பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
திமுக ஆர்ப்பாட்டம்: தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஆளுநர் அவமதித்ததாக கூறி மாவட்டந்தோறும் திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jan 07, 2025 22:14 ISTஅ.தி.மு.க நிர்வாகி, காவல் ஆய்வாளர் கைது
சென்னை, அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அ.தி.மு.க வட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு சார்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும், பாலியல் வன்கொடுமை வழக்கை சரியாக விசாரிக்காத அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Jan 07, 2025 21:21 ISTமருத்துவ காப்பீடு- சிகிச்சை கட்டணம் உயர்வு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிச்சைக்கான கட்டணம், ரூ. 2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
Jan 07, 2025 21:14 ISTவந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்
சென்னை - நெல்லை இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 8 பெட்டிகளுடன் இயங்கி வந்த ரயிலில், கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Jan 07, 2025 19:57 ISTஎச்.எம்.பி.வி வைரஸ் - உதவி எண் அறிமுகம்
எச்.எம்.பி.வி வைரஸ் நோய் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. நோய் குறித்து சந்தேகம் இருப்பின் 9342330053 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
-
Jan 07, 2025 19:30 ISTபிரணாப் முகர்ஜி நினைவிடம்; மத்திய அரசு அனுமதி
மறைந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் கட்டுவதற்காக ராஜ்காட் வளாகத்தில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலத்தில் மத்திய அரசு நிலம் ஒதுக்கியுள்ளது.
-
Jan 07, 2025 19:26 ISTபுதிய வெர்ஷனில் புஷ்பா-2
புஷ்பா-2 படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 முதல் இந்த புது வெர்ஷன் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
-
Jan 07, 2025 18:50 ISTடங்ஸ்டன் போராட்டத்தில் அசம்பாவிதம் நடக்குமா என காத்திருந்த இ.பி.எஸ்-க்கு ஏமாற்றம்’ - அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி: “டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்திற்கு காவல்துரை அனுமதி மறுத்துள்ளது என பொய் சொல்லை இருக்கிறார். பழனிசாமி. போராட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், சுயநல அரசியல் வண்டியை ஓட்டலாம் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. போராட்டமே ஒன்றிய அரசுக்கு எதிரானதுதான். ஆனால், பா.ஜ.க அரசை ஒரு வார்த்தைகூட குறிப்பிட்டாமல் பார்த்து பார்த்து அறிக்கை பதிவிட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
-
Jan 07, 2025 18:45 ISTஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அனைத்து முன் ஏற்பாடுகளையும் தொடக்கம் - தேர்தல் நடத்தும் அதிகாரி மணிஷ்
"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும் தொடங்கி உள்ளோம்” என்று ஈரோடு மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மணிஷ் தெரிவித்துள்ளார்.
-
Jan 07, 2025 17:42 ISTதுபாயில் கார் ரேஸ் பயிற்சி; விபத்தில் சிக்கிய அஜித் கார்
துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போடு நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் கார் சேதமடைந்தாலும், நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
Jan 07, 2025 17:38 ISTஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு - சி.பி.எம் பெ. சண்முகம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.
-
Jan 07, 2025 17:35 ISTஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி - செல்வப்பெருந்தகை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார். வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைமையுடன் ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
-
Jan 07, 2025 17:27 ISTதி.மு.க-வின் ஆர்ப்பாட்டம் அண்ணா பல்கலை விவகாரத்தை திசை திருப்பும் முயற்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநர் உரிய மரியாதை கொடுத்திருக்கிறார். உப்பு சப்பு இல்லாத காரணத்திற்காக தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஆளுநரை அவமதித்து தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டுகின்றனர். காவல் துறை வேடிக்கை பார்க்கிறது” என்று கூறியுள்ளார்.
