
- 09:32 (IST) 11 Feb 2022சூரப்பா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
நீதிபதி கலையரசன் விசாரணை குழுவுக்கு எதிராக சூரப்பா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
- 09:24 (IST) 11 Feb 2022தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீது 14ந்தேதி விசாரணை
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.
- 09:23 (IST) 11 Feb 2022விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்: நெல்லையில் சோதனை வெற்றி
நெல்லையில் காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் "சி.இ 20 கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- 09:19 (IST) 11 Feb 2022தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீது 14ந்தேதி விசாரணை
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.
- 09:02 (IST) 11 Feb 2022கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி: முதல்வர் இன்று தொடங்கி வைப்பு
கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அரியலூர் கங்கைகொண்ட சோழபுரத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.
- 09:00 (IST) 11 Feb 2022கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி: முதல்வர் இன்று தொடங்கி வைப்பு
கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அரியலூர் கங்கைகொண்ட சோழபுரத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.
- 08:49 (IST) 11 Feb 2022சத்தியமங்கலம்: அணிவகுத்து நின்ற லாரிகள்
சத்தியமங்கலத்தில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் ஆயிரக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
- 08:49 (IST) 11 Feb 2022சத்தியமங்கலம்: அணிவகுத்து நின்ற லாரிகள்
சத்தியமங்கலத்தில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் ஆயிரக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
- 08:41 (IST) 11 Feb 2022கேரளா: மலை இடுக்கில் இருந்து மீட்கப்பட்டவர் இன்று டிஸ்சார்ஜ்
கேரளாவில் மலை இடுக்கில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
- 08:39 (IST) 11 Feb 2022கும்பகோணம் மாவட்டமாக உருவாக்கப்படும்- உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
கும்பகோணம் மாவட்டமாக உருவாக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.