சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 268.50 உயர்ந்து ரூ. 2,406க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 965.50க்கு விற்பனையாகிறது.
Tamilnadu News Update: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.
India News Update:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
விரைவில் உள்நாட்டு 4 ஜி
விரைவில் உள்நாட்டு 4 ஜி மொபைல் சேவை வந்துவிடும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்தார்.
Ukraine War Updates
உக்ரைன் உடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
IPL Update
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 6ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:28 (IST) 31 Mar 2022கோவையில் ஏவியேஷன் டெக்னாலஜி கோவையில் ஏவியேஷன் டெக்னாலஜி ஹப் அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கைஹப் அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி: பாதுகாப்புத்துறை தொடர்பான தொழில்கள் தொடங்க தமிழ்நாடு உகந்த மாநிலம் என்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கோவையில் ஏவியேஷன் டெக்னாலஜி ஹப் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளேன்” என்று கூறினார்.
- 19:55 (IST) 31 Mar 2022சென்னையில் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் ஸ்விக்கி, சோமாட்டோ மற்றும் டன்சோ போன்ற உணவு நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் மீது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஸ்விக்கி, சோமாட்டோ மற்றும் டன்சோ போன்ற உணவு டெலிவரி ஊழியர்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக இன்று ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
- 19:30 (IST) 31 Mar 2022பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தவிருந்த பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அமர்வின் தொடக்கத்தில், பிரதமரின் சிறப்பு உதவியாளர் பாபர் அவான், இந்த அமர்வை ஒத்திவைக்கும் தீர்மானத்தை முன்வைத்தார். இதனால் மாலை 6 மணிக்கு நடைபெறவிருந்த தேசிய பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்திற்கு நாடாளுமன்ற அரங்கை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
- 18:47 (IST) 31 Mar 2022பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சரான பின் எனது 3வது டெல்லி பயணம். கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்து வழங்க அனுமதி கோரியுள்ளோம் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
- 18:46 (IST) 31 Mar 2022பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சரான பின் எனது 3வது டெல்லி பயணம். கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்து வழங்க அனுமதி கோரியுள்ளோம் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
- 18:19 (IST) 31 Mar 2022மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்தி அமைச்சர்கள் பலரை சந்தித்து வரும் நிலையில, தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
- 18:14 (IST) 31 Mar 2022மகாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க அரசு முடிவு
மகாராஷ்டிராவில் வரும் ஏப்ரல் 2-ந்தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே குர்றியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்குவதாகவும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
- 17:30 (IST) 31 Mar 2022டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நாளை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்தி அமைச்சர்கள் பலரை சந்தித்து வரும் நிலையில, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 17:26 (IST) 31 Mar 2022மாற்றுதிறனாளிகள் கல்விக்கட்டண விலக்கு தொடர்பான மனு - துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவு
மாற்றுதிறனாளிகள் சட்டத்தின் கீழ் பள்ளி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பரமக்குடியை சேர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
- 16:45 (IST) 31 Mar 2022டெல்லி முதல்வரை நாளை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். டெல்லி மெகல்லா கிளினிக், அரசு பள்ளிகளை கெஜ்ரிவாலுடன் இணைந்து பார்வையிடுகிறார்.
- 16:25 (IST) 31 Mar 2022யுபிஎஸ்சி தேர்வு - பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
கொரோனா பாதிப்பால் யுபிஎஸ்சி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு வழங்குவது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 16:06 (IST) 31 Mar 2022அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த முதல்வர்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆய்வுக்கூடம் அமைத்தல் தொடர்பாக கோரிக்கை அளிக்கப்பட்டது.
- 15:58 (IST) 31 Mar 2022அணை பாதுகாப்பு ஆணையத்தில் முல்லைபெரியாறு உள்ளதா? உச்ச நீதிமன்றம் கேள்வி
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் முல்லை பெரியாறு கொண்டு வரப்பட்டுவிட்டதா? என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஆணையம் என்னென்ன அதிகாரங்களுடன் செயல்படும் என எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 15:43 (IST) 31 Mar 2022அமித்ஷாவுடன் முதல்வர் சந்திப்பு
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். தமிழக ஆளுநரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதாக தகவல்
- 15:34 (IST) 31 Mar 2022நிதின் கட்கரியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கான நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை விவரங்களை அளித்தார்.
- 15:23 (IST) 31 Mar 2022சட்ட வல்லுநர்களுடன், கலந்தாலோசித்து நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்
வன்னியருக்கான 10.5 % உள் ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன், கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
- 15:12 (IST) 31 Mar 2022ஊழலுக்கு எதிரான நெருப்பைப் போன்றவர் மோடி - இபிஎஸ்
டெல்லி பயணத்தின் மர்மத்தை மக்களுக்கு விளக்குவாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? ஊழலுக்கு எதிரான நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் பிரதமர் மோடி என்பதை திமுகவினர் விரைவில் உணர்வர் என எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- 14:45 (IST) 31 Mar 2022பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் வைத்த கோரிக்கைகள்
மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயை பகிர்ந்தளிக்க வேண்டும்
50% மத்திய, மாநில நிதி பங்களிப்புடன் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும்; புதிய ரயில்வே திட்டங்களை அறிவிக்க வேண்டும்
தமிழகத்தில் டி.ஆர்.டி.ஓ ஆய்வகத்தை அமைக்க வேண்டும்
கூடங்குளம் அணுக்கழிவுகளை சேமிக்காமல், ரஷ்யாவிற்கே திருப்பி அனுப்ப வேண்டும்
- 14:26 (IST) 31 Mar 2022மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது - பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது என பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்
- 14:18 (IST) 31 Mar 2022கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
- 14:16 (IST) 31 Mar 2022நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
- 13:55 (IST) 31 Mar 2022டெல்லியில் பிரதமர் மோடி - ஸ்டாலின் சந்திப்பு நிறைவு
டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஸ்டாலின் இடையேயான சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது
- 13:45 (IST) 31 Mar 2022நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி - ஸ்டாலின் சந்திப்பு தொடக்கம்
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்று வருகிறது. திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுக்கிறார்.
மேலும், தமிழக வளர்ச்சி திட்டங்கள், நிதி பங்கீடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கிறார். அதேநேரம் நீட் விலக்கு மசோதா, மேகதாது அணை, மாநில உரிமைகள் குறித்தும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Tamil Nadu CM @mkstalin called on PM @narendramodi. @CMOTamilnadu pic.twitter.com/PK7Q64bHzY
— PMO India (@PMOIndia) March 31, 2022 - 13:34 (IST) 31 Mar 2022சிவகார்த்திகேயன் உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளார்; ஞானவேல் ராஜா பதில் மனு
சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளார். சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே ’மிஸ்டர் லோக்கல்' படம் எடுக்கப்பட்டது. மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்
- 13:27 (IST) 31 Mar 2022நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி - ஸ்டாலின் சந்திப்பு தொடக்கம்
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்று வருகிறது. திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுக்கிறார்.
மேலும், தமிழக வளர்ச்சி திட்டங்கள், நிதி பங்கீடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கிறார். அதேநேரம் நீட் விலக்கு மசோதா, மேகதாது அணை, மாநில உரிமைகள் குறித்தும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Tamil Nadu CM @mkstalin called on PM @narendramodi. @CMOTamilnadu pic.twitter.com/PK7Q64bHzY
— PMO India (@PMOIndia) March 31, 2022 - 13:18 (IST) 31 Mar 2022100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ 949 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ949 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் 75%, மாநில அரசு சார்பில் 25% நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது
- 13:12 (IST) 31 Mar 2022காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இன்னும் சற்றுநேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள நிலையில், சோனியாவுடனான முதல்வரின் சந்திப்பு அமைந்தது
- 13:01 (IST) 31 Mar 2022நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார் முக ஸ்டாலின்
தமிழ்நாடு இல்லத்தில் இருந்து நாடாளுமன்றம் வந்த முக ஸ்டாலினை வரவேற்றனர் திமுக எம்.பிக்கள். டி.ஆர்.பாலு, ஆ. ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் அவரை வரவேற்றனர். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நாடாளுமன்றம் வருகை புரிந்துள்ளார் முக ஸ்டாலின்.