-
Jan 07, 2025 17:20 ISTஜன. 11-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஜனவரி 11-ம் தேதி மாலை 3 மணி அளவில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 07, 2025 16:41 ISTபெண் கல்வி குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா "பெண்ணுக்கு, ஆணுக்கும் கல்விதான் அழகு என்பதை 2000 ஆண்டுக்கு முன்பே இலக்கியம் கூறியது. ஆனால், அதன் பிறகு கல்வி மறுக்கப்பட்டது யாரால்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jan 07, 2025 16:37 ISTசென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு
நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை அதிகரிக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுவரை 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த நிலையில் வரும் 11ம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது
-
Jan 07, 2025 16:15 ISTஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிக்க போவதாக தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், போட்டியா? இல்லையா? என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Jan 07, 2025 16:13 ISTஇந்தியா - மலேசியா நாடுகள் இடையேயான முதல் பாதுகாப்பு விவகார பேச்சுவார்த்தை
இந்தியா - மலேசியா நாடுகள் இடையேயான முதல் பாதுகாப்பு விவகார பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் - மலேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ராஜா ஸைனால் அபிதின் ஆகியோர் தலைமை ஏற்றுள்ளனர். கூட்டு பாதுகாப்பு பயிற்சி, இணைய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
-
Jan 07, 2025 16:12 ISTஒன்றிய பட்ஜெட்டில் டெல்லிக்கு சலுகைகள் அறிவிப்புகள் வெளியிட கூடாது என கடிதம்
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாகும் ஒன்றிய பட்ஜெட்டில் டெல்லிக்கு சலுகைகள் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Jan 07, 2025 15:27 ISTடெல்லி சட்டசபை தேர்தலில் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக 13,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி அமல்படுத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
Jan 07, 2025 15:15 ISTமத்திய அரசுக்கு கடிதம் தலைமை தேர்தல் ஆணையர்
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் டெல்லிக்கு சலுகைகள் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
-
Jan 07, 2025 15:06 ISTடெல்லியில் 13,033 வாக்குச்சாவடிகள் அமைப்பு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு மொத்தம் 13,033 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 70 வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்களால் கையாளப்படும். ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 1191 வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.
-
Jan 07, 2025 15:05 ISTபோராட்டம் - தி.மு.க-வினர் மீது வழக்கு
சென்னை முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Jan 07, 2025 15:03 ISTஅமலுக்கு வந்த தேர்தல் நன்னடத்தை விதிகள்
சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் டெல்லி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் மில்கிபூர், ஈரோடு கிழக்கு தொகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன
-
Jan 07, 2025 15:00 ISTஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
இ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 07, 2025 14:59 ISTடெல்லியில் பிப்ரவரி 5ல் ஒரே கட்டமாக தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி, 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 07, 2025 14:55 ISTவாக்குப்பதிவு எந்திரங்கள் ஹேக்கிங் - தலைமை தேர்தல் ஆணையர் மறுப்பு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலை அறிவிக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் 12 தொகுதிகள் தனித்தொகுதிகள் ஆகும்வாக்குப்பதிவு எந்திரங்கள் ஹேக்கிங் குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் மறுத்துள்ளார். வெளியில் இருந்து சிப் மூலமாகவோ இயந்திரத்தில் வைரஸ் பரப்பியோ ஹேக்கிங் செய்ய முடியாது. இது தொடர்பான ஒரு குற்றச்சாட்டுகள் கூட நிரூபிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
-
Jan 07, 2025 14:45 ISTஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானின் டொரிஷிமா தீவுப் பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
Jan 07, 2025 14:40 ISTதி.மு.க-வினர் மீது வழக்குப்பதிவு
ஆளுநரைக் கண்டித்து சென்னையில் இன்று போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Jan 07, 2025 14:38 ISTநீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
-
Jan 07, 2025 14:34 ISTயு.ஜி.சி விதிகளில் திருத்தம் - ஸ்டாலின் கண்டனம்
யு.ஜி.சி விதிகளில் திருத்தம் செய்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"விதிகளை தன்னிச்சையாக மாற்றுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஆளுநருக்கு அதிகாரம் தரும் வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழக கல்வி நிறுவனங்களின் சுயாட்சி பறிக்கப்பட்டால் அமைதியாக இருக்க முடியாது. கல்வியாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. யுஜிசி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம்." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Jan 07, 2025 14:06 ISTகே.வி.தங்கபாலுவுக்கு காமராஜர் விருது - செல்வப்பெருந்தகை வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு தமிழ்நாடு அரசு காமராஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இந்நாள் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “ஒன்றிய முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமானகே.வீ.தங்கபாலு அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியறிந்து மிகுந்த மனமகிழ்ச்சியடைந்தேன். இந்த அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.கே.வீ.தங்கபாலு பெருந்தலைவர் காமராஜர் விருது பெறுவதற்கு மிகவும் தகுதியானவர்; பொருத்தமானவர். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விருதுக்கு தேர்வு செய்த தேர்வுக்குழுவிற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் தினமான ஜனவரி 15ல் சென்னையில் நடைபெறும் விழாவில் கே.வி.தங்கபாலுவுக்கு முதலமைச்சர் விருது வழங்குகிறார். விருதுத்தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 07, 2025 14:04 ISTசத்துணவு அமைப்பார்களுக்கு கூடுதல் பொறுப்பு படி - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சத்துணவு அமைப்பளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புப் படியை, ரூ. 600-ல் இருந்து ரூ. 1000ஆக ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ 6.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
Jan 07, 2025 13:51 ISTஞானசேகரனின் வீட்டில் ஆய்வு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனின் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவரது வீட்டை வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அளவெடுத்து வருகிறார்கள். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வீடு அமைந்துள்ளது கண்டறியப்பட்ட நிலையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
-
Jan 07, 2025 13:50 ISTநடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன்
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்குக்கு நிபந்தனை ஜாமின் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினமும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் துக்ளக் கையெழுத்திட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
துக்ளக்கிடம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை, மற்ற குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
-
Jan 07, 2025 12:44 ISTபொங்கலன்று யு.ஜி.சி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது- .ஸ்டாலின் கடிதம்
பொங்கலன்று யு.ஜி.சி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது. ஜன 13 முதல் 16 வரை தேர்வு நடத்துவதை தவிர்த்து வேறு நாட்களில் மாற்றியமைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
-
Jan 07, 2025 12:14 ISTமன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் பற்றி ஸ்டாலின் புகழாரம்
உலக பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிக்கப்பட்டவர் மன்மோகன் சிங்; அவரின் பொருளாதார திட்டங்கள் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் செய்தார்
மனதில் உள்ளதை துணிச்சலாக பேசக்கூடியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்லும் போது கூட என்னை சந்திக்க வேண்டும் என்றார் என ஸ்டாலின் கூறினார்.
-
Jan 07, 2025 12:11 ISTசிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. காவல் துறை தரப்பு முறையீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
Jan 07, 2025 12:00 ISTநீங்கள் பாடம் எடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை - கனிமொழி
"குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தவிர்க்க கதை சொல்வது போல் ஆளுநர் கதை சொல்கிறார்.ஆளுநர் சட்டசபைக்கு வராமல் விடுப்பு கடிதம் எழுதி கொடுக்கலாம்"
ஆளுநரே தயவுசெய்து சட்டசபைக்கு இனி வராதீர்கள். இந்திய நாட்டை காப்பாற்ற விஸ்வரூபமாக நிற்கும் தலைவர் முதல்வர் ஸ்டாலின். உங்களுக்கும், நாட்டின் சுதந்திரத்திற்கும் தேசிய கீதத்திற்கும் என்ன சம்பந்தம். நீங்கள் பாடம் எடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை என ஆளுநரை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
-
Jan 07, 2025 11:37 ISTகாயமடைந்த சிறுவனை சந்தித்த நடிகர் அல்லு அர்ஜுன்
புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியின் போது தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனை சென்று நடிகர் அல்லு அர்ஜுன் சந்தித்தார். இதற்காக ஏற்கனவே ஐதராபாத் போலீசாரிடம் அனுமதி பெற்றிருந்தார்.
-
Jan 07, 2025 11:19 ISTஅதிமுக, காங்கிரஸ் கவன ஈர்ப்பு நோட்டீஸ்
HMPV தொற்று தொடர்பாக, சட்டப்பேரவையில் விவாதிக்க வலியுறுத்தி சபாநாயகரிடம் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது.
-
Jan 07, 2025 10:59 ISTHMPV- பேரவையில் விவாதிக்க அதிமுக கோரிக்கை
HMPV தொற்று குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
-
Jan 07, 2025 10:28 ISTதிமுகவினர் போராட்டம்
சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநரை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Jan 07, 2025 10:15 ISTஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுமா?
டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jan 07, 2025 09:41 ISTதமிழ்நாடு சட்டப்பேரவை 2 ஆம் நாள் கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மொழி ராஜதத்தனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
-
Jan 07, 2025 09:32 ISTயுஜிசி அறிவிப்பு
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
-
Jan 07, 2025 09:02 IST"புல்லட் ரயில் இயக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை" - பிரதமர் மோடி
இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. நாட்டில் அதிவேக ரயில்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது என நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
Jan 07, 2025 09:00 IST500 எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க விண்ணப்பம்
தமிழகத்தில் 500 எம்.பி.பி.எஸ், 88 முதுநிலை இடங்களை அதிகரிக்க மருத்துவக் கல்வி இயக்ககம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.புதிதாக தொடங்கப்பட்ட 10 அர்ரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 50 இடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
-
Jan 07, 2025 08:56 ISTதாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் முன்னதாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு ஜனவரி 13,20,27 ஆம் தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தாம்பரத்தில் இருந்து ஒரு மணி நேரம் முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Jan 07, 2025 08:32 ISTபேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் நாளான இன்று (ஜன.07) இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆகியோரின் இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 07, 2025 08:21 ISTமன்னிப்பு கேட்க முடியாது - சீமான் திட்டவட்டம்
"சென்னை புத்தகத் திருவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி பாடியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. பபாசி தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்" என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.