Advertisment

Chennai News Highlights: உலக அமைதி வேண்டி கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
velankanni church festival

modi Photograph: (modi)

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 24, 2024 22:06 IST
    புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு  ஏற்றம்

    புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது

    புதுச்சேரியில் அண்மையில் ஃபென்ஜால் புயலால் கனமழை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் டிச. 21-ஆம் தேதி ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மீனவா்கள் கவனமுடன் மீன்பிடிக்கச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.

    இந்தநிலையில்,  புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் புயல் எச்சரிக்கை பலகையில், துறைமுகத்துக்கு அச்சுறுத்தும் வகையிலான புயல் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு தின கொண்டாட்டத்துக்காக சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் புதுச்சேரியில் குவிந்து வரும் நிலையில் புயல் கூண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



  • Dec 24, 2024 21:35 IST
    மணிப்பூர் ஆளுநராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமனம்

    ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்த நிலையில், மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு ஒடிசா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகு, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், மிசோரம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கேரளாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது,



  • Advertisment
    Advertisement
  • Dec 24, 2024 20:18 IST
    சூரத்தில் சவுராஷ்டிரா விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

    குஜராத் மாநிலத்தின் சுரத்தில், கிம் நகரில், ரயில் நிலையம் அருகே சவுராஷ்டிரா விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தாதர் போர்பந்தர் இடையே செல்லும்விரைவு ரயில், தடம்புரண்டதாகவும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.



  • Dec 24, 2024 19:42 IST
    உடை மாற்றும் அறையில் கேமரா: ராமேஸ்வரம் டிஎஸ்பி விசாரணை

    ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகே தனியார் உடை மாற்றும் அறைகளில் டிஎஸ்பி சாந்த மூர்த்தி தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  தனியார் உடை மாற்றும் அறை ஒன்றில் ரகசிய கேமரா வைத்திருந்த புகாரில் ராஜேஷ் மற்றும் மைதீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்திருந்தனர்.



  • Dec 24, 2024 19:40 IST
    ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் புகாரில்,ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன்!

    ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். அவதூறாக பேசிய வீடியோ நீதிமன்றத்தில் காவல்துறையால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதனைப் பார்வையிட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், மடாதிபதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக் கூடாது என நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்கினார். சாட்சிகளை மிரட்டவோ, தொடர்புகொள்ளவோ கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.



  • Dec 24, 2024 18:24 IST
    தமிழ்நாட்டில் மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக உள்ளது: அண்ணாமலை

    தமிழ்நாட்டில் மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக இருக்கிறது. இதற்காகத்தான்  5, 8-ம் வகுப்புகளில், கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • Dec 24, 2024 18:06 IST
    செட் தேர்வை இனி ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்தும் - அமைச்சர் கோவி. செழியன்

    உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விரிவுரையாளர்களுக்கான மாநில தகுதித் தேர்வை (SET)  இனி ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்தும்; மாநில தகுதித் தேர்வு நடத்துவதற்கான நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பை டி.ஆர்.பி கொண்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் தேர்வு நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 24, 2024 17:41 IST
    மன்சூர் மகன் ஜாமின் மனு தள்ளிவைப்பு

    போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்து, சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Dec 24, 2024 17:23 IST
    ஆல் பாஸ் முறை ரத்து ஏன்? தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது - அண்ணாமலை  

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணமலை: “தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது மறுக்க முடியாத உண்மை; ஆந்திரா தெலங்கானா கேரளாவில் கல்வியின் தரம் உயர்ந்து வருகிறடு. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் தரமாகப் படிக்கின்றனரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 



  • Dec 24, 2024 16:32 IST
    மாநகராட்சி அடையாறு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; ரூ.1.20 லட்சம் பணம் பறிமுதல்

    சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மாநகராட்சி ஐ.டி. கார்டை போலியாக தயாரித்து அலுவலகத்தில் இருந்த கார்த்திகேயன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் மாநகராட்சி மண்டல அலுவலர் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் கார்த்திகேயன், ஒப்பந்த அடிப்படையில் அங்கு வேலை செய்வது தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தங்களுடையது இல்லை என்றும் மாநகராட்சி அலுவலர் புகாரில் தெரிவித்துள்ளார்.



  • Dec 24, 2024 16:29 IST
    நடிகர் அல்லு அர்ஜுனின் தனிப் பாதுகாவலர் ஆண்டனி கைது

     நடிகர் அல்லு அர்ஜுனின் தனிப் பாதுகாவலர் ஆண்டனி கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 பட ரிலீஸின்போது அல்லு அர்ஜுனைக் சத்யம் திரையரங்கில் காண வந்த ரசிகர்களைத் தள்ளிவிட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.



  • Dec 24, 2024 16:25 IST
    ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த அதிகாரியைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு

    ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த என்.சி.பி அதிகாரி ஞானேஸ்வர் சிங்கை மத்திய அரசு திரும்பப் பெற்றது. தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் திரும்ப பெறப்பட்டார். 



  • Dec 24, 2024 16:21 IST
    டிசம்பர் 27-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். டிசம்பர் 27-ம் தேதி செனனி வரும் அமித்ஷா, டிசம்பர் 28-ல் ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். அங்கே மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் அமித்ஷா டெல்லி திரும்புகிறார்.



  • Dec 24, 2024 16:17 IST
    அல்லு அர்ஜுனிடம் 3 மணி நேரம் போலீஸ் விசாரணை நிறைவு

    தெலங்கான நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் 3 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி 20 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். புஷ்பா 2 திரைப்படத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையில், வழக்கில் கைது செய்யபட்ட அல்லு அர்ஜுன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.



  • Dec 24, 2024 15:29 IST
    இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க உறுதியை வலுப்படுத்தட்டும் - ஆளுநர் ஆர்.என். ரவி கிறிஸ்துமஸ் வாழ்த்து

    ஆளுநர் ஆர்.என். ரவி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கிறிஸ்துமஸ் நாளின் விசேஷமிக்க கொண்டாட்டத்தில் அன்பான நல்வாழ்த்துகள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Dec 24, 2024 15:21 IST
    மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை; ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

    “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



  • Dec 24, 2024 14:41 IST
    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது. 

    போட்டிகளில் பங்கேற்கும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக் கூடாது. காளைகளுக்குத் தேவையற்ற வலி மற்றும் கொடுமைகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 

    தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ள குழு நிகழ்ச்சியின் போது உடனிருந்து அறிக்கை அளிக்க வேண்டும். 

    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் செயலாக்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசின் முதன்மை செயலர் சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். 



  • Dec 24, 2024 13:55 IST
    ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக் கூடாது

    ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக் கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி சுற்றறிக்கை அனுப்பு உள்ளார். 

    "பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை தவிர்க்க வேண்டும். பாத பூஜை தொடர்பான புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை பாயும்" எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

     



  • Dec 24, 2024 13:54 IST
    அதிகாரம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாத அரசு- அன்புமணி

    "அதிகாரம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாத திராவிட மாடல் திமுக அரசு. வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த தரவுகளை சேகரிக்க உத்தரவு. வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. 

    வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்கனவே முதல்வர் உறுதி அளித்தார்.  சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என முதல்வர் தற்போது சொல்கிறார் என அன்புமணி ராமதாஸ் பேசினார். 

    வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்காத  தி.மு.க அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் பா.மக போராட்டம் நடத்தி வருகிறது. 



  • Dec 24, 2024 12:53 IST
    பெரியார் நினைவு நாள் -விஜய் மரியாதை

    பெரியார் உருவப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் பெரியார் உருவப் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட பதிவில், "அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம். பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிப்போம். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சம உரிமை கிடைக்க பாடுபட்டவர் பெரியார்" என்று கூறியுள்ளார். 



  • Dec 24, 2024 12:22 IST
    மோடி உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

    டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடியை சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஆளுநர் தரப்பு விளக்கம் கூறியுள்ளது. 

    பிரதமரும் ஆளுநரும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதாக தகவல். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினை குறித்து எடுத்துரைத்ததாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. 



  • Dec 24, 2024 11:32 IST
    அல்லு அர்ஜுன் விசாரணைக்கு ஆஜர்

    தெலங்கானாவில் உள்ள சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் விசாரணைக்கு ஆஜரானார். புஷ்பா 2 படம் வெளியீட்டின்போது திரையரங்கில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் விசாரணைக்கு ஆஜரானார்.



  • Dec 24, 2024 11:30 IST
    'கிறிஸ்டோஃப்ர் நோலன் இயக்கும் அடுத்த படத்திற்கு 'THE ODYSSEY' என பெயரிடப்பட்டுள்ளது

    'கிறிஸ்டோஃப்ர் நோலன் இயக்கும் அடுத்த படத்திற்கு 'THE ODYSSEY' என பெயரிடப்பட்டுள்ளது. புதிய ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட உள்ள இப்படம் ஜூலை 17, 2026 இல் வெளியாகும் என யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.



  • Dec 24, 2024 11:06 IST
    புதுச்சேரியில் நெடுந்தூரம் செல்லும் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வு அமல்

    புதுச்சேரியில் நெடுந்தூரம் செல்லும் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டது. டீலக்ஸ் பேருந்துகளில் 10 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 



  • Dec 24, 2024 11:04 IST
    "இந்த கைத்தடி ஒன்றே போதும்" - ஸ்டாலின்

    தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நடைபெறும் விழாவில் கி.வீரமணி பரிசாக வழங்கிய கைத்தடியை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.



  • Dec 24, 2024 11:04 IST
    எம்ஜிஆர் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை

    சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை செய்தார். 



  • Dec 24, 2024 10:31 IST
    பெரியார் பகுத்தறிவு நூலகம் - முதல்வர் திறந்துவைப்பு

    சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவு டிஜிட்டல் நூலகத்தை முடல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எணினி நூலகம் ஆய்வு மையம் திறக்கப்பட்டது.



  • Dec 24, 2024 09:55 IST
    சென்னையில் மழை நிலவரம்

    சென்னையில் எழும்பூர், சேப்பாக்கம், அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.



  • Dec 24, 2024 09:53 IST
    மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயக்கம்

    தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.



  • Dec 24, 2024 09:48 IST
    முதலமைச்சர் மரியாதை

    சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 



  • Dec 24, 2024 09:46 IST
    “தந்தை பெரியாரின் நினைவைப் போற்றுவோம்!” -உதயநிதி ஸ்டாலின்

    ”எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்” என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று. சமூகநீதி, மதசார்பின்மை காக்க - மூடநம்பிக்கஒ ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம். பெரியாரின் நினைவைப் போற்றுவோம்” உதயநிதி ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.



  • Dec 24, 2024 09:22 IST
    பெரியாரின் நினைவு நாள்

    தந்தை பெரியாரின் நினைவுநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது முழுஉருவச் சிலைக்கு எம்.பி. துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



  • Dec 24, 2024 08:44 IST
    உயர்ரக கஞ்சா பறிமுதல்

    தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 3.6 கோடி மதிப்புடைய உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு பயணியையும் கைது செய்து சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.



  • Dec 24, 2024 08:15 IST
    மருத்துவ கழிவுகள் அகற்றும் பணி நிறைவு

    நெல்லையில் 2 நாட்களாக நடைபெற்று கேரள மருத்துவ கழிவுகள் அகற்றும் பணி நிறைவடைந்தது. 30 லாரிகளில் கேரளாவுக்கு மருத்துவ கழிவுகள் எடுத்து செல்லப்பட்டன.



  • Dec 24, 2024 08:11 IST
    ஷியாம் பெனகல் காலமானார்

    பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல்  தனது 90 ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.



  • Dec 24, 2024 08:09 IST
    மகாதீப கொப்பரை இறக்கம்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவையொட்டி தீபமலை உச்சியிலிருந்து மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்து, எடுத்துச்செல்லப்பட்டது.



  • Dec 24, 2024 08:08 IST
    அரசுத் தேர்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி: பிரியங்கா கண்டனம்

    அரசுத் தேர்வு விண்ணப்பங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிப்பதாக மத்திய அரசுக்கு பிரியங்கா  காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் சமர்ப்பித்தபின் தேர்வு நடக்காவிட்டால் ஜிஎஸ்டி வீணாகும். இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது என்றும் காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி கூறினார்.



  • Dec 24, 2024 07:36 IST
    “பெரியாரின் நினைவு நாளில் புகழை போற்றுவோம்” - அமைச்சர் கே.என்.நேரு

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் புகழை போற்றுவோம். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என சுயமரியாதை போட்பாட்டை விதைத்தவர் பெரியார் என அமைச்சர் கே.என்.நேரு நினைவு கூர்ந்தார்.



  • Dec 24, 2024 07:31 IST
    ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' -கூட்டம்

    ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜன.8ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 24, 2024 07:30 IST
    தமிழகம் நோக்கி நகர்கிறது

    தமிழகத்தை நோக்கி நகரும் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. வரும் டிசம்பர் 29 ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Dec 24, 2024 07:27 IST
    மழை நிலவரம்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



  • Dec 24, 2024 07:27 IST
    தேர்தல் ஆணையத்திற்கு பிஜூ ஜனதா தளம் கடிதம்!

    ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது என தேர்தல் ஆணையத்திற்கு பிஜூ ஜனதா தளம் கடிதம் எழுதியுள்ளது.



  • Dec 24, 2024 07:23 IST
    மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ இயக்கப்படுகிறது. டோல்கேட் - விம்கோ நகர் டிப்போ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. விம்கோ நகர் விமான நிலைய வழித்தடத்தில் 6 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. செண்ட்ரல் - விமான நிலைய வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.



news updates Live News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment