பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80 காசுக்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ. 92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 07, 2024 21:14 IST
கடற்கரை - செங்கல்பட்டு இடையே கூடுதல் பேருந்துகள்
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், நாளை (டிசம்பர் 8) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளது,
-
Dec 07, 2024 21:10 IST
அரசியலில் மேடை ஏறிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? கனிமொழி
மணிப்பூரையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது என்பது, அரசியலில் மேடை ஏறிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது போல் உள்ளது. பா.ஜ.க மணிப்பூருக்கு சென்று நியாயம் வழங்காமல் இருப்பதை விட இது மோசமானது என்று த.வெ.க தலைவர் விஜய் பேச்சுக்கு கனிமொழி பதில் அளித்துள்ளார்.
-
Dec 07, 2024 20:21 IST
ஆயத்த ஆடைகளின் மீது 18% ஜி.எஸ்.டி: எம்.பி., சுப்பராயன் கடும் எதிர்ப்பு
ஆயத்த ஆடைகளின் மீது 18% ஜி.எஸ்.டி விதிப்பது தொடர்பான ஒன்றிய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எம்.பி., சுப்பராயன் "ரூ1,500-க்கு துணி வாங்கினால் 5% ஜி.எஸ்.டியா? இந்த முடிவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். இது சட்டவிரோத விற்பனைக்கு வழிவகுக்கும்" என கூறியுள்ளார்.
-
Dec 07, 2024 20:18 IST
நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் சஸ்பெண்ட்!
நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை நியமனம் செய்ததற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்த நிலையில், நகராட்சி நிர்வாக ஆணையர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
Dec 07, 2024 19:53 IST
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: கடலூரில் பா.ஜ.க நிர்வாகி கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த, பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடலூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஒ.பி.சி அணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் அளித்துள்ள பெண் காவலர், தஞ்சையில் உள்ள திருநீலக்குடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
-
Dec 07, 2024 19:26 IST
கடலூர் மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய ஹூண்டாய் அறக்கட்டளை
கடலூரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் சத்தபுரம் சிவராமகிருஷ்ணன், ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை மருத்துவர்களிடம் வழங்கினார்.
-
Dec 07, 2024 19:22 IST
திரையுலகில் விஜய் மைனஸ்: எஸ்.ஆர்.பாரதி கருத்து
திரையுலகில் விஜய் மைனஸ் ஆகிவிட்டதால், அரசியலுக்கு வந்துள்ளார். தி,மு.க கூட்டணி உறுதியாக உள்ளது. அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என திமுக அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி கூறியுள்ளார்
-
Dec 07, 2024 19:17 IST
தி.மு.க பேச்சில் அகம்பாவம், ஆணவம் இருப்பதாக தெரியவில்லை: டி.டி.வி தினகரன்
அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று எல்லா கட்சிகளும் சொல்வதை போலத்தான், தி.மு.க எங்கள் கூட்டணி, பெற்றி பெறும் என்று கூறியுள்ளது. இதில் அகம்பாவம், ஆணவம் இருப்பதாக தெரியவில்லை. தி.மு.க.வை ஆதரித்து பேசுகிறேன் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். எதார்த்தத்தை சொல்கிறேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
Dec 07, 2024 18:58 IST
மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம் - கூடுதல் பஸ் இயக்கம்
சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
-
Dec 07, 2024 18:57 IST
மருத்துவமனைக்கு உதவும் ஹூண்டாய் மோட்டார்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை, கடலூரில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் சத்தபுரம் சிவராமகிருஷ்ணன், மருத்துவர்களிடம் வழங்கினார்.
-
Dec 07, 2024 18:40 IST
156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு நாளை (08.12.024) முதல் வரும் 16ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
Dec 07, 2024 18:31 IST
பேரிடர் நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் - முத்தரசன் குற்றச்சாட்டு
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் - முத்தரசன் குற்றச்சாட்டு
பேரிடர் காலத்தில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவது மனிதாபிமானமற்ற செயலாகும் என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த நவம்பர் இறுதியில் தமிழ்நாட்டில் கரை கடந்த ‘பெஞ்சல்’ புயல், பெருமழையும், சூறாவளியும் சேர்ந்து 14 மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக நிலைகுலைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளில் மாநில அரசு போர்க்கால வேகத்தில் ஈடுபட்டிருந்தாலும், இயல்பு வாழ்க்கை திரும்ப குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம் என மதிப்பிடப்படுகிறது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழு, கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு சேதாரங்களை மதிப்பீடு செய்துள்ளது. இந்த உயர்மட்டக் குழு, தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தபோது, பெஞ்சல் புயல் பாதிப்புகள், ஏற்பட்டுள்ள சேதாரங்கள், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கான செலவு மதிப்பீடுகள் என எல்லா விபரங்களும் உள்ளடங்கிய கோரிக்கை விண்ணப்பத்தை முதல்-அமைச்சர், உயர் மட்டக் குழுவிடம் வழங்கியுள்ளார்.
முன்னதாக டிசம்பர் 2-ந்தேதியில் பிரதமருக்கு கடிதம் எழுதி ரூ.2 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்கி தர வேண்டும் என முறையிட்டுள்ளார். இந்த சூழலில் மத்திய அரசு, தமிழ்நாட்டின் புயல் நிவாரணப் பணிக்கு ரூ.945 கோடி நிதி வழங்கியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, வழங்கப்பட்ட நிதி அல்ல என்பதே உண்மையாகும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ‘மிக்ஜாம்’ புயல், பெருமழை தலைநகர் சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் புரட்டி போட்டது. அப்போது தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை தயாரித்து ரூ.37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது. மாநில அரசின் கோரிக்கைகள் அனைத்தும் “கேளாக் காதில், ஊதப்பட்ட சங்காக” முடிந்து போனது.
இப்போதும் மாநில அதிகாரிகள் புயல், மழை பாதிப்புகளை மதிப்பிட்டு தயாரித்துள்ள அறிக்கையில் உள்ள விபரங்களை ஏற்காமல், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை பிரிவு, சேதாரங்களையும், பாதிப்புகளையும் குறைத்து மதிப்பீடு செய்து, சுமையை முழுவதும் மாநில அரசின் தலையில் சுமத்த முயற்சிக்கிறது. மாற்று அரசியல் கருத்துக்கள் கொண்ட அரசியல் கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு, தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த பாரபட்ச அணுகுமுறையை ஏற்க முடியாது.
தற்போது மத்திய அரசு நிதிக் குழுவின் பரிந்துரைப்படி ஆண்டு தோறும் வழங்கப்படும் பேரிடர் கால நிதி ரூ.945 கோடியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது கைக்கு வந்து சேர எத்தனை மாதங்கள் ஆகுமோ? நிதிக் குழு பரிந்துரை செய்துள்ள பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வெறும் 3.51 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இயற்கை பேரிடர் கால நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசு கோரும் நிதி அளவில் மூன்றில் ஒரு பங்கு தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்று பதினாறாவது நிதிக் குழுவில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோரியுள்ள, பேரிடர் கால நிவாரண நிதி ரூ.2,000 கோடியை மத்திய அரசு உடனடியாக தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
Dec 07, 2024 18:20 IST
திருமாவுக்கு அழுத்தம் இருப்பதை உணருகிறோம் - கே.பி.முனுசாமி
“விஜய் கூறியதுபோல கூட்டணியில் திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதை உணருகிறோம். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டிருக்க வேண்டும். வாரிசு அடிப்படையில் தான் ஸ்டாலின் முதல்வரானார். தனிப்பட்ட உழைப்பில் அந்த இடத்துக்கு அவர் வரவில்லை” என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
-
Dec 07, 2024 18:07 IST
அடிலெய்ட் டெஸ்ட்: 2வது நாள் ஆட்டம் நிறைவு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் இழந்து இந்திய அணி தடுமாற்றம் கண்டுள்ளது. நிதிஷ் குமார், ரிஷப் பண்ட் களத்தில் உள்ளனர். ஸ்காட் போலண்ட் 2, பேட் கம்மின்ஸ் 2, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
-
Dec 07, 2024 18:05 IST
2 நாளில் ரூ. 449 கோடி வசூல்
அல்லு அர்ஜூன் நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான ‘புஷ்பா - 2’ திரைப்படம், உலகளவில் 2 நாட்களில் ரூ. 449 கோடி வசூலைக் குவித்துள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.
-
Dec 07, 2024 18:04 IST
'நேற்று முளைத்தவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள்' - ஆர்.எஸ்.பாரதி பேச்சு
தமிழ்நாட்டில் மன்னராட்சியா நடைபெறுகிறது? மக்கள் தேர்ந்தெடுத்தால் தான் ஆள முடியும். நேற்று முளைத்தவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள்; திமுகவை எதிர்ப்போர் மண்ணாகி விடுவார்கள்" என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
-
Dec 07, 2024 17:56 IST
'தொழில் போட்டியால் கட்சி ஆரம்பித்தவர்' - விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
"திராவிடம் என்ற வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு கூட்டம் கண்டபடி பேசுகிறது. மக்களுக்காக அல்லாமல், தொழில் போட்டியால் தான் ஒருவர் கட்சி ஆரம்பித்துள்ளார்" என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
-
Dec 07, 2024 17:19 IST
நீரில் மூழ்கி 3 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கள்ளுக்குத்து ஓடையில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோகுல்(12), யாதேஷ்வர்(8), இன்பராஜ் ஆகியோர் ஓடையில் மூழ்கி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 07, 2024 17:18 IST
லுக் அவுட் நோட்டீஸ் நிபந்தனை விதிக்கலாம் - ஐகோர்ட்
குற்றம்சாட்டப்பட்டோர் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடுதிரும்ப நிபந்தனை விதித்து நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Dec 07, 2024 17:00 IST
கேப்டனை தூக்கிய கேப்டன்!
அடிலெய்ட் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்.
-
Dec 07, 2024 16:58 IST
பள்ளியில் சுவற்றின் இடுக்கில் மாட்டிய சிறுமி மீட்பு
தெலங்கானா மாநிலம் புலிஜாலா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி விளையாடி கொண்டிருந்த போது 2 சுவர்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட தலையை வெளியே எடுக்க முடியாமல் சிறுமி அலறியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள், சுவற்றை உடைத்து சிறுமியை மீட்டனர்
-
Dec 07, 2024 16:18 IST
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 07, 2024 15:59 IST
ஜனவரி முதல் சுங்க கட்டணம்
புதுச்சேரி - விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் ஜனவரி மாதம் முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ. 60 எனவும், ஒரு நாளுக்குள் திரும்ப ரூ. 90 எனவும், மாத பஸ் கட்டணம் ரூ. 1985 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
Dec 07, 2024 15:41 IST
200 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் - கனிமொழி
திருச்செந்தூரில் நடைபெற்ற தி.மு.க கூட்டத்தில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். அங்கு உரையாற்றிய அவர்,"நானும் இறுமாப்போடு சொல்கிறேன்; கட்டுப்பாட்டோடு பணியாற்றினால் 200 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" என தெரிவித்துள்ளார்.
-
Dec 07, 2024 15:21 IST
மக்கள் ஆதரவின்றி முதல்வராக முடியாது - இயக்குநர் அமீர்
ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவின்றி ஒருவர் முதல்வராகவே முடியாது என இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். குறிப்பாக, பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம், பணக்கார வாரிசுகளை மணப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம், ஆனால் மக்கள் ஆதரவு இருந்தால் தான் முதல்வராக முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
-
Dec 07, 2024 15:01 IST
மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
இன்று மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 07, 2024 14:43 IST
உழைப்பால் கிடைத்த பதவி - ரகுபதி
உதயநிதியின் உழைப்பால் தான் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்தது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். யார் தலைவராக வர வேண்டும் என்பதை தொண்டர்கள் தான் முடிவு செய்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Dec 07, 2024 14:23 IST
குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுயமரியாதை, தன்மானம், கருத்தியலை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
Dec 07, 2024 14:07 IST
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 07, 2024 13:42 IST
விஜய் பேச்சுக்கு உதயநிதி காட்டமான பதில்
யார் இங்க பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆனார்; அந்த அறிவுகூட இல்லை அந்த ஆளுக்கு இல்லை. மன்னர் ஆட்சி நடப்பதாக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
அதே போல், அம்பேத்கர் விழாவில் விஜய் பேசியது பற்றிய கேள்விக்கு நான் சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
-
Dec 07, 2024 13:35 IST
விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா பச்சன்
விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா பச்சன். மும்பையில் நடைபெற்ற திருமண நிகழ்வில், கணவர் அபிஷேக் பச்சன் உடன் ஒன்றாக வந்து அசத்தினர்.
-
Dec 07, 2024 13:14 IST
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து டிச.12-ம் தேதி இலங்கை தமிழ்நாடு கடலோர பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. -
Dec 07, 2024 12:30 IST
தி.மு.கவை ஆதவ் அர்ஜுனா விமர்சித்தது தவறு
தி.மு.கவை ஆதவ் அர்ஜுனா விமர்சித்தது தவறு. அவர் பேசிய கருத்து குறித்து முக்கிய நிர்வாகிகள் உடல் ஆலேசித்து முடிவு எடுக்கப்படும். ஆதவ் அர்ஜுனா பேசியது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் விசிக கருத்தாக பார்க்கப்படும் சூழல் என திருமாவளவன் பேசினார்.
-
Dec 07, 2024 12:18 IST
வடகிழக்கு பருவமழை இயல்பை விட 17% அதிகம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 17% கூடுதலாகவும், சென்னையில் 18% கூடுதலாகவும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 07, 2024 12:17 IST
விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா
விசிக தலைமை அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு ICONOCLAST நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விசிக தலைவர் திருமாவளவன், சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
Dec 07, 2024 11:37 IST
விக்கிரவாண்டியில் மத்திய அரசுக் குழு ஆய்வு
ஃபீஞ்சல் புயல் பாதிப்பு - விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒன்றிய உள்துறை இணை இயக்குநர் நாஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தனர்.
மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்தது குறித்து அதிகாரிகள் விளக்கி வருகின்றனர்.
-
Dec 07, 2024 11:29 IST
GDP வளர்ச்சி விகிதம் குறைவு - நிர்மலா விளக்கம்
நடப்பு நிதி ஆண்டில் 2 ஆவது காலாண்டில் "GDP வளர்ச்சி விகிதம் 5.4%-ஆக குறைந்து இருப்பது பொருளாதார மந்தநிலை அல்ல..” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
Dec 07, 2024 10:59 IST
வெள்ள பாதிப்பு - ஆய்வை தொடங்கியது மத்தியக் குழு
ஃப்பிஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
Dec 07, 2024 09:14 IST
கழிவு நீர் கலந்த குடிநீர் - நிவாரணம் வழங்க கேரிக்கை
“கள்ளச்சாராயம் குடிச்சவங்களுக்கு 10 லட்சம் கொடுக்கிற அப்போ..கழிவுநீர் கலந்த குடிநீரை குடிச்சு இறந்தவங்களுக்கும் 10 லட்சம் கொடுக்கனும்” என்று பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
Dec 07, 2024 08:59 IST
விடுதலை 2 முக்கிய அறிவிப்பு
விடுதலை 2 படத்தின் பின்னணி இசைப் பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
-
Dec 07, 2024 08:56 IST
ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு
“டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை” என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்ததாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
Dec 07, 2024 08:26 IST
விவசாயிகள் தடுத்து நிறுத்தம் - 8 பேர் காயம்
டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகள் ஹரியானா - பஞ்சப் எல்லையான ஷம்புவில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் விவசாயிகள் 8 பேர் காயமடைந்தனர்.
-
Dec 07, 2024 08:23 IST
மண் சரிவால் பாதிப்பு - இபிஎஸ் நிதியுதவி
திருவண்ணாமலையில் மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட வுதவிகளை வழங்கினார்.
-
Dec 07, 2024 07:40 IST
விழூப்புரத்தில் திங்கள் முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திங்கள் (டிச.9) முதல் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
Dec 07, 2024 07:37 IST
வெள்ள நிவாரண நிதி போதாது
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ஃபீஞ்சல் புயல் வெள்ள நிவாரண நிதி ரூ.945 கோடி போதாது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Dec 07, 2024 07:36 IST
புஷ்பா 2 - உயிரிழந்த பெண்
ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2' பார்க்க சென்று திரையரங்க நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உள்ள்தாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார்.
-
Dec 07, 2024 07:33 IST
புயல் பாதிப்பு - மத்திய குழு ஆய்வு
ஃபீஞ்சல் புயல், மழை வெள்ளம் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது.
-
Dec 07, 2024 07:32 IST
ட்ரம்ப் அரசியல் வருகைக்கு எலான் மஸ்க் செலவு செய்த தொகை...
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக எலான் மஸ்க் இந்திய மதிப்பில் ரூ.2,192 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது.
-
Dec 07, 2024 07:28 IST
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி
மன்னராட்சி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கு விசிக பொறுப்பு ஏற்காது என்றும் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் நடந்து வருவதாக திருமாவளவன் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.