- 12:22 (IST) 31 Mar 2022மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
டெல்லிக்கு சென்றிருக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயம் அலுவலகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்க உள்ளார் அவர்.
- 11:57 (IST) 31 Mar 2022எலக்ட்ரிக் வாகனங்கள் வெடித்த சம்பவங்கள் - தடயவியல் விசாரணைக்கு உத்தரவு
எலக்ட்ரிக் வாகனங்கள் வெடித்த சம்பவங்கள் தொடர்பாக உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவையில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
- 11:34 (IST) 31 Mar 2022விருதுநகர் பாலியல் வழக்கு: 3 பேரின் சமூக வலைதள கணக்குகளை முடக்கியது சி.பி.சி.ஐ.டி.
விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 8 நபர்களில் ஹரிஹரன் உட்பட 3 பேரின் சமூக வலைதள கணக்குகளை முடக்கியது சி.பி.சி.ஐ.டி.
- 10:57 (IST) 31 Mar 2022வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 10:49 (IST) 31 Mar 2022சுப்பையா பணியிடை நீக்கத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
ஏ.பி.வி.பி அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் சுப்பையா, பணியிடை நீக்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 12 வாரங்களுக்குள் அவர் மீதான விசாரணையை முடிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 10:35 (IST) 31 Mar 2022விருதுநகர் பாலியல் விவகாரம்-சிபிசிஐடி விசாரணை
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் காவலில் உள்ள ஹரிஹரன் மற்றும் ஜூனத் அகமதுவிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
- 10:25 (IST) 31 Mar 2022எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு-ராகுல் தலைமையில் போராட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- 10:19 (IST) 31 Mar 2022ஜூலை 27 முதல் சென்னை செஸ் ஒலிம்பியாட்
சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜுலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடக்க உள்ளன என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
- 09:59 (IST) 31 Mar 2022பெட்ரோல்-டீசலுக்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்-மத்திய நிதி அமைச்சர்
10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியிருப்பதால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- 09:39 (IST) 31 Mar 20222024 வரை புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை
2024-ம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை விதித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
- 09:33 (IST) 31 Mar 2022சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்த இன்றே கடைசி நாள்; வரி செலுத்த தவறினால் வட்டி விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 09:15 (IST) 31 Mar 2022சுங்கச் சாவடி கட்டணங்கள் அதிகரிப்பு
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.240 வரை கட்டணம் அதிகரிக்கிறது.
- 09:02 (IST) 31 Mar 2022நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு
சென்னை அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.50 என இருந்த நிலையில் நள்ளிரவு முதல் ரூ.70 ஆக உயர்த்தப்பட உள்ளது.
- 09:02 (IST) 31 Mar 2022லூலூ நிறுவனம் தமிழ்நாடு வருவது மகிழ்ச்சி-முன்னாள் அதிமுக அமைச்சர்
லூலூ நிறுவனம் தற்போது தமிழ்நாட்டுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
- 09:02 (IST) 31 Mar 2022லூலூ நிறுவனம் தமிழ்நாடு வருவது மகிழ்ச்சி-முன்னாள் அதிமுக அமைச்சர்
லூலூ நிறுவனம் தற்போது தமிழ்நாட்டுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
- 08:53 (IST) 31 Mar 2022நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு
சென்னை அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.50 என இருந்த நிலையில் நள்ளிரவு முதல் ரூ.70 ஆக உயர்த்தப்பட உள்ளது.
- 08:42 (IST) 31 Mar 202230ஆயிரம் நியாய விலை கடைகளுக்கு மானியம்
30 ஆயிரம் நியாயவிலை கடைகளுக்கு மானியம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது .
- 08:31 (IST) 31 Mar 2022மதுரையில் மீன்பிடி திருவிழா
மதுரை கேசம்பட்டியில் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் பங்கேற்றனர். கட்லா, ரோகு, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.