பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61 காசுக்கும் விற்பனையாகிறது.
மழை நிலவரம்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 18, 2024 21:09 ISTமும்பை படகு விபத்தில் பலி 13 ஆக உயர்வு
மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் பயணிகள் சென்ற படகு மீது கடற்படை படகு மோதி விபத்தக்குள்ளானதில், 13 பேர் உயிரிழந்த நிலையில், 101 பேர் உயிருடன் மீட்கப்பட்டள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Dec 18, 2024 19:27 ISTபருவநிலை மாற்றத்தால், சென்னை உள்ளிட்ட இந்திய கடற்கரை நீர்ட்டம் உயர்வு
பருவநிலை மாற்றத்தால், சென்னை உள்ளிட்ட இந்திய கடற்கரை பகுதிகளில், உடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது, இதில் சென்னையில் 4.33மி.மீ, மும்பை, 4.59 மி.மீ, கொச்சியில் 4.10மி.மீ, விசாகப்பட்டினத்தில், 4.27 மி.மீ கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
-
Dec 18, 2024 19:24 ISTலட்சக்கணக்கானோரை கனவு காண தூண்டிய அஸ்வின்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கானோரை கனவு காண தூண்டியது. உங்கள் புதிய வாழ்க்கை பயணத்தில், மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று, ஓய்வை அறிவித்த ரவிசந்திரன் அஸ்வினுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
-
Dec 18, 2024 19:22 ISTஅர்ஜெண்டினா அணிக்கு தமிழ் பாடலுடன் வாழ்த்து சொன்ன பிஃபா
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கால்பந்து உலக கோப்பையை வென்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, குணா படத்தில் வரும் மனிதர் உணர்ந்து இது மனித காதல் அல்ல என்ற தமிழ் பாடலுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் FIFA வெளியிட்டுள்ளது.
-
Dec 18, 2024 19:14 ISTவிதிகளை மீறி கல்குவாரி இயங்கி கல்குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவு
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே புத்தேரியில் விபத்து நிகழ்ந்த கல்குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைத்த வெடி வெடித்து கற்கள் சரிந்ததில் 3 பேர் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரில் லாரி ஓட்டுநர் அருண் சடலமாக மீட்கப்பட்டுளார். விதிகளை மீறி கல்குவாரி இயங்கி வந்தது தெரிய வந்ததையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Dec 18, 2024 18:29 ISTசென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளின் கோரிக்கை நிறைவேற்றம்
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது pic.twitter.com/uvTKRMShnb
— Kannan Jeevanantham (JK) (@Im_kannanj) December 18, 2024 -
Dec 18, 2024 18:28 ISTமும்பையில் 60 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மரணம்
மும்பையில், 60 பேருடன் சென்ற படகு தண்ணீரில் மூழ்கிய நிலையில், அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். 20 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல்போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
Dec 18, 2024 17:59 ISTஅம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து: அமித்ஷா விளக்கம்
எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து திரித்து சொல்கிறார்கள். காங்கிரஸ் தான் இருமுறை அம்பேத்கரை தோல்வி அடைய செய்தது என்று அமித்ஷா தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
-
Dec 18, 2024 17:40 ISTஅம்பேத்கர் பெயரை சொன்னால், வாழும் பூமியே சொர்க்கமாக மாறும்: சீமான்
உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்தபிறகு சொர்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியம். சொர்க்கம் இருக்கிறதா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அறிவாசான் அன்னல் அம்பேத்கர் பெயரை சொன்னால், வாழும் பூமியே சொர்க்கமாக மாறும். அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
-
Dec 18, 2024 17:37 ISTஅமைச்சரவையில் நீடிக்க அமித்ஷாவுக்கு உரிமை இல்லை: மல்லிகார்ஜூன் கார்கே
பிரதமர் மோடிக்கு அம்பேத்கர் மீது மரியாதை இருந்தால், அவரை அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவுக்குள் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். அமைச்சரவையில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறியுள்ளார்.
