பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று விலையில் சற்று மாற்றம் உள்ளது. அந்தவகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61 காசுக்கும் விற்பனையாகிறது.
PSLV - C 60 ராக்கெட்: PSLV C60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, பி செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jan 01, 2025 05:33 ISTபுதிய நம்பிக்கையையும்,வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும்,வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Jan 01, 2025 05:33 ISTமலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம் - விஜய் புத்தாண்டு வாழ்த்து
நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள் தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jan 01, 2025 00:05 ISTபிறந்தது புத்தாண்டு 2025: தமிழ்நாடு முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டம்
புத்தாண்டு 2025 பிறந்தது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம், வேலூர், திருச்சி என அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
-
Dec 31, 2024 23:35 ISTபுத்தாண்டை வரவேற்க களைகட்டிய பெசண்ட் நகர் கடற்கரை
புத்தாண்டை வரவேற்பதற்காக சென்னை பெசண்ட் நகர் கடற்கரைக்கு மக்கள் அதிகளவில் வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Dec 31, 2024 23:33 ISTஅஜித்தின் விடாமுயற்சி பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளி வைப்பு - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக லைகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். சில தவிரக்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது. மேலும், இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 31, 2024 23:24 ISTபுத்தாண்டு: சென்னையில் கடற்கரைகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்
புத்தாண்டையொட்டி, சென்னை கடற்கரைகளில் தடுப்புகள் அமைத்து வாகன கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முக்கிய இடங்க்ளில் குற்றங்களைத் தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
Dec 31, 2024 21:49 ISTதேசத்தின் நிலையான முன்னேற்றத்திற்கு பங்களிப்பு வழங்குவோம் - ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள்; 2025-ம் ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் வளத்தையும் கொண்டுவரட்டும். சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம்” என்று கூறினார்.
-
Dec 31, 2024 21:37 ISTபுத்தாண்டு சென்னை காமராஜர் சாலை மூடல்
புத்தாண்டையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள், போக்குவரத்திற்கு தடை ய்யப்பட்டு இரவு முழுவதும் மூடப்படுகிறது. புத்தாண்டையொட்டி போர் நினைவுச் சின்னம் முதல் பட்டினம்பாக்கம் ஜங்ஷன் வரை காமராஜர் சாலை மூடப்பட்டுள்ளது.
-
Dec 31, 2024 20:41 ISTபாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் முற்போக்குப் பாதையில் பயணிப்போம் - உதயநிதி புத்தாண்டு வாழ்த்து
பிறக்கின்ற 2025 புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் புத்தொளி வீசட்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பிறக்கின்ற 2025 புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் புத்தொளி வீசட்டும். கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ஆம் ஆண்டிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும். 2026-இல், 7-ஆவது முறையாக கழக ஆட்சி அமைந்திட 2025-இன் ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம். தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் - சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்கிற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 31, 2024 19:44 ISTபுதிய வாய்ப்புகள், வழிகள் 2025-ல் நம் முன்னே நிறைந்திருக்கிறது - அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய வாய்ப்புகள், வழிகள் 2025-ல் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. “இருட்டில் இருந்து தமிழக மக்கள் மீண்டு வருவர் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை எதிர்கொள்வோம், தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம், தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பா.ஜ.க சார்பாக, இனிய 2025 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைட் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
Dec 31, 2024 18:59 ISTஆஸ்திரேலியாவில் பிறந்தது புத்தாண்டு
ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. 2025-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த நிலையில், மக்கள் பலரும் பரஸ்பர வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். மேலும், வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை ஆஸ்திரேலிய மக்கள் வரவேற்றனர்.
-
Dec 31, 2024 18:56 IST"காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது": சீமான்
காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். தனது கைது நடவடிக்கை தேவையற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே இடத்தில் பல்வேறு போராட்டத்தை நடத்திய நிலையில், இன்று மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Dec 31, 2024 18:37 ISTகைதான சீமான் விடுதலை
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்ட சீமான் விடுதலை செய்யப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக சீமான் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
-
Dec 31, 2024 18:02 ISTபொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வரும் 9-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. விடுமுறை தினமாக ஜனவரி 3 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 31, 2024 17:49 ISTராபின் சர்மா நிறுவனத்துடன் தி.மு.க ஒப்பந்தம்
2026 சட்டமன்ற தேர்தல் யுக்திகளை வகுக்க ராபின் சர்மா நிறுவனத்துடன் தி.மு.க ஒப்பந்தம் செய்துள்ளது. ராபின் சர்மாவின் showtime consultancy என்ற நிறுவனம், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கும், மகாராஷ்டிராவில் சிவ்சேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவுற்கும் தேர்தல் யுக்திகளை வகுத்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dec 31, 2024 17:30 ISTதொழில்வரி உயர்வுக்கு இ.பி.எஸ் கண்டனம்
சென்னைவாழ் மக்களுக்கு மாநகராட்சி சார்பில் சுமார் 35 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள தொழில் வரிக்கு, எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால், ஏறத்தாழ 75 சதவீத மக்கள் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
Dec 31, 2024 17:10 IST9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இரவு 7 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 31, 2024 16:50 ISTபனையூர் அலுவலகத்தில் 9 மாவட்ட செயலாளர்களை சந்தித்த அன்புமணி
சென்னை பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் 9 மாவட்ட செயலாளர்களை பா.ம.க தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார்
-
Dec 31, 2024 16:48 ISTநியூசிலாந்தில் பிறந்தது - 2025
நியூசிலாந்தில் ஆங்கில புத்தாண்டு 2025 பிறந்தது. வான வேடிக்கைகளுடன் 2025 ஆங்கில புத்தாண்டை மக்கள் வரவேற்று வருகின்றனர்
-
Dec 31, 2024 16:32 ISTபொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகுவதில் தாமதம் நிலவுகிறது. வரும் பொங்கல் வரை மிதமான மழையும், ஒருசில இடங்களில் குறிப்பாக தெற்கு பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Dec 31, 2024 15:58 ISTஅச்ச உணர்வை ஏற்படுத்துகிறார் இ.பி.எஸ் – அமைச்சர் ரகுபதி
அரசியல் இருப்பைக் காட்ட மாணவிகளிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. அரசிடம் நேர்மையும், உண்மையும் இருப்பதால் தான் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் அமைச்சர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் வெளிப்படையாக பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து விரைவான நீதியை இந்த அரசு பெற்று தரும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
-
Dec 31, 2024 15:56 ISTஅரசுப் பணிக்காக இந்த ஆண்டு 10,701 பேர் தேர்வு – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
இந்த ஆண்டு 10,701 பேர் பல்வேறு துறை சார்ந்த அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது
-
Dec 31, 2024 15:33 ISTவடகிழக்கு பருவமழை 33 சதவீதமும் பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை 18 சதவீதமும், வடகிழக்கு பருவமழை 33 சதவீதமும் பெய்துள்ளது. ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 1,171 மீட்டர் மழை பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Dec 31, 2024 15:14 ISTநேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை
ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்
-
Dec 31, 2024 14:28 IST"கான்கிரீட் காடாக மாறியுள்ள சென்னை"
"விதிமீறல் கட்டிடங்களால் சென்னை மாநகரம் கான்கிரீட் காடாக மாறிவிட்டது". கட்டிட விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.
-
Dec 31, 2024 14:18 ISTபுத்தாண்டிற்கு முன்னே சென்னையில் விதிமுறைகள்.
புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னை கடற்கரைகளில் பலத்த பாதுகாப்பு. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். இன்று மாலை முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளில் குளிக்க தடை. கடல்நீரில் பொதுமக்கள் இறங்காதவாறு தடுப்புகள் அமைப்பு. கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்களை தவிர்க்க உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு. மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.
-
Dec 31, 2024 13:59 ISTசென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்
சென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டையில் ஆய்வகம் அமைத்து போதைப்பொருள் தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 17.8 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - 10 பேர் கைது. தொடர்ந்து ஹரியானா, டெல்லி, மணிப்பூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார்.
-
Dec 31, 2024 13:46 ISTசென்னை வானிலை ஆய்வு மையம்
"சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்.
-
Dec 31, 2024 13:44 ISTஅதானி ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து - பாமகவுக்கு வெற்றி.
அதானி குழுமத்துக்கு வழங்கப்படவிருந்த ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: “தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தம் அதானி குழும நிறுவனத்திற்கு வழங்கப்படவிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருப்பது, மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வசூலிக்கப்படும் மின் கட்டணத்தின் பெரும் பகுதி அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்படவிருந்தது தடுக்கப்பட்டிருப்பதும், அதற்காக பங்காற்றியதும் மகிழ்ச்சியளிக்கிறது." என்று தெரிவித்தார்.
-
Dec 31, 2024 13:38 ISTபொங்கல் பரிசு டோக்கன் எப்போது வினியோகம்? - தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டது. மேலும் இதனால் அரசுக்கு ரூ. 249.76 கோடி செலவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 31, 2024 13:30 ISTமாற்றுத்திறனாளி இளைஞர் கொடூர கொலை
தாம்பரம் சேலையூர் அருகே காய், கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் கழுத்தறுத்து கொலை. மப்பேடு ஆலப்பாக்கம் சாலையோரம் காலியிடத்தில் அந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வை பேச முடியாத மாற்றுத்திறனாளியான சூர்யாவை இப்படி கொலை செய்தது யார் என்று போலீஸ் தீவிர விசாரணை.
-
Dec 31, 2024 12:57 ISTஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
"புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்! தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்! " என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
-
Dec 31, 2024 12:31 ISTகண்ணாடி இழை பாலம் தி.மு.க திட்டமில்லை - இ.பி.எஸ்
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம், இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 3 உயர் பெண் அதிகாரிகள் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம். கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திட்டம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசு திட்டமான சாகர்மாலா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்துவதாக இருந்தது. கொரோனா காலம் என்பதாலும், சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆனதாலும் நிறைவேறாமல் போனது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
Dec 31, 2024 12:03 ISTஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது
சென்னையில் தடையை மீறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார்.
அண்ணா பல்கலை. சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது செய்யப்ப்ட்டார்.
-
Dec 31, 2024 11:30 ISTஉட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தடையிட முடியாது - எடப்பாடி பழனிசாமி
உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தடையிட முடியாது. சின்னம் தொடர்பான பிரச்சனை இருக்கும் போது மட்டுமே தேர்தல் ஆணையம் தடையிட முடியும் என இரட்டை இலை விவகாரத்தை விசாரிக்கும் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
-
Dec 31, 2024 10:48 ISTமத்திய அரசிடம் விரைவில் அறிக்கை
"மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலை.யில் 2வது நாள் விசாரணைக்கு பின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தகவல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விவரங்களை கேட்டு அறிந்ததாக தெரிவித்தனர்.
-
Dec 31, 2024 10:45 ISTதமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 31, 2024 10:38 ISTசென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா பல்கலைக்கழ வன்கொடுமையைக் கண்டித்து போராட்டத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் போராட்டத்திற்கு வருமாறு சீமான் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
-
Dec 31, 2024 10:14 ISTஇந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, NEW என்ற அமைப்பு இணைந்து பணக்கார, ஏழை முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.931 கோடி இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.8 கோடி சொத்து மதிப்புடன் 14வது இடத்தில் உள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார்.
-
Dec 31, 2024 09:56 ISTசின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை சென்னை திருவான்மியூர் வீட்டில் தற்கொலை
2020 டிசம்பரில் பூந்தமல்லியில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது அவரது தந்தையும் சென்னை திருவான்மியூர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 31, 2024 09:44 ISTஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். ஜனவரி 16யில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார்.
-
Dec 31, 2024 09:32 ISTதிருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முக்குடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2ஆம் நாள் நிகழ்ச்சியாக திருக்குறள் கண்காட்சியைொடங்கி வைத்து வெள்ளி விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
Dec 31, 2024 09:09 IST“வயநாடு நிலச்சரிவு ஒரு அதி தீவிர இயற்கை பேரிடர்” - மத்திய அரசு
வயநாடு நிலச்சரிவை அடி தீவிர பேரிடராக அங்கீகரித்து கேரள அரசுக்கு கடிதம் ஒன்றை மத்திய அரசு அனுப்பியுள்ளது. பேரிடராக அறிவிக்கப்பட்டாளும் கேரள மாநிலத்துக்கான சிறப்பு நிவாரண நிதியுதவி குறித்து எந்த அறிவிப்பும் கடிதத்தில் குறிப்பிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மாநில பேரிடர் நிதியில் இருந்து அதற்கேற்ற இழப்பீடுொகையை வயநாடு பேரிடருக்கு பயன்படுத்தும்படி கடிதத்தில் தெரிவித்துள்ளது.
-
Dec 31, 2024 08:45 ISTஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்
ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் தங்க பல்லக்கில் நம்பெருமாள் புறப்பாடு வைர பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துமாலை உள்ளிட்ட ஆபரணங்கள் சூடி காட்சியளித்தார். ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.
-
Dec 31, 2024 08:32 ISTடிஎன்பிஎல் ஏலம்
பிப்ரவரி மாதம் டிஎன்பிஎல் ஏலம் துவங்குகிறது. டிஎன்பிஎல் தொடரில் 5 வீரர்களை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தக்க வைத்தது.
-
Dec 31, 2024 08:30 ISTபக்தர்கள் காணிக்கை எண்ணிக்கை
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.4.67 கோடி கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
Dec 31, 2024 08:28 IST16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்
சென்னை மாதவரம் அருகே 16 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த வாரம் மியான்மர் நாட்டிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.5 கோடி மதிப்புடைய போதைப்பொருள் கடத்தல் வடக்கில் வெங்கடேசன், கார்த்திக் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் தொடர்ச்சியாக தற்போது பின்னணியில் இருந்த போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை கண்டுபிடித்து 16 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
Dec 31, 2024 08:24 ISTமொபைல் செயலி மூலம் மோசடி - 9 பேர் கைது
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மொபைல் செயலி மூலம் மோசடியில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 லட்சம் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாமென ஆசைவார்த்தை கூறி மோசடி என பணத்தை இழந்த 50க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்ததையடுத்து 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி வழக்கில் தலைமறைவான முக்கிய நபர்கள் நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
Dec 31, 2024 08:20 IST6,720 டன் தங்கம் வைத்துள்ள தமிழ்நாட்டு பெண்கள்
இந்திய பெண்களிடம் சுமார் 24,000 டன் தங்கம் உள்ளதாகவும் இதில் தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,270 டன் தங்கம் உள்ளதாகவும் உலக கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் 40% தென்னிந்திய பெண்களிடம் உள்ளது.
-
Dec 31, 2024 08:06 ISTஎஸ்.வி.சேகர் பரபரப்பு புகார்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டதை விமர்சித்ததால், பாஜகவினர் மிரட்டல் விடுப்பதாக எஸ்.வி.சேகர் புகாரளித்துள்ளார். “2026 தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது” எனவும் பேட்டி அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.