Chennai News Updates: அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
School holiday diwali

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

 மழைப்பதிவு: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 33% கூடுதலாக பதிவானது. பொங்கல் வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Jan 01, 2025 22:07 IST

    ரஜினியுடன் அரசியல் பேசவில்லை: ஒ.பி.எஸ். விளக்கம்

    சென்னை, போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புத்தாண்டையொட்டி மரியாதை நிமித்தமாகவே நடிகர் ரஜினியை சந்தித்தேன், அரசியல் பேசவில்லை என்று கூறியுள்ளார்.



  • Jan 01, 2025 22:06 IST

     திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறப்பு

    அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளிகள் திறப்பு திங்கட்கிழமைக்கு தள்ளிப்போகலாம் என தகவல் வெளியான நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jan 01, 2025 22:03 IST

    அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி இல்லையா? அண்ணாமலை கேள்வி

    தமிழக அரசின் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரத்து 42 கோடி ரூபாய். இது தவிர ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதி எங்குதான் செல்கிறது? 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Jan 01, 2025 22:00 IST

    பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் ‘மெட்ராஸ்காரன்’ 

    மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம், பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், ஷேன் நிகாம், கலையரசன் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.



  • Jan 01, 2025 20:49 IST

    உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்வது குறித்து அவசர சட்டம்

    28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 5ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.



  • Jan 01, 2025 20:42 IST

    பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆவதாக தகவல்

    ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Jan 01, 2025 20:39 IST

    திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

    திருச்செந்தூர் முருகன் கோயில் முன்புள்ள கடற்கரையில் 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், பக்தர்களை பாதுகாப்புடன் குளிக்கும்படி காவல்துறையினர் மற்றும் கடல் பாதுகாப்புப் பணியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.



  • Jan 01, 2025 19:27 IST

    பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்: கோவையின் புதிய டிஐஜி சசி மோகன் உறுதி

    புதிதாக பதவியேற்றுக் கொண்ட கோவை சரக டிஐஜி சசி மோகன் ஐபிஎஸ், சட்டம் - ஒழுங்கு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பணி செய்வேன்; குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என உறுதி எடுத்துள்ளார்.



  • Jan 01, 2025 19:24 IST

    சென்னை திரும்பும் மக்கள்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

    பள்ளிகளில்,அரையாண்டு விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



  • Jan 01, 2025 18:20 IST

    அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்க முயற்சி: கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் கண்டனம்

    தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சி கண்டனத்திற்குரியது. அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியை, தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.



  • Jan 01, 2025 18:17 IST

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் புகுந்த கார் விபத்து: 10 பேர் பலி

    அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் புகுந்ததில் 10 பேர் பலியான நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கூட்டத்துக்குள் காரை மோதவிட்டு அதில் இருந்து இறங்கி மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் மர்ம நபர்.



  • Jan 01, 2025 17:42 IST

    சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்: கடலில் குளிக்க தடை

    ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்கள் வருகை காரணமாக கடலில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். 



  • Jan 01, 2025 17:12 IST

    விஜய்யுடன் கூட்டணி? - ஓ.பி.எஸ் பதில் இதுதான்

    விஜய்யின் எதிர்கால அரசியல் எதை நோக்கி செல்கிறது என்பதை பார்த்து தான் கருத்து தெரிவிக்க முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, கடைசியாக கொக்கி போட பார்க்கிறீர்களா? என பதில் அளித்தார்.



  • Jan 01, 2025 16:48 IST

    புதிதாக 13 நகராட்சிகள்; அரசாணை வெளியீடு

    கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்பட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது



  • Jan 01, 2025 16:35 IST

    பட்ஜெட் – அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை

    பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து வெளியாகப்போகும் அறிவிப்புகள் என்ன? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்



  • Jan 01, 2025 16:13 IST

    பயிர் காப்பீடு திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    விவசாயிகளின் பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கும் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025-26ம் ஆண்டு வரை திட்டத்தை தொடர ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.69,515.71 கோடி என எதிர்பார்க்கப்படுகிறது



  • Jan 01, 2025 16:01 IST

    டிரெஸிங் ரூம் தகவல்கள் கசிந்தது எப்படி? இர்ஃபான் பதான் கேள்வி

    இந்திய கிரிக்கெட் அணியின் டிரெஸிங் ரூம் தகவல்கள் வெளியே கசிந்தது எப்படி? என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். 4வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு வீரர்களை கம்பீர் கடுமையாக பேசியதாகவும், யாரும் சரியாக விளையாடவில்லை என கூறியதாகவும் கூறப்படுகிறது



  • Jan 01, 2025 15:36 IST

    ஆண்டிற்கு 10000 பேருக்கு மட்டும் வேலை வழங்கினால் இளைஞர்களின் கனவு எப்படி நனவாகும்? ராமதாஸ் கேள்வி

    தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டில் 10,701 பேருக்கு அரசு பணி வழங்கி உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. ஆண்டிற்கு 10 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கினால் இளைஞர்களின் கனவு எப்படி நனவாகும்? வேலை வாய்ப்பு கோரி 60 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், அதிக காலி பணியிடங்களை வைத்திருப்பது அரசின் அலட்சியமே காரணம். காலியாக உள்ள 6.25 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்



  • Jan 01, 2025 15:05 IST

    மேல்மருவத்தூர் அருகே ரயில்வே கேட் மூடல்

    மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் இன்று முதல் வரும் 4ம் தேதி வரை இரவு 7.30 மணி - நள்ளிரவு 12.30 மணி இடையே, பராமரிப்பு வேலைகளால் மூடப்பட்டிருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்தாமல், அச்சிறுப்பாக்கம் ரயில்வே கேட்டை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது



  • Jan 01, 2025 14:57 IST

    தமிழக அரசு எடுத்துக்காட்டாக உள்ளது - வைகோ

    மற்ற மாநிலங்களுக்கு தமிழக அரசின் திட்டங்கள் எடுத்துக்காட்டாக உள்ளது என வைகோ தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களுக்காக புதிய திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jan 01, 2025 14:20 IST

    பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டும் - செல்லூர் ராஜு கருத்து

    பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 5000 வழங்க வேண்டும் எனக் கூறியதாக தெரிவித்துள்ள அவர், இன்றைய மதிப்பிற்கு தமிழக அரசு ரூ. 30,000 வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.



  • Jan 01, 2025 13:51 IST

    தி.மு.க ஆட்சியை அகற்ற விட மாட்டேன் - வைகோ

    தான் இருக்கும் வரை தி.மு.க ஆட்சியை அகற்ற விட மாட்டேன் என வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியாவில் சாத்தியமற்றது எனக் கூறிய அவர், அண்ணாமலையின் சாட்டையடி நிகழ்வு ரசிக்கும்படியாக இருந்ததாகவும் விமர்சித்துள்ளார்.



  • Jan 01, 2025 13:10 IST

    242 பைக்குகள் பறிமுதல் 

    சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 242 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மது அருந்தி வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



  • Jan 01, 2025 12:32 IST

    அணிகள் இணைப்பு உறுதி - சசிகலா 

    இந்த ஆண்டில் அணிகள் இணைப்பு உறுதியாக இருக்கும் என சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், 2026-ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே தங்கள் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jan 01, 2025 11:57 IST

    ஸ்ரீரங்கம் கோயில் வெப்சைட் முடக்கம்

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கி உள்ள நிலையில், இரண்டாவது நாளாக கோயில் வெப்சைட் முடங்கியுள்ளது. இதனால் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



  • Jan 01, 2025 11:38 IST

    இன்பம் பொங்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகள் - பிரேமலதா

    2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைய வேண்டும். இந்த புத்தாண்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரமலதா வாழ்த்து தெரிவித்துள்ளார். 



  • Jan 01, 2025 11:06 IST

    இளைஞருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி - வெட்டி கொலை

    சென்னை காசிமேடு இளைஞருக்கு புத்தாண்டு கூறிவிட்டு அவரை வெட்டி கொலை செய்து தப்பிய சரவணன், ஆகாஷ், அபினேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.



  • Jan 01, 2025 10:54 IST

    வெங்காயம் விலை உயர்வு

     சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் இன்று சின்ன வெங்காயத்தின் விலை ரூ.90-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விற்பனை விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Jan 01, 2025 10:53 IST

    இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல்!

    இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல்! "ஒருமுறை முதன்மை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். அதனை பொதுக்குழுவின் ஒரு சிறப்பு தீர்மானம் மூலம் கலைத்து விடவோ அல்லது செல்லாது என்று முடக்கி விடவோ முடியாது. தற்போது உள்ள கட்சியின் நிர்வாகம் என்பது சட்டவிரோதமானது, அவ்வாறு செயல்படும் கட்சி தலைமைக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரம் கிடையாது, எனவே தற்போதைய அ.தி.மு.க கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்"  மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.



  • Jan 01, 2025 10:42 IST

    வரி பாக்கியை ஜன.31 வரை செலுத்தலாம்

    வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை அபராதம் இன்றி ஜன. 31 வரை செலுத்தலாம். அதிக வரி பாக்கி வைத்திருப்பவர்கள்.அதிக வரி பாக்கி வைத்தவர்கள் வரி செலுத்த வாய்ப்பளிக்கும் திட்டத்தின் கொடு ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • Jan 01, 2025 10:20 IST

    ரசிகர்களுக்கு ரஜினி புத்தாண்டு வாழ்த்து

    தனது வீட்டின் முன்பாக திரண்டு இருந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.



  • Jan 01, 2025 09:54 IST

     3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்

    ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 01, 2025 09:51 IST

    தங்கம் விலை உயர்வு

    புத்தாண்டில் ஏற்றத்துடன் தொடங்கிய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 57, 200 க்கும் 1 கிராம் ரூ. 7,150க்கும் விற்பனையாகிறது. 



  • Jan 01, 2025 09:30 IST

    சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    தடையை மீறி போராட முயன்ற நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமன் உள்ளிட்ட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுளது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று போராட்டம் நடத்த முயன்ற நிலையில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



  • Jan 01, 2025 09:26 IST

    ஜன.3, 10இல் ரேஷன் கடைகள் இயங்கும்

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக ஜனவரி 3,10 ஆகிய நாட்களில் ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3,10 வேலை நாளை ஈடுசெய்ய ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 01, 2025 09:06 IST

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து

    அனைவர் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகிடவும் நல் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் ஆண்டாக அமைந்திடவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து  தெரிவித்துள்ளார்.



  • Jan 01, 2025 09:04 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,875 கன அடியில் இருந்து 1,791 கன அடியாக குறைந்துள்ளது. பாசன தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.



  • Jan 01, 2025 09:02 IST

    புத்தாண்டு சிறப்பு வழிபாடு

    புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 3 டன் மலர்களால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



  • Jan 01, 2025 08:37 IST

    மோடியின் புத்தாண்டு வாழ்த்து

    இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும் வெற்றிகளையும் முடிவில்லாத மகிழ்ச்சியையும் வழங்கட்டும்; அனைவரும் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்” என மக்கள் அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை பிரதம் மோடி தெரிவித்துள்ளார்.



  • Jan 01, 2025 08:12 IST

    கவிஞர் வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து

    "அயர்ச்சி இல்லாத முயற்சியால் தளர்ச்சி இல்லாத உணர்ச்சியால் நிச்சயிக்கப்பட்ட லட்சியத்தால் புதுப்பித்துக்கொண்டே இருங்கள்" என்று கவிஞர் வைரமுத்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Jan 01, 2025 07:58 IST

    அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த  தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 2 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Jan 01, 2025 07:41 IST

    சென்னையில் இன்று கடலில் குளிக்கத் தடை

    புத்தாண்டையொட்டி இன்று கடலில் குளிக்கவும், இறங்கவும் தடை விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மக்கள் கடலில் இறங்குவதை தடுக்க மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரையில் போலீஸ் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



  • Jan 01, 2025 07:39 IST

    மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. புதிய வருடத்தின் முதல் நாளில் மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.



  • Jan 01, 2025 07:36 IST

    வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!

    சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ. 1966க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.



  • Jan 01, 2025 07:34 IST

    பொங்கல் பரிசுத் தொகுப்பு 

    பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்கான வழிபாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. விவசாயிகளிடம் மட்டுமே நேரடியாக பொங்கல் கரும்பு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

     



  • Jan 01, 2025 07:30 IST

    நள்ளிரவு சிறப்பு பலி

    ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல ஆண்டாக அமைய கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.



Tamil News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: