பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 72.87% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் - 78.46% ; புழல் - 83.88% ; பூண்டி - 74.06% ; சோழவரம் - 20.72% ; கண்ணன்கோட்டை - 64.6%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 08, 2024 21:57 IST
மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - சென்னை காவல்துறை விளக்கம்
மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மனமுதிர்ச்சியற்ற கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை தனது மகளை உடன் படிக்கும் மாணவியும் வேறு சில ஆண் நண்பர்களும் தவறான முறையில் வழி நடத்துவதாகவும், அவர்களில் ஒரு ஆண் நண்பர் பாலியல் சீண்டலுக்கு முயற்சி செய்ததாகவும் W6 அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரானது CSR ஆக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கபட்டு வந்தது. இந்த விசாரணையில் சம்பந்தபட்ட பெண் தோழி மற்றும் சில ஆண் நண்பர்கள் விசாரிக்கப்பட்டனர்.
பாலியல் குற்றம் நடந்திருப்பதை உறுதி செய்தவுடன், 06.12.2024 அன்று W3 எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 9 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 07.12.2024 அன்று திருவள்ளூரைச் சேர்ந்த சுரேஷ் ஆ/20 (கல்லூரி மாணவர்) என்பவரும் மற்றும் (பள்ளி மாணவர் ஒருவரும் என்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் வளர்ச்சி குன்றியவராக இருப்பதால் புலன் விசாரணை செய்வது விசாரணை அதிகாரிக்கு சவாலாக இருக்கிறது.
இந்நிலையில் நான்கு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வழக்கை பொதுவெளியில் விமர்சிப்பது, சாட்சியங்களை கலைத்து புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், இவ் வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 08, 2024 21:15 IST
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் மரணம்
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. 1980 - 1983 மற்றும் 1990 - 1991 வரை தி.மு.க சார்பில் புதுச்சேரி முதலமைச்சராகப் பணியாற்றினார். 2001 -2006 வரை புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் கட்சி சார்பில் பணியாற்றினார்.
-
Dec 08, 2024 21:09 IST
ஆதவ் அர்ஜூனாவை பங்கேற்க சொன்னதே நான்தான்: திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்: “விஜய் பங்கேற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்க சொன்னதே நான்தான்; ஆதவ் அர்ஜுனா கட்சி பொறுப்பில்டான் இருக்கிறார்; தொடர்பிலும் இருக்கிறார். ஒரு முறைக்கு இருமுறை பரிசீலித்த பிறகே, ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். வி.சி.கவில் தலித் அல்லாதோர் உள்பட 10 பேரு துணைப் பொதுச் செயலாளர்களாக உள்ளனர்” என்று கூறினார்.
-
Dec 08, 2024 20:59 IST
ஆதவ் அர்ஜுனா கட்சி பொறுப்பில் நீடிக்கிறார் - திருமாவளவன் திட்டவட்டம்
எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க ஆட்சி குறித்து விமர்சித்துப் பேசியது தொடர்பாக தி.மு.க-வினரிடையே சலசலப்பு எழுந்த நிலையில், இது குறித்து திருமாவளவன் கூறுகையில், “ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பில் நீடிக்கிறார்; தி.மு.க, அ.தி.மு.க-வை போல வி.சி.க-வும் செயல்பட வேண்டும் என்பது ஏற்புடையதல்ல” என்று கூறினார்.
-
Dec 08, 2024 20:32 IST
உதயநிதி நடித்த படங்களில் கொள்கை இருந்தது விஜயின் படங்களில் கொள்கை இல்லை - பொன்முடி
அமைச்சர் பொன்முடி: “உதயநிதி நடித்த படங்களில் கொள்கை இருந்தது விஜயின் படங்களில் கொள்கை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 08, 2024 19:26 IST
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்க மாட்டோம் - உதயநிதி உறுதி
சென்னை எம்.சி.சி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்க மாட்டோம்” என்று உறுதியாகக் கூறினார்.
-
Dec 08, 2024 18:36 IST
பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் கையாளும் தி.மு.க அரசுக்கு கண்டனம் - இ.பி.எஸ்
சென்னையில் மன நலம் குன்றிய கல்லூரி மாணவி வன்கொடுமைக்கு ஆளான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பெண்களுக்கு எதிரான வழக்குகளை தி.மு.க அரசு மெத்தனப் போக்குடன் கையாளுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10-க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், விடியா திமுக அரசின் காவல்துறை வழக்கம் போல மிகவும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு புகாரளித்தவர்கள்
அலைக்கழிக்கப்பட்டதால், இக்குற்றம் தொடர்ந்து நடைபெற்றதாக தகவல்கள் வருகின்றன.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்தால், அதன் தீவிரத்தன்மை உணர்ந்து, முறையாக விசாரிக்க வேண்டும் என்பது மு.க. ஸ்டாலின் அரசின் காவல்துறைக்கு தெரியாதா?
பெண்களுக்கு, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படும் நிலையை உருவாக்கியதோடு மட்டும் அல்லாமல், பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் கையாளும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இவ்வழக்கில் தொடர்புள்ள கயவர்கள் அனைவருக்கும் கடுமையான சட்டபூர்வ தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்கவும், அத்தகைய புகார்கள் மீது தாமதமின்றி தீவிர விசாரணை மேற்கொள்ளவும் மு.க. ஸ்டாலினின் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 8, 2024
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், விடியா திமுக அரசின் காவல்துறை… -
Dec 08, 2024 18:26 IST
கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: டிச. 12ம் தேதி பங்கேற்கிறார் ஸ்டாலின்
ரளாவின் வைக்கம் நகரில் பெரியார் பங்கேற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா டிசம்பர் 12-ம் தேதி வைக்கம் நகரில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கே புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம், நூலகத்தை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
-
Dec 08, 2024 17:54 IST
புதிய கூட்டணிக்கு அவசியம் இல்லை - திருமாவளவன்
தி.மு.க கூட்டணியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்க சதி நடைபெறுவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், புதிதாக அமையும் எந்தவொரு கூட்டணியிலும் வி.சி.க இடம்பெறாது எனவும் திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.
-
Dec 08, 2024 17:45 IST
விஜய்யை அரசியல்வாதியாக அங்கீகரிக்கவில்லை - ராமச்சந்திரன்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ஒரு அரசியல்வாதியாக தி.மு.க அங்கீகரிக்கவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
Dec 08, 2024 17:27 IST
பெரியார் வழியில் ஸ்டாலின் செயல்பாடுகள் - அர்ஜுன் சம்பத்
"முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா வழியிலோ அல்லது கலைஞர் வழியிலோ நடந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் பெரியார் வழியில் செயல்படுகிறார்" என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
-
Dec 08, 2024 17:04 IST
மீனவர்களுக்கு டிச.20 வரை நீதிமன்றக் காவல்
மண்டபம் மீனவர்களுக்கு டிசம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
-
Dec 08, 2024 16:41 IST
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பணிகள் 90 சதவீதம் நிறைவு
சென்னை, பூந்தமல்லி - போரூர் இடையே நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரிக்குள் இதன் பணிகள் முற்றிலும் முடிக்கப்பட்டு, மார்ச் - ஏப்ரலில் சோதனை ஓட்டம் நடைபெறும் என அதன் இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
-
Dec 08, 2024 16:20 IST
சீமான் ஓரணியில் இணைய வேண்டும் - கஸ்தூரி
சீமான் தனது கொள்கையை ஒதுக்கி வைத்து விட்டு, தி.மு.கவை வீழ்த்துவதற்காக ஓரணியில் இணைய வேண்டும் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
-
Dec 08, 2024 15:56 IST
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வரும் 10-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 08, 2024 15:36 IST
சிரியா அதிபர் சென்ற விமானம் மாயம்?
சிரியா நாட்டு அதிபர் ஆஸாத் தப்பிச் சென்ற விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடரில் இருந்து மாயமானதாக கூறப்படுகிறது. உள்நாட்டு போர் தீவிரமடைந்ததால், சிரியா அதிபர் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
-
Dec 08, 2024 15:05 IST
EWS தீர்ப்பு தவறு - முன்னாள் நீதிபதி
உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தெரிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீட்டை பெறுவோர் வரலாற்று ரீதியாக எந்த ஒடுக்குமுறைக்கும் ஆளானது கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
-
Dec 08, 2024 14:43 IST
மதுரை கள்ளழகர் கோவிலில் சிவகார்த்திகேயன் மனைவியுடன் சாமி தரிசனம்
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது சிவகார்த்திகேயனுடன் பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்
-
Dec 08, 2024 14:04 IST
திருமாவளவன் தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை - நடிகை கஸ்தூரி
திருமாவளவன் தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆதவ் அர்ஜூனா மற்றும் திருமாவளவன் விசிகவில் இனி ஒன்றாக இருப்பார்களா என்பது தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே ரஜினி, சனாதானம் குறித்தும் விமர்சித்துள்ளார் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்
-
Dec 08, 2024 13:35 IST
சென்னையில் ரயில் சேவை குறைக்கப்படாது
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை முதல் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக வெளியான தகவல் தவறு. ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி வார நாட்களில் ரயில்கள் இயக்கம் என வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது
-
Dec 08, 2024 13:19 IST
வரும் 11-ம் தேதி நாகை, மயிலாடுதுறை, கடலூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வரும் 11ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
Dec 08, 2024 13:07 IST
தமிழ்நாடு அரசின் மெத்தனத்தால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அன்புமணி
தமிழ்நாடு அரசின் மெத்தனத்தால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என கடலூரில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
-
Dec 08, 2024 12:56 IST
மதுரை வெளிச்ச நத்தத்தில் வி.சி.க கொடியை ஏற்றினார் திருமாவளவன்
மதுரை வெளிச்ச நத்தம் கிராமத்தில் 45 உயர வி.சி.க கொடியை திருமாவளவன் ஏற்றினார்.
-
Dec 08, 2024 12:39 IST
சேதமடைந்த பயிர்களுடன் மத்திய குழுவிடம் முறையிட்ட விவசாயிகள்
கடலூர் அழகியநத்தம் பகுதியில் புயல் சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சேதமடைந்த பயிர்களை கையில் எடுத்து காட்டி விவசாயிகள் மத்திய குழுவிடம் முறையிட்டனர்
-
Dec 08, 2024 12:13 IST
புதுக்கோட்டை அருகே உணவகத்தில் பிரிட்ஜ் வெடித்ததால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உணவகத்தில் பிரிட்ஜ் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டத்தில் உணவகம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்தில் உணவகத்தில் இருந்த சிலிண்டரும் வெடித்து சிதறியதால் அருகே இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
-
Dec 08, 2024 11:46 IST
எந்த சங்கடமும் இல்லை - திருமாவளவன்
விஜய் மீது எந்த சங்கடமும் இல்லை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி தான் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
Dec 08, 2024 11:08 IST
வேலை பார்ப்பது யாரென மக்களுக்கு தெரியும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
களத்தில் யார் வேலை பார்க்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்; சமூக வலைத்தளத்தில் பணியாற்றாமல் களத்தில் பணியாற்றினால் மக்கள் பிரச்சினை தெரியும்; புயல் பாதிப்பின்போது 2500 கி.மீ சென்று துணை முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். போட்டோ எடுத்து விளம்பரம் தேடுவதாக விஜய் கூறியதற்கு அன்பி மகேஸ் பதில் அளித்துள்ளார்.
-
Dec 08, 2024 10:20 IST
கோவை ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி!
கோவையில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின்போது திடீரென தடுப்பு இரும்பு வேலி சாய்ந்த நிலையில் கீழே விழுந்த பெண்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
-
Dec 08, 2024 09:10 IST
தீபமலை குழு ஆய்வு
"புவியியல் நிபுணர்கள் ஆய்வுக்கு பிறகே 2500 பேருக்கு, திருக்கார்த்திகை அன்று மலையேற அனுமதி தரப்படுமா என முடிவு செய்யப்படும்" என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.
-
Dec 08, 2024 08:53 IST
ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு - ஐயப்ப பக்தர்கள் மீது வழக்கு
திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்திய நிலையில் சேலம் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Dec 08, 2024 08:50 IST
2 வாரங்களாக அதிகரிக்கும் முருங்கைக்காய் விலை
சென்னை கோயம்பேட்டில் வரத்து குறைவால் முருங்கைக்காயின் விலை 2 வாரங்களாக குறையாமல் கிலோ ரூ. 400க்கு விற்பனையாகிறது. அதேபோல கேரட்டின் வரத்தும் குறைந்து கிலோ ரூ.80 க்கு இன்று விற்பனையாகிறது.
-
Dec 08, 2024 07:57 IST
நிலச்சரிவு: குழு ஆய்வு
திருவண்ணாமலை தீபமலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் புவியியல் மற்றும் சுரங்க வல்லுநர் குழு இன்று ஆய்வை தொடங்கியது.
-
Dec 08, 2024 07:54 IST
கடலூர், புதுவையில் மத்தியக்குழு ஆய்வு
ஃபீஞ்சல் புயல், மழை, வெள்ளப்பாதிப்புகள் குறித்து கடலூர், புதுச்சேரியில் இன்று (டிச.08) மத்தியக்குழு ஆய்வு செய்ய உள்ளது.
-
Dec 08, 2024 07:51 IST
“GSTயை உயர்த்த மத்திய அரசு திட்டம்”
அன்றாடம் பயன்பாட்டு பொருட்கள் மீதான் ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ரூ.1500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு 18%வரி உயர்த்தப்பட உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
Dec 08, 2024 07:30 IST
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்
பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நட்த்த போவதாக மும்பை போலீசார் போக்குவரத்து பிரிவுக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.