-
Dec 18, 2024 16:50 ISTஅம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு விஜய் கண்டனம்
யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்... அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்
-
Dec 18, 2024 16:34 ISTஅமித் ஷா பேச்சு – மம்தா கண்டனம்
பா.ஜ.க.,வின் சாதிவெறி மற்றும் தலித் எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது அமித் ஷாவின் பேச்சு. வெறுப்பையும், மதவெறியையும் உள்வாங்கிய ஒரு கட்சியிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டமாக தெரிவித்துள்ளார்
-
Dec 18, 2024 16:18 ISTகுவாரியில் மண் சரிவு - ஒருவர் மரணம்
நெல்லை, இருக்கன்துறை அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நிகழ்ந்த கல்குவாரிக்கு மீட்பு குழுவினர், வட்டாட்சியர், காவல் துறையினர் விரைந்துள்ளனர்
-
Dec 18, 2024 16:05 IST2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அறிவிப்பு!
2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ”திருநெல்வேலி எழுச்சியும், வ.வு.சி.,யும் 1908” என்ற ஆய்வு நூலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது
-
Dec 18, 2024 15:48 ISTசென்னை புறநகர் பகுதிகளில் மழை
சென்னையில் அண்ணாசாலை மற்றும் வேப்பேரி புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்
-
Dec 18, 2024 15:23 ISTஅடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Dec 18, 2024 15:20 ISTசென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு; வெதர்மேன் அப்டேட்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்
-
Dec 18, 2024 14:54 ISTஜே.பி.சி.,க்கு பிரியங்கா காந்தியின் பெயர் பரிந்துரை
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு எம்.பி. பிரியங்கா காந்தியின் பெயரை காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது!
-
Dec 18, 2024 14:35 ISTகடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு காரணமாக எழுந்த கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்
-
Dec 18, 2024 14:14 ISTஅம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சு - உதயநிதி கண்டனம்
டூரிஸ்ட் கைடு வேலையை விட்டுவிட்டு அமைச்சர் வேலையை கவனியுங்கள். அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலைகின்றனர். அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அம்பேத்கர் பெயரை சொல்வோம் என அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
-
Dec 18, 2024 13:53 ISTகேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவித்த தமிழ்நாடு அரசு
கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு, ரூ. 1 கோடி பரிசு தொகை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ. 50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 18, 2024 13:30 ISTஅமித்ஷாவை விஜய் கண்டிக்கவில்லை - வன்னி அரசு
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசியுள்ள அமித்ஷாவை, தற்போது வரை விஜய் கண்டிக்கவில்லை என வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார்.
-
Dec 18, 2024 13:16 ISTஅமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி
"நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்"
அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அம்பேத்கரின் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறலாம் என அமித்ஷா பேசியிருந்த நிலையில் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
-
Dec 18, 2024 13:00 IST3 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 18, 2024 12:32 ISTமது விலக்கு பிரிவு என்ன செய்கிறது? - உயர்நீதிமன்றம் கேள்வி
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என்றால், அதை தடுக்காமல் மது விலக்கு பிரிவு என்ன செய்கிறது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
-
Dec 18, 2024 12:09 ISTஅம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, டி.ஆர் பாலு உள்ளிட்டோர் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். அம்பேத்கரின் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுன் பெயரை கூறலாம் என அமித்ஷா பேசியதாக குற்றச்சாட்டி போராட்டம் நடத்தினர்.
-
Dec 18, 2024 11:46 ISTசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.106 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
-
Dec 18, 2024 11:46 ISTரூ.20 லட்சம் வழிப்பறி - எஸ்.ஐ, ஐ.டி அதிகாரிகள் கைது
சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் எஸ்.ஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமந்தூரார் அருகே 2 சக்கர வாகனத்தில் ரூ.20 லட்சம் கொண்டு சென்ற நபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் திருவல்லிக்கேணி எஸ்.ஐ ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Dec 18, 2024 11:09 ISTபுயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரி அதிமுகவினர் போராட்டம்
ஃபீஞ்சல் புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் கோரி விழுப்புரத்தில் டிசம்பர் 21 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நிவாரணம் வழங்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து சிவி சண்முகம்லைமையில் பேராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
Dec 18, 2024 11:02 ISTமழை தொடங்கும் - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்
மேகக்கூட்டங்கள் சென்னையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. கிறிஸ்துமஸ் - க்கு பிறகு சென்னையில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் பெய்யும் மழையால் பாதிப்பு எதுவும் இருக்காது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Dec 18, 2024 10:24 ISTநாக்கை பிளந்து டாட்டூ - ஹரிஹரனிடம் சிறையில் விசாரணை
டாட்டூ போட நாக்கை வெட்டிய விவகாரத்தில் ஏலியன் பாய் என்ற ஹரிஹரனிடம் சிறையில் விசாரணை நடத்த மருத்துவக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆபத்தான முறையில் மருத்துவ உபகரணங்களை ஹரிஹரன் பயன்படுத்தியது எப்படி, மயக்க மருந்துகள் ஹரிஹரனுக்கு கிடைத்தது எப்படி என்றும் விசாரிக்க உள்ள மருத்துவ குழுவினர்.
-
Dec 18, 2024 10:20 ISTசென்னையில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 18, 2024 10:02 ISTகேரளா நாட்டை கண்டித்து அறிக்கை
கேரளாவில் இருந்து கொண்டுவந்து தமிழ்நாட்டு எல்லையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி மீண்டும் அவர்கள் நாட்டிற்கே தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
-
Dec 18, 2024 09:59 ISTகலைஞரின் கனவு இல்லம் திட்டம்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன் தெரிவித்துள்ளார்.
-
Dec 18, 2024 09:39 ISTஅமித்ஷா பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் நோட்டீஸ்
அம்பேத்கர் குறித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸெம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். அம்பேத்கர் மட்டுமல்லாது அவரை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை அமித்ஷா புண்படுத்தியுள்ளார். அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே ஒப்பேச்சு வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார்.
-
Dec 18, 2024 09:10 ISTபுதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்
உயர்கல்வியில் சேரும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தூத்துக்குடியில் வரும் 30 ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
Dec 18, 2024 09:06 ISTஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய 'லாபட்டா லேடீஸ்'
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம் போட்டியில் இருந்து வெளியேறியது. சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 படங்களில் லாபட்டா லேடீஸ் இடம் பெறவில்லை.
-
Dec 18, 2024 09:03 ISTசபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு பாஸ்
சபரிமலையில் முக்குழி வனப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் . இதன் மூலம் சன்னிதானத்தில் தனி வரிசையில் கூட்ட நெரிசலை தவிர்த்து தரிசனம் செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
-
Dec 18, 2024 08:58 ISTநிலை கொண்டுள்ள தாழ்வு பகுதி
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகராமல் அதே இடத்திலே நிலை கொண்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்றௌ தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 18, 2024 08:19 ISTதிருப்பூரில் வரி உயர்வை எதிர்த்து கடையடைப்பு போராட்டம்
திருப்பூரில் மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்ய கோரியும், கடை வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்தும் மத்திய, மாநிஅல் அரசுகளை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து வணிகர் சங்கங்களும் எதிரட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். சுமார் 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சுமார் ரூ. 100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
-
Dec 18, 2024 08:15 ISTகுழந்தை ராமர் சிலை விற்பனை அதிகரிப்பு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் குழந்தை ராமர் சிலைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. ராமர் கோயில் பிரதிஷ்டையின் ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
-
Dec 18, 2024 07:42 ISTகோயிலுக்குள் புகுந்த வெள்ளம்
சாலைகளில் தேங்கிய மழைநீர் ஸ்ரீ வில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலுக்குள் புகுந்தது. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் மழை நீரில் நின்றவேறே தரிசனம் மேற்கொண்டனர்.மழை நீரை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
-
Dec 18, 2024 07:37 IST"காங்., கூட்டணி - திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்"
கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.
-
Dec 18, 2024 07:33 ISTகிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற ராகுல்
கிறிஸ்துவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவுன்சில் சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, சசிதரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
Dec 18, 2024 07:31 ISTவயிற்றில் கொக்கைன் கடத்திய பெண்.!
எத்தியோப்பியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சுமார் ரூ. 14. 2 கோடி மதிப்பிலான கொக்கைன் போதை மாத்திரைகளை வயிற்றில் கடத்தி வந்த பெண்ணை கைது செய்து போதை மாத்திரைகளை போலீசார் கைது செய்தனர்.
-
Dec 18, 2024 07:28 ISTயாருக்கு அனுமதி?
கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் தவிர எவருக்கும் அனுமதியில்லை. சிவாலயங்களில் மார்கழி மாத யாத்திரை மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம் விளக்கம் அளித்துள்ளார்.
-
Dec 18, 2024 07:26 ISTமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.