பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.
மேட்டுர் அணை நிலவரம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,960 கன அடியாக சரிந்தது. அணையின் நீர் மட்டம் 119.46 அடியாகவும், நீர் இருப்பு 92.613 டி.எம்.சி.யாகவும் உள்ளது. விநாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 26, 2024 00:10 IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான ஞானசேகரனுக்கு எலும்பு முறிவு; கை, காலில் மாவுக்கட்டு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை போலீசார் கைது செய்யும்போது தப்பி ஓடியதால், இடதுகால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
Dec 25, 2024 23:48 IST
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க டிசம்பர் 26-ம் தேதி
காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க அறிவித்துள்ளது. -
Dec 25, 2024 22:44 IST
எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மரணம்; இருதயபூர்வ அஞ்சலி தெரிவித்த கமல்ஹாசன்
மலையாள இலக்கியம் மற்றும் மலையாள சினிமா உலகின் ஜாம்பவான் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார். அவருக்கு வயது 91. எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் இருதயபூர்வமான அஞ்சலி தெரிவித்துள்ளார்.
-
Dec 25, 2024 21:37 IST
மாணவி பாலியல் வன்கொடுமை: கைதானவர் தி.மு.க பிரமுகர் அல்ல; அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கோவி. செழியன் மறுப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் தி.மு.க பிரமுகர் என தெரிகிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், கைதானவர் தி.மு.க் பிரமுகர் அல்ல என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். மேலும், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் தி.மு.க பிரமுகர் பொய்; அண்ணாமலை கூறியது தவறான தகவல்; எது நடந்தாலும் தி.மு.க-வை குறை சொல்வது என்பது அண்ணாமலையின் பிறவி குணம்; அதன் அடிப்படையில் சொல்கிறாரே தவிர, உண்மைல்ல” என்று அமைச்சர் கோவி. செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
Dec 25, 2024 21:26 IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் தி.மு.க பிரமுகர் - அண்ணாமலை குற்றச்சாட்டு
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் தி.மு.க் பிரமுகர் என தெரிகிறது; கைதானவர் தி.மு.க-வினருடன் நெருக்கம் வைத்து அக்கட்சி உறுப்பினராகி உள்ளார். தி.மு.க-வினரின் அழுத்தத்தால் கைதானவர் மீதான வழக்குகளை போலீஸ் விசாரிக்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.
— K.Annamalai (@annamalai_k) December 25, 2024
தமிழகம் முழுவதும், இதுபோன்ற… pic.twitter.com/K1ahEoIqE0 -
Dec 25, 2024 20:35 IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 25, 2024 19:41 IST
அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: எத்தனை கொடூரங்களை சகித்துக் கொள்வது? - சீமான்
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க ஆட்சியில் இஒன்னும் எத்தனை கொடூரங்களை சகித்துக் கொள்ள வேண்டும். மதுக்கடைகள் காரணமாக இந்தியாவிலே அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறி இருப்பதுதான் தி.மு.க ஆட்சியின் சாதனை” என்று சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
Dec 25, 2024 18:52 IST
பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி அளிக்கிறது; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விஜய் வலியுறுத்தல்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்: “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் நிர்பயா நிதியில் உரிய வசதிகள் செய்ய வேண்டும். பெண்கள் தங்களை தற்காப்பது தொடர்பாக சட்ட உதவி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 25, 2024 17:31 IST
"பாலியல் தொல்லை விவகாரம் - அரசியலாக்க வேண்டாம்"
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட மாணவிக்கு நிகழ்ந்த சம்பவத்தை அரசியலாக்க முயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Dec 25, 2024 16:52 IST
பாலியல் தொல்லை - ஒருவர் கைது
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 25, 2024 16:45 IST
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 25, 2024 16:09 IST
சென்னை புழல் சிறையில் தீ விபத்து
சென்னை புழல் சிறையில் தீ விபத்து ஏற்பட்டது. காகிதங்களை அரைத்து அடை தயாரிப்புக்கு சேமிக்கும் இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
-
Dec 25, 2024 16:06 IST
"குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவர்"
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரத்தில், குற்றவாளிகள் அனைவரும் விரைவில் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள் என உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
Dec 25, 2024 15:24 IST
அண்ணா பல்கலை. விவகாரம்: போராட்டம் தற்காலிக வாபஸ்
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. மாணவி பாலியல் புகார் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
-
Dec 25, 2024 15:13 IST
விமான விபத்தில் 42 பேர் உயிரிழப்பு
கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 42 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.
-
Dec 25, 2024 15:01 IST
மாணவி பாலியல் வன்கொடுமை; அண்ணா பல்கலை. பதிவாளர் அறிக்கை
காவல் துறை விசாரணைக்கு பல்கலைக்கழகம் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். மாணவியின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்
-
Dec 25, 2024 14:02 IST
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் நடுநிலையாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் நுழைவுவாயில் இழுத்து மூடப்பட்டது
-
Dec 25, 2024 14:00 IST
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவம்; கூடுதல் வழக்கு பதிவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கூடுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவியை சில நாட்களாக பின் தொடர்ந்து அந்த நபர் இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். பல்கலைக்கழக விடுதி வளாகத்தை சுற்றி இருக்கக்கூடிய சில பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. அடையாள அணிவகுப்பு நடத்தி குற்றவாளியை கண்டறிய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Dec 25, 2024 13:27 IST
அ.தி.மு.க ஐ.டி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்
அ.தி.மு.க ஐ.டி விங் தலைவராக கோவை சத்யனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். ஐ.டி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், மாணவரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
-
Dec 25, 2024 13:22 IST
கஜகஸ்தானில் 110 பேருடன் பயணித்த விமானம் விபத்து
கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் நகருக்கு அருகே புதன்கிழமை பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது மற்றும் உயிர் பிழைத்தவர்கள் இருப்பதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று மத்திய ஆசிய நாட்டின் அவசரகால அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
Dec 25, 2024 13:19 IST
சூர்யா நடிக்கும் "ரெட்ரோ" படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிக்கும் "ரெட்ரோ" படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
-
Dec 25, 2024 12:59 IST
அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விசாரணை குழு அமைப்பு
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்ததாக சொல்லப்படும் மாணவரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை விசாரித்து வருகிறது
-
Dec 25, 2024 12:26 IST
மதுரையில் 94 மூட்டை குட்கா பறிமுதல்
மதுரையில் கண்டெய்னர் லாரிகளில் விற்பனைக்காக கடத்திவரப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான குக்காளை பொருட்கள் சிக்கியது. கிருஷ்ணகிரியில் இருந்து மதுரைக்கு 94 மூட்டைகளில் குட்காவை கடத்தி வந்த லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு 10 லட்சம்
-
Dec 25, 2024 12:19 IST
வாஜ்பாய் குறித்து எக்ஸ் தளத்தில் நினைவுகூர்ந்த ஸ்டாலின்
வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும் என வாஜ்பாய் குறித்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மேலும் கருணாநிதி - வாஜ்பாய் இடையிலான நட்பையும் நினைவுகூர்ந்து முதல்வர் பதிவிட்டுள்ளார்
-
Dec 25, 2024 11:53 IST
டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - இபிஎஸ்
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.கவின் பொய்கள் அம்பலமானதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். "நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எழுதிய கடிதத்தில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமையை மாநில அரசுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என கோரியுள்ளார்" என்று இபிஎஸ் கூறினார்.
-
Dec 25, 2024 11:51 IST
கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
வரும் 27 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வரும்போது திருவண்ணாமலையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் அமித்ஷா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் அறிவித்துள்ளார்.
-
Dec 25, 2024 11:34 IST
ரகசிய கேமராவில் 120 வீடியோக்கள்
ராமேஸ்வரத்தில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் 120 வீடியோக்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. கேமரா பொருத்தப்பட்ட கடை வேறு ஒருவருக்கு சொந்தமானது என்றும் கைதானவர் ஒப்பந்தம் எடுத்து கடை நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
Dec 25, 2024 11:07 IST
அண்ணா பல்கலை. வளாகத்தில் பாலியல் தாக்குதல்?
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பெண் மீது பாலியல் தாக்குதல் என தகவல் வெளியாகி உள்ளது. பெண் மீது பாலியல் தாக்குதல் எனக் கூறப்படும் நிலையில் பல்கலைக்கழக வளாக சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நபர் ஒருவரை பிடித்து விசாரிப்பதாக கோவி செழியல் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Dec 25, 2024 10:35 IST
தமிழாய்வு இருக்கைக்கு ரூ.1.5 கோடி ஒதுக்கீடு
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் ஆய்வு இருக்கைக்கு மேலும் ஒன்றரை கோடி ரூபார் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
-
Dec 25, 2024 10:33 IST
ஒரே நாடு ஒரே தேர்தல் வராது - சுப்பிரமணியன் சுவாமி
ஒரே நாடு ஒரே தேர்தல் வராது. அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
-
Dec 25, 2024 10:19 IST
மீண்டும் மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 25, 2024 10:02 IST
வாஜ்பாய் நினைவு நாள் மரியாதை
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செய்தனர்.
-
Dec 25, 2024 09:43 IST
சர்வதேச விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்!
சர்வதேச விண்வெளி மையத்தில் சக விண்வெளி வீரர்களுடன் சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.
-
Dec 25, 2024 08:53 IST
மெரினா உணவுத் திருவிழா
சென்னை மெரினா உணவுத் திருவிழாவில் ரூ. 1.50 கோடிக்கு உணவுகள் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Dec 25, 2024 08:52 IST
அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் ஆகியவை நிலைத்து நீடித்திருக்கட்டும் - விஜய்
அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் ஆகியவை நிலைத்து நீடித்திருக்கட்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார்.
-
Dec 25, 2024 08:50 IST
வாஜ்பாய் பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் - எல்.முருகன்
வாஜ்பாயின் நூற்றாண்டு நாளில் அவரது பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
Dec 25, 2024 08:15 IST
நாட்டின் முதலாவது நதிகள் இணைப்பு திட்டம்
நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான கென் - பெட்வா நதிகளை இணைக்கும் தேசியத் திட்டத்துக்கு பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100 ஆவது பிறந்த நாளையொட்டி, மத்திய பிரதேசத்தில் சுமார் ரூ.49,000 கோடி மதிப்பிலான கென் - பேட்வா நதிகள் இணைப்பு திட்டம் உருவாக்கம்.
-
Dec 25, 2024 08:10 IST
சென்னையில் அதி வேகமாக சென்ற இளைஞர்களின் 33 பைக்குகள் பறிமுதல்!
சென்னை திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிவேகமாக பைக் ஓட்டிய இளைஞர்களிடம் இருந்து 33 பைக்குகளை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
-
Dec 25, 2024 07:59 IST
செபி தலைவர் மாதபி புரிபுச்-க்கு செக் வைத்த லோக்பால் அமைப்பு!
செபி தலைவர் மாதபி புரிபுச்சிடம் வரும் ஜனவரி 28 ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளதாக லோக்பால் அமைப்பு தெரிவித்துள்ளது.இவர் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா ஊழல் குற்றம் சாட்டியிருந்த நிலையில், விசாரணைக்கு அவரும் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Dec 25, 2024 07:38 IST
விடுமுறை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று விடுமுறை நாள் அட்டவணைப்படி சென்னையில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் காலை 5 முதல் நண்பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Dec 25, 2024 07:33 IST
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
-
Dec 25, 2024 07:29 IST
சபரிமலையில் நாளை மண்டல பூஜை
சபரிமலையில் நாளை மண்டல பூஜையை ஒட்டி குமுளிக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்க உள்ளது. திருச்சி, பழநி, மதுரையில் இருந்து இயக்கப்பட உள்ளது.
-
Dec 25, 2024 07:25 IST
சிரிப்பு திருவிழா
2024 ஆம் ஆண்டில் பட்ட வேதனைகள் சோகங்களை மறக்கும் வகையில் ஜப்பானில் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழும் திருவிழா. சுமார் 20 நிமிடங்கள் வரை வாய்விட்டு சிரித்து சோகத்தை மறந்த மக்கள்.
-
Dec 25, 2024 07:23 IST
5 மாநில ஆளுநர்கள் மாற்றம்
கேரளா, பீகார் உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்லர் அஜய் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.