Advertisment

Chennai News Highlights: வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று தொடக்கம்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Srirangam Vaikuntha Ekadashi Srirangam Sri Ranganatha Swamy Temple sorgavasal thirappu 2020 date- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

பொங்கல் பரிசு தொகுப்பு: குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 9 முதல் சுழற்சி முறையில் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Dec 29, 2024 23:52 IST

    மாலில் போராடிய அ.தி.மு.க-வினருக்கு அண்ணாமலை பாராட்டு 

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில், ‘யார் அந்த சார்?’ என்ற பதாகைகளை ஏந்தி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர்.  “பிரச்னையைக் கையில் எடுத்து முக்கியமான கேள்வியைக் கேட்ட அதிமுக-வுக்கு பாராட்டுகள் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.



  • Dec 29, 2024 23:48 IST

    மலையாள நடிகர் திலீப் சங்கர் சடலமாக மீட்பு

    மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. உடலை மீட்ட போலீசார், நடிகர் திலீப் சங்கர் மரணம் குறித்து விசாரணை
    நடத்தி வருகின்றனர்.



  • Advertisment
    Advertisement
  • Dec 29, 2024 22:59 IST

    56 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

    தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 7 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி-யாகவும், ஏ.டி.ஜி.பி வெங்கட்ராமனுக்கு நிர்வாகப் பிரிவு சிறப்பு டி.ஜி.பி-யாகவும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Dec 29, 2024 21:35 IST

    பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு இடம்பெற வேண்டும் - விஜய் சேதுபதி வலியுறுத்தல்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும். காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன்; இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன்.’என்று கூறினார்.



  • Dec 29, 2024 20:59 IST

    மாணவி பாலியல் வன்கொடுமை: யார் அந்த சார்? சென்னை எக்ஸ்பிரஸ் மாலில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்க்கொடுமை சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் யார் அந்த சார்? என்ற பதாகைகளை கையில் ஏந்தி அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Dec 29, 2024 20:53 IST

    தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    தமிழக பிரிவை சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, முதன்மை செயலாளர்களாக அந்தஸ்து அளவில் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டி.என்.வெங்கடேஷ், பி.உமாநாத், ராஜேந்திர ரத்னு, ஆர்.லால்வேனா, ஆர்.கிர்லோஷ் குமார் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.



  • Dec 29, 2024 20:48 IST

    சாதி ஒழிப்புக்காக தலைவர், மகன், பேரன் என அனைவரையும் ஏற்றுக்கொள்வோம் - ஆ.ராசா

    ரம்பலூரில் நடந்த தி.மு.க ஆதி திராவிடர் நலக்குழு  ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு: “சாதி ஒழிப்புக் கொள்கையைக் கொண்ட அம்பேத்கரையும் பெரியாரையும் தாங்கி நிற்கும் குடும்பமாக கருணாநிதி குடும்பம் உள்ளது. சாதி ஒழிப்புக்காக கழகத்தின் தலைவனாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் பேரனாக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்வோம். சாதி ஒழிப்புக்கென ஒரு குடும்பத்தை விரும்புகிறோம். பாரபட்சம் பார்க்காத ஒரு அரசியல் குடும்பத்தை விரும்புகிறோம். அதே போல், வேறு குடும்பத்தைக் காட்டச் சொல்லுங்கள், அதுவரை இந்த குடும்பம் ஆட்சி செய்யும்.” என்று கூறினார்.



  • Dec 29, 2024 19:51 IST

    பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் 

    பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரப்படாததன் காரணம் குறித்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார், “கடந்த ஆண்டு, புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரீடர்களுக்காக மாநில நிதியிலிருந்து செலவிட்டிருக்கிறோம். ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே ஒன்றிய அரசு தந்தது. ஒன்றிய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது. பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐ பொங்கலுக்கு முன்பாக வழங்க பரிசீலிக்கிறோம் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.



  • Dec 29, 2024 19:12 IST

    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா; சென்னையில் 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு 

    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா சென்னையில் 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மற்றும் டிசம்பர் 31-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.



  • Dec 29, 2024 17:35 IST

    கண்ணாடி பாலம் - ஸ்டாலின் பெருமிதம்

    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பாறைக்கும், விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இது தான் கடலுக்கு நடுவே அமைக்கப்பட்ட முதல் கண்ணாடி பாலம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த பாலத்தை நாளை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.



  • Dec 29, 2024 16:53 IST

    "திருவள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் அல்ல": ஸ்டாலின்

    திருவள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் அல்ல என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதி தத்துவத்தை வழங்கிய பேராசான் தான் திருவள்ளுவர் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • Dec 29, 2024 15:46 IST

    "பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது"

    பிள்ளைகளை பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிய விஷயம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மதுரையில் 'விண்ணில் விஞ்ஞானத் தேடல்' என்ற நிகழ்வை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



  • Dec 29, 2024 15:20 IST

    மாணவி வன்கொடுமை- சிறப்பு குழுவின் விசாரணை தொடக்கம்

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், சிறப்பு குழுவின் விசாரணை தொடங்கியுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி என விசாரணை தொடங்கியுள்ளது.



  • Dec 29, 2024 15:14 IST

    அண்ணா பல்கலை வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - நிர்வாகக் குழு

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" முழு கண்காணிப்புடன் காவலர்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது



  • Dec 29, 2024 14:45 IST

    ’புதுமைப் பெண்' திட்டம் ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து!

    'புதுமைப் பெண்' திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை வரவேற்று முதலமைச்சரைப் பாராட்டுகிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்



  • Dec 29, 2024 14:16 IST

    பா.ம.க ஒரு ஜனநாயக கட்சி, பொதுக்குழுவில் காரசாரமான விவாதம் நடப்பது சகஜம் - அன்புமணி ராமதாஸ்

    கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது'. கட்சியின் வளர்ச்சி, வரும் சட்டமன்ற தேர்தல், அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. பாமக ஒரு ஜனநாயக கட்சி, பொதுக்குழுவில் காரசாரமான விவாதம் நடப்பது சகஜம். பொதுக்குழுவில் நடந்தது எங்கள் உட்கட்சி பிரச்சினை, இதைப்பற்றி யாரும் விவாதிக்க வேண்டாம் என தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடனான சந்திப்புக்கு பிறகு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார்



  • Dec 29, 2024 13:31 IST

    தூத்துக்குடி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

    அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தென்மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் முலம் தூத்துக்குடி சென்றடைந்தார். வாகைக்குளம் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்



  • Dec 29, 2024 13:14 IST

    ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு

    கருத்து முரண் ஏற்பட்ட நிலையில் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸை பா.ம.க தலைவர் அன்புமணி சந்தித்து பேசி வருகிறார்



  • Dec 29, 2024 12:57 IST

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் - எல்.முருகன்

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என கோயம்பேட்டில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். அப்போது மல்யுத்த வீராங்கனை பாலியல் துன்புறுத்தல், பில்கிஸ் பானோ வழக்குகளில் பா.ஜ.க ஏன் சாட்டையடி நிகழ்வோ, சிறப்பு விசாரணையோ நடத்தவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அந்த வழக்குகள் அந்தந்த மாநிலங்களில் விசாரணை நடந்து நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் இது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் பணியை நாங்கள் செய்கிறோம் என எல்.முருகன் பதில் அளித்தார்



  • Dec 29, 2024 12:39 IST

    அரசு உதவி வழக்கு நடத்துனருக்கு பிப்.,22ம் தேதி மறு தேர்வு- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

    அரசு உதவி வழக்கு நடத்துனருக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி மறு தேர்வு நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற தேர்வு தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்படுகிறது என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது



  • Dec 29, 2024 12:11 IST

    வட மாநிலத்தவர்களுடன் மோதல் - 3 காவலர்கள் சஸ்பெண்ட்

    மேட்டூர் அருகே, தமிழக போலீசார் - வட மாநிலத்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் காரைக்காடு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த மதுவிலக்கு பிரிவை சேர்ந்த மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



  • Dec 29, 2024 11:51 IST

    பாரம்பரிய முறைப்படி ஆர்ப்பாட்டம்

    மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பாரம்பரிய முறைப்படி கும்மிக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



  • Dec 29, 2024 11:18 IST

    ஆஞ்சநேயர் ஜெயந்தி - சிறப்பு ஏற்பாடு

    நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி, நாமக்கல் நகரில் உள்ள 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில், நெரிசலின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் நாளை ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலையும் மூலவர் சிலைக்கு சாற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது



  • Dec 29, 2024 11:17 IST

    நெல்லை மாரத்தான்

    The Federal மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய நெல்லை மாரத்தான் 2024 ஆண்களுக்கான போட்டியை ஸ்காட் கல்வி குழுமத்தின் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளி தாளாளர் செல்வகுமார் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.



  • Dec 29, 2024 11:17 IST

    ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா - நூல் வெளியீடு

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் ‘நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்' என்ற கவிதை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 



  • Dec 29, 2024 11:12 IST

    விமான விபத்து - பலி எண்ணிக்கை 96ஆக உயர்வு

    தென் கொரிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளனர்.



  • Dec 29, 2024 10:36 IST

    வாழ்த்து பெற வந்திருக்கிறோம் - முதல்வர்

    ஐயா நல்லக்கண்ணுவிடம் வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளோம். அவரின் வாழ்த்தை விட மிகப்பெரிய ஊக்கம் எதுவும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான நல்லகண்ணுக்கு பழ.நெடுமாறன் நடத்தும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.



  • Dec 29, 2024 10:15 IST

    யார் அந்த சார்?

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



  • Dec 29, 2024 09:54 IST

    விமான விபத்தில் 179 பேர் பலி

    தென் கொரிய விமான விபத்தில் இரண்டு பேர் தவிர 179 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.



  • Dec 29, 2024 09:41 IST

    ஜிஎஸ்டி உயர்வு - அண்ணாமலையை விமர்சித்து போஸ்டர்

    மதுரை உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலையை விமர்சித்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு அண்ணாமலை எப்போது சாட்டையால் அடித்து கொள்வார் என போஸ்டரில் அச்சடிக்கப்பட்டுள்ளது.



  • Dec 29, 2024 09:17 IST

    நாட்காட்டி வெளியீடு

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான நாட்காட்டியை அமைச்சர் சேகர்பாபு இன்று வெளியிட்டார்.



  • Dec 29, 2024 09:09 IST

    விமான விபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு

    தென் கொரியாவில் 181 பேருடன் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்து எரிந்ததில் பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.



  • Dec 29, 2024 08:41 IST

    டைடல் பார்க் திறப்பு விழா

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நியோ டைடல் பூங்காவை இன்று (டிச.29) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.



  • Dec 29, 2024 08:39 IST

    தந்தை மகன் மோதல் - காலை 11 மணிக்கு சந்திப்பு

    பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி இடையே நடந்த வார்த்தை மோதல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை, அன்புமணி சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Dec 29, 2024 08:35 IST

    "நடிகை கார் மோதி மெட்ரோ பணியாளர் பலி"

    மும்பையில் நடிகை ஊர்மிளாவின் கார் மோதி மெட்ரோ பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். நடிகை ஊர்மிளாவும் மற்றொரு மெட்ரோ பணியாளரும் காயமடைந்த நிலையில் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Dec 29, 2024 08:06 IST

    இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்காக 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.



  • Dec 29, 2024 07:52 IST

    காலை 10 மணி வரை மழை

    கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 29, 2024 07:50 IST

    உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை

    அமெரிக்காவில் நடைபெற்ற உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ஜரீன் சுகந்தரை வீழ்த்தி இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.



  • Dec 29, 2024 07:47 IST

    நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-60

    பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை இரவு ஸ்ரீ ஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய இரண்டாவது தளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது. ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று இரவு தொடங்குகிறது.



  • Dec 29, 2024 07:45 IST

    பொங்கல் பரிசு - அதிமுக ஐடி விங் விமர்சனம்

    பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. கிள்ளிக் கொடுக்கக்கூட மனமில்லாத அரசு என எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளது.



  • Dec 29, 2024 07:40 IST

    விமான விபத்தில் 23 பேர் உயிரிழப்பு

    தென்கொரியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 23 பேரி பரிதாபமாக உயிரிழந்தனர்.  தாய்லாந்தில் இருந்து 175 பயணிகள், 6 விமான பணியாளர்களுடன்ென்கொரியா திரும்பிய விமானம் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ள என கூறப்படுகிறது.



  • Dec 29, 2024 07:38 IST

    பிரதமருக்கு உலக செஸ் சாம்பியன் பரிசு..!

    இளவயது உலக செஸ் சாம்பியனுமான குகேஷை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார். டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது தாம் கையெழுத்திட்ட செஸ் போர்டை பிரதமருக்கு நினைவு பரிசாக குகேஷ் வழங்கினார்.



  • Dec 29, 2024 07:35 IST

    புத்தாண்டு கொண்டாட்டம் - கட்டுப்பாடுகள்

    சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.வரும் 31ஆம் தேதி மாலை முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை கடலில் குளிக்கவோ,இறங்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். 



Tamil News Